ஃபேன்சி நம்பர் பிளேட் வாங்கிய ராசி!! அம்பானி, அதானியை ஓவர்டேக் பண்ணிட்டு போறாரு! ஒரே வாரத்தில் 2வது BMW பைக்

கேரளாவில் தொழிலதிபர் ஒருவர் தொடர்ச்சியாக விலையுயர்ந்த வாகனங்களை புதியது, புதியதாக வாங்கிக் கொண்டே இருக்கிறார். இதனாலேயே அவரை பற்றியும் அவர் வாங்கும் வாகனங்களை பற்றியும் அடிக்கடி நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் பார்த்து வருகிறோம். இந்த கேரள தொழிலதிபரின் பெயர், வேணு கோபாலகிருஷ்ணன் (Venu Gopalakrishnan) ஆகும். கொச்சியில் லிட்மஸ்7 (Litmus7) என்கிற பெயரில் ஐடி நிறுவனம் ஒன்றை நடத்திவரும் இவர் கடந்த சில மாதங்களில் மட்டும் பல்வேறு விலையுயர்ந்த கார்கள் மற்றும் பைக்குகளை வாங்கியுள்ளார். அந்த வரிசையில் அடுத்ததாக விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ (BMW) பைக்கை தற்போது வேணு கோபாலகிருஷ்ணன் வாங்கியுள்ளார்.

சுமார் ரூ.46 லட்சம் செலவு செய்து தனது லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) காருக்காக ஃபேன்சி நம்பர் பிளேட் (Fancy Number Plate)-ஐ வாங்கியதன் மூலம் இந்தியாவிலேயே ஃபேன்சி நம்பர் பிளேட்டிற்காக அதிக தொகையை செலவு செய்தவராக தொழிலதிபர் வேணு கோபாலகிருஷ்ணன் நாடு முழுவதும் பிரபலமாகினார்.

software company ceo bought bike

அதனை தொடர்ந்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce) கார் ஒன்றை இந்தியாவிலேயே முதல் ஆளாக வாங்கியவர், அதற்கடுத்த சில நாட்களிலேயே மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 (Mercedes-AMG G63) காரை வாங்கி அதிர வைத்தார். இத்துடன், வேணு கோபாலகிருஷ்ணனின் சமீபத்திய ஷாப்பிங் முடியவில்லை. கார்களில் இருந்து பைக்கிற்கு வந்தவர், சமீபத்தில் பிஎம்டபிள்யூ ஆர்1300 ஜி.எஸ்.ஏ (BMW R1300 GSA) பைக்கை வாங்கினார்.

இது தனது ஐந்தாவது பிஎம்டபிள்யூ பைக் என அப்போது கூறிய தொழிலதிபர் வேணு கோபாலகிருஷ்ணன், தற்போது தனது ஆறாவது பிஎம்டபிள்யூ பைக்காக பிஎம்டபிள்யூ எம்1000 எக்ஸ்.ஆர் (M1000 XR) பைக்கை வாங்கியுள்ளார். கொச்சியில் உள்ள பிஎம்டபிள்யூ ஷோரூமுக்கு வந்து வேணு கோபாலகிருஷ்ணன் பைக்கை டெலிவிரி பெற்று செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

software company ceo bought bike

இந்த வீடியோவில், தொழிலதிபர் வேணு கோபாலகிருஷ்ணனுக்கான எம்1000 எக்ஸ்.ஆர் பைக் மரப்பெட்டி ஒன்றில் இருந்து வெளியே கொண்டுவருவதை காணலாம். இதற்கு காரணம், எம்1000 எக்ஸ்.ஆர் பைக் ஆனது வெளிநாட்டில் உருவாக்கப்பட்டு, கப்பல் வழியாக இவ்வாறு மரப்பெட்டியில் வைத்து கொண்டுவரப்படுகிறது. இந்தியாவில் சில பிஎம்டபிள்யூ பைக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்றாலும், அவற்றுள் எம்1000 எக்ஸ்.ஆர் இல்லை.

ஷோரூமில் இருந்து பைக்கை டெலிவிரி பெற்றதும், அதனை வேணு கோபாலகிருஷ்ணன் சிறிய ரவுண்ட் கொண்டு செல்வதை வீடியோவில் காண முடிகிறது. பிஎம்டபிள்யூ எம்1000 எக்ஸ்.ஆர் பைக்கை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது நன்கு உயரமான தோற்றம் கொண்ட ஸ்போர்ட்ஸ்-டூரர் மோட்டார்சைக்கிள் ஆகும். இது இல்லாமல், பிஎம்டபிள்யூ எஸ்1000 எக்ஸ்.ஆர் என்கிற பைக்கும் விற்பனையில் உள்ளது.

software company ceo bought bike

இந்த எஸ்1000 எக்ஸ்.ஆர் ஆனது உலகளவில் பிரபலமான 1000சிசி பிஎம்டபிள்யூ பைக் ஆகும். ஆனால், அதனை காட்டிலும் பவர்ஃபுல்லானது எம்1000 எக்ஸ்.ஆர் ஆகும். பொதுவாகவே, பிஎம்டபிள்யூ கார் அல்லது பைக்கில் 'எம்' என குறிக்கப்படுவது, அதன் அதிசெயல்படுதிறனை ஆகும். எம்1000 எக்ஸ்.ஆர் பைக்கில் 999சிசி, 4-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.

இது அதிகப்பட்சமாக 201 பிஎஸ் மற்றும் 113 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. 0-இல் இருந்து 100km/h வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த பைக்கின் டாப்-ஸ்பீடு மணிக்கு 278கிமீ ஆகும். எம்1000 எக்ஸ்.ஆர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.45 லட்சம் ஆக தற்சமயம் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேரள தொழிலதிபர் வேணு கோபாலகிருஷ்ணன் வாங்கும் வாகனங்களை எல்லாம் பார்த்தால், பல இலட்சம், கோடி ரூபாய் விலை கொண்டவை ஆக உள்ளன. ஆனால், ஒன்று கூட எலக்ட்ரிக் பைக்கோ அல்லது எலக்ட்ரிக் காரோ கிடையாது. இதில் இருந்து வேணு கோபாலகிருஷ்ணன் எலக்ட்ரிக் வாகனங்கள் மீது ஆர்வம் கொண்டவர் கிடையாது என்பதை அறிய முடிகிறது. இவர் தற்போது வாங்கியிருக்கும் எம்1000 எக்ஸ்.ஆர் பைக் ஆனது இந்தியாவில் சமீபத்தில் விற்பனைக்கு வந்த லேட்டஸ்ட் பிஎம்டபிள்யூ பைக் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, June 16, 2025, 19:05 [IST]
English summary
Kerala software company ceo bought bmw m1000 xr just after r1300 gsa
மேலும்... #celebrity bikes #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X