இது இந்தியாடா... ஆம்புலன்சுக்கு அழகாய் வழி கொடுத்த போராட்டக்காரர்கள்... புல்லரிக்க வைக்கும் வீடியோ!

ஆயிரக்கணக்கானோர் குழுமியிருந்த போராட்ட கூட்டத்தில் புகுந்த ஆம்புலன்சுக்கு அழகாய் வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. புல்லரிக்க வைக்கும் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இது இந்தியாடா... ஆம்புலன்சுக்கு அழகாய் வழி கொடுத்த போராட்டக்காரர்கள்... புல்லரிக்க வைக்கும் வீடியோ!

இந்தியாவில் பெரும்பாலான முக்கிய நகரங்களின் சாலைகள் மிகவும் குறுகலாக இருக்கின்றன. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு ஏற்ப சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுகிறதா? என கேட்டால், நிச்சயமாக இல்லை என்றுதான் பதில் சொல்ல வேண்டும். எனவே போக்குவரத்து நெரிசல் பிரச்னை தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

இது இந்தியாடா... ஆம்புலன்சுக்கு அழகாய் வழி கொடுத்த போராட்டக்காரர்கள்... புல்லரிக்க வைக்கும் வீடியோ!

இதுபோன்ற குறுகலான சாலைகளில், கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவும் சூழ்நிலைகளில், ஆம்புலன்ஸ் போன்ற அவசர கால வாகனங்கள் வந்து விட்டால், நிலைமை சிக்கலாகி விடும். ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஒருவரின் உயிரை காப்பாற்றுவதற்காக வேகமாக செல்கிறது. ஆம்புலன்ஸ் வாகனங்களை பொறுத்தவரை ஒவ்வொரு வினாடியும் முக்கியமானது.

இது இந்தியாடா... ஆம்புலன்சுக்கு அழகாய் வழி கொடுத்த போராட்டக்காரர்கள்... புல்லரிக்க வைக்கும் வீடியோ!

ஒரு வினாடி தாமதம் கூட மோசமான பின் விளைவுகளை உண்டாக்கலாம். எனவே ஆம்புலன்ஸ்கள் அவசரமாக வந்தால் வழி விடுவது நம் அனைவரின் கடமை. அவசரமாக செல்லும் ஆம்புலன்ஸ்களை எக்காரணத்தை கொண்டும் யாரும் தடுக்க கூடாது. ஆனால் ஒரு சிலர் தெரிந்தோ தெரியாமலோ ஆம்புலன்ஸ் செல்வதற்கு இடையூறை ஏற்படுத்தி வருகின்றனர்.

இது இந்தியாடா... ஆம்புலன்சுக்கு அழகாய் வழி கொடுத்த போராட்டக்காரர்கள்... புல்லரிக்க வைக்கும் வீடியோ!

எனவே அவசர கால வாகனங்களுக்கு, குறிப்பாக ஆம்புலன்ஸ்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க போலீசார் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ்களுக்கு இடையூறு ஏற்படுத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்ட புத்தகத்தில் உள்ள விதிமுறைகளும், ஏற்பாடுகளும் போலீசாரை அனுமதிக்கின்றன.

இது இந்தியாடா... ஆம்புலன்சுக்கு அழகாய் வழி கொடுத்த போராட்டக்காரர்கள்... புல்லரிக்க வைக்கும் வீடியோ!

ஆம்புலன்ஸ்கள் செல்வதற்கு யாரும் இடையூறு ஏற்படுத்த கூடாது என்பதற்காக மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றர்.

இது இந்தியாடா... ஆம்புலன்சுக்கு அழகாய் வழி கொடுத்த போராட்டக்காரர்கள்... புல்லரிக்க வைக்கும் வீடியோ!

ஆனால் இதில் பல்வேறு நல்ல விஷயங்கள் இருக்கின்றன. சாலைகளில் அவசர கால வாகனங்களை 'பிளாக்' செய்பவர்களுக்கு எதிரான கடும் நடவடிக்கை அதில் ஒன்று. சாலையில் அவசர கால வாகனங்களுக்கு நீங்கள் இடையூறு ஏற்படுத்தினால், உங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இது இந்தியாடா... ஆம்புலன்சுக்கு அழகாய் வழி கொடுத்த போராட்டக்காரர்கள்... புல்லரிக்க வைக்கும் வீடியோ!

