யுட்யூபில் சம்பாதித்த பணத்த வச்சு லக்சூரி பேருந்தை வாங்கிட்டாங்களா!.. கணவன்-மனைவி இருவரும் யுட்யூபரா!..

யுட்யூபர் ஒருவர் சொகுசு பேருந்தை வாங்கி இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரளாவைச் சேர்ந்த பிரபல யுட்யூபர் ஜிஸ்னு. வயநாடன் எனும் பெயரிலும் இவர் அறியப்படுகின்றார். பெரும்பாலான யுட்யூபர்கள் சொகுசு மற்றும் ஆடம்பர கார்களை வாங்கி வரும் நிலையில், இந்த யுட்யூபர் சற்றே வித்தியாசமாக லக்சூரி பேருந்தை வாங்கி இருக்கின்றார். யுட்யூப் நிறைய பேரின் வாழ்க்கையை மாற்றியிருப்பதாக நாம் கேள்விப்பட்டு இருப்போம். அந்த மாதிரியான ஓர் நபரே ஜிஸ்னு ஆவார். இவர் மட்டுமல்ல இவரின் மனைவியும் ஓர் யுட்யூபரே ஆவார்.

இருவருக்கும் ஃபாலோவர்கள் மிக அதிகம். அந்தவகையில், ஜிஸ்னு-வின் யுட்யூப் சேனலுக்கு 1.79 மில்லியன் ஃபாலோவர்கள் இருக்கின்றனர். இவரின் மனைவிக்கு 6.20 லட்சம் பேர் ஃபாலோவர்களாக இருக்கின்றனர். இத்தகைய அதிக பின் தொடர்பவர்களைக் கொண்டிருக்கும் யுட்யூப் ஜோடியே ஜிஸ்னு - த்ரிஷ்யா ஆவர்.

Wayanadan vlogger buys luxury bus

இவர்களே தற்போது ஆடம்பர பேருந்தை வாங்கி இருக்கின்றனர். இந்த பேருந்திலேயே இனி வரும் நாட்கள் இந்த ஜோடி டிராவல் விளாக் செய்ய திட்டமிட்டு இருக்கின்றது. மேலும், தங்களின் டிராவல் விளாக்-கிற்கு ஏற்றவாரு இந்த பேருந்தில் அவர்கள் மாற்றம் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், என்ன மாதிரியான மாற்றங்கள் எல்லாம் அதில் செய்யப்பட்டு இருக்கின்றது என்பது பற்றிய அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. இந்த பேருந்தையே தங்களின் வெளியூர் பயணங்களின் தங்கும் விடுதியாக பயன்படுத்த இருக்கின்றனர். ஆகையால், சகல வசதிகளைத் தாங்கிய சொகுசு பேருந்தாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த பேருந்திற்கே சமீபத்தில் கடம்புழா கோவிலில் வைத்து இந்த யுட்யூப் ஜோடிகள் பூஜை செய்து பயன்பாட்டில் இணைத்திருக்கின்றனர். பேருந்துக்கு பூஜை செய்யும் வீடியோவே தற்போது வெளியிடப்பட்டு இருக்கின்றது. விளாக் வீடியோக்களில் வரும் விளம்பரத்தால் கிடைக்கும் வருமானம் மற்றும் பிராண்டுகளை புரமோட் செய்வதனால் கிடைக்கும் வருமானம் என இரண்டையும் கொண்டே இந்த பேருந்தை இவர்கள் வாங்கியிருப்பதாக கூறப்படுகின்றது.

இவர்களின் இந்த கொள்முதலுக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். விரைவில் இந்த பேருந்து வாயிலாக அவர்கள் விளாக் செய்ய தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. பெரும்பாலான யுட்யூபர்கள் கார் அல்லது பைக் வாயிலாக விளாக் செய்து வரும்நிலையில், இந்த யுட்யூபர் பேருந்து வாயிலாக விளாக் செய்ய இருக்கின்றார் என்பது பலரும் வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

யுட்யூப் பலருக்கு படியளக்கக் கூடிய ஓர் தொழிலாகவே யுட்யூப் மாறிவிட்டது. படியளப்பது மட்டுமல்ல பலரின் ஆடம்பர வாழ்க்கைக்கே காரணமாக யுட்யூப் மாறியிருக்கின்றது. இதனால்தான், பலர் வேலையைகூட விட்டுவிட்டு யுட்யூப்பே கதி என மாறியிருக்கின்றனர். பலர் தங்களுடைய கெரியரையே யுட்யூபாகவும் மாற்றத் தொடங்கி இருக்கின்றனர். இதற்கு நாம் தற்போது பார்த்தது மாதிரியான சம்பவங்களும் ஓர் காரணமாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிராவல் விளாக் செய்வோரால் சில நேரங்களில் விபத்துகள் அரங்கேறுவதாகக் கூறி, வாகனங்களில் பயணித்துக் கொண்டே வீடியோ எடுப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஆகையால், விரைவில் வாகனங்கள் வாயிலாக விளாக் செய்வோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிடிஎஃப் வாசன் போன்ற யுட்யூபர்கள் கடந்த காலங்களில் மேற்கொண்ட விதிமீறல் சம்பவங்களாலேயே இந்த மாதிரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஃபாலோவர்களைக் கவர வேண்டும் என்பதற்காக சில நேரங்களில் இவர்கள் விதிமீறல் உள்ளிட்ட அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், அவர்களுக்கும் சக வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தான சூழல் ஏற்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, December 28, 2024, 23:19 [IST]
English summary
Kerala s famous wayanadan vlogger buys luxury bus more details
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+