இருந்தபோதும் ஒரு சிலர் இன்னமும் போதிய விழிப்புணர்வு இல்லாமல் ஆம்புலன்ஸ்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். அதே சமயம் இன்னும் சிலரோ ஆம்புலன்ஸ்கள் வந்தால் உரிய முறையில் வழி ஏற்படுத்தி கொடுக்கின்றனர். ஒரு சில இடங்களில் ஆயிரக்கணக்கானோர் குழுமியிருக்கும் கூட்டங்களில் கூட ஆம்புலன்ஸ்கள் எளிதாக புகுந்து வந்து விடுகின்றன.

இது இந்தியாடா... ஆம்புலன்சுக்கு அழகாய் வழி கொடுத்த போராட்டக்காரர்கள்... புல்லரிக்க வைக்கும் வீடியோ!

இதற்கு அங்கிருப்போரின் மனித நேயமும், சமயோசித திறனுமே காரணம். இது தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வைரல் ஆவது உண்டு. இந்த வரிசையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ உண்மையில் பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைத்து விடும் என்பது உறுதி.

இது இந்தியாடா... ஆம்புலன்சுக்கு அழகாய் வழி கொடுத்த போராட்டக்காரர்கள்... புல்லரிக்க வைக்கும் வீடியோ!

இந்த வீடியோவில் ஆயிரக்கணக்கானோர் பேரணி சென்று கொண்டிருக்கின்றனர். அந்த சமயத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று அவ்வழியாக வருகிறது. ஆனால் இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு எவ்விதமான இடையூறையும் ஏற்படுத்தவில்லை. அனைவரும் அழகாக ஒதுங்கி கொண்டு, ஆம்புலன்ஸ் அந்த இடத்தை எளிதாகவும், விரைவாகவும் கடக்க வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் எங்களை பின்தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

இது இந்தியாடா... ஆம்புலன்சுக்கு அழகாய் வழி கொடுத்த போராட்டக்காரர்கள்... புல்லரிக்க வைக்கும் வீடியோ!

பேரணியில் பங்கேற்றவர்கள் ஆம்புலன்ஸ் எளிதாக கடக்க அனுமதித்த வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ ஒரு கட்டிடத்தின் பால்கனியில் இருந்து எடுக்கப்பட்டிருக்கலாம். பேரணியில் பங்கேற்றவர்களின் அழகான நடத்தையை இந்த வீடியோ நமக்கு காட்டுகிறது. மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் உள்ள அந்த வைரல் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது? என்ற உறுதியான தகவல் வெளியாகவில்லை. சரியான இடம் தெரியவில்லை என்றாலும், இது கேரள மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் என தெரிகிறது. அதேபோல் ஆயிரக்கணக்கானோர் எதற்காக அங்கே குழுமினார்கள்? இது என்ன சம்பவம்? என்பதும் உறுதியாக தெரியவில்லை.

இது இந்தியாடா... ஆம்புலன்சுக்கு அழகாய் வழி கொடுத்த போராட்டக்காரர்கள்... புல்லரிக்க வைக்கும் வீடியோ!

ஆனால் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற பேரணியின்போது இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் அதையும் உறுதிப்படுத்த முடியவில்லை. எவ்வாறாயினும் போராட்டம் செய்து கொண்டிருந்தபோது, ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு விரைவாக வழி ஏற்படுத்தி கொடுத்த அவர்களின் செயல் பாராட்டுக்குரியதுதான்.

இது இந்தியாடா... ஆம்புலன்சுக்கு அழகாய் வழி கொடுத்த போராட்டக்காரர்கள்... புல்லரிக்க வைக்கும் வீடியோ!

இதுபோன்ற வீடியோக்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளன. சாலையில் செல்லும்போது ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற அவசர கால வாகனங்கள் வந்தால், இனிமேல் கண்டிப்பாக வழி ஏற்படுத்தி கொடுங்கள். உங்களுக்கு ஏற்கனவே இந்த நல்ல குணம் இருந்தால் பாராட்டுக்கள். அதனை தொடர்ந்து பின்பற்றுங்கள்.

Article Published On: Sunday, January 5, 2020, 19:14 [IST]
English summary
Kerala - Protesters Clears Way For An Ambulance - Viral Video. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+