போலீஸ்காரங்க கிட்ட இவ்ளோ காஸ்ட்லியான பைக்கா! விலை மட்டும் எவ்ளோனு தெரிஞ்சா தொப்புனு மயங்கி விழுந்திருவீங்க!

மிகவும் விலை உயர்ந்த சூப்பர் பைக்குகளை (Super Bikes) வைத்திருப்பவர்களுக்கும், போலீஸ்காரர்களுக்கும் எப்போதுமே ஆகாது. சூப்பர் பைக்கில் பயணம் செய்பவர்களை நிறுத்தி, போக்குவரத்து காவல் துறையினர் தண்டனை வழங்கியது தொடர்பான செய்திகளை கடந்த காலங்களில் நீங்கள் பல முறை படித்திருக்க கூடும்.

சில சமயங்களில் சூப்பர் பைக்குகளுடன் புகைப்படம் எடுப்பதற்காகவும் கூட, போக்குவரத்து காவல் துறையினர் நிறுத்துவார்கள். மேலும் விலை எவ்வளவு, இவ்வளவுதான் மைலேஜ் குடுக்குமா? என்பது போன்ற கேள்விகளை எல்லாம் சூப்பர் பைக் உரிமையாளர்களிடம் போக்குவரத்து காவல் துறையினர் கேட்டது தொடர்பான வீடியோக்களும் கடந்த காலங்களில் வெளியாகியுள்ளன. இந்திய சாலைகளில் சூப்பர் பைக்குகளை காண்பது மிகவும் அரிதான ஒரு விஷயம் என்பதால், காவல் துறையினர் இந்த கேள்விகளை கேட்கின்றனர்.

போலீஸ்காரங்க கிட்ட இவ்ளோ காஸ்ட்லியான பைக்கா! விலை மட்டும் எவ்ளோனு தெரிஞ்சா தொப்புனு மயங்கி விழுந்திருவீங்க!

அத்துடன் காவல் துறையினர் பொதுவாக சாதாரண பைக்குகளைதான் பயன்படுத்துவார்கள். எனவே அரிதான சூப்பர் பைக்குகளை பார்த்ததும், அவற்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்திலும், காவல் துறையினர் உடனடியாக குறுக்காட்டி விடுகின்றனர். ஆனால் தற்போது காலம் வேகமாக மாறி வருகிறது. மிகவும் செயல்திறன் வாய்ந்த பைக்குகளை இந்திய காவல் துறையினரும் தற்போது பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அப்படிப்பட்ட 2 காவலர்கள் தொடர்பான தகவல் தற்போது நமக்கு தெரியவந்துள்ளது.

இவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. டிரையம்ப் டேடோனா 675 (Triumph Daytona 675) மற்றும் கவாஸாகி இஸட்800 (Kawasaki Z800) ஆகிய பைக்குகளை இவர்கள் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை அவர்களின் சொந்த பைக் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். பொதுவாக சூப்பர் பைக்குகள் மீது ஆர்வம் உள்ள போலீஸ்காரர்கள், அவற்றுடன் புகைப்படம் எடுத்து கொள்வார்கள். ஆனால் பெரும்பாலும் அவை, அவர்களின் சொந்த பைக்காக இருக்காது.

ஆனால் தற்போது நாம் பேசி கொண்டுள்ள கேரள போலீஸ்காரர்கள் இருவரும், டிரையம்ப் டேடோனா 675 மற்றும் கவாஸாகி இஸட்800 பைக்குகளை சொந்தமாக வைத்துள்ளனர். அவர்களிடம் செயல்திறன் மிக்க இன்னும் பல்வேறு பைக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே சூப்பர் பைக்குகள் மீது அவர்கள் அதிக ஆர்வம் கொண்டவர்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. தற்போது இணையத்தில் அவர்களின் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தில், 2 இளம் காவலர்களும், 2 டிரையம்ப் டேடோனா 675 பைக்குகளுடன் 'போஸ்' கொடுத்துள்ளனர். இதில் கருப்பு கலர் பைக், ரெகுலர் டேடோனா 675 ஆகும். அதே நேரத்தில் வெள்ளை கலர் பைக், டேடோனா 675 ஆர் ஆகும். இந்த 2 பைக்குகளின் எக்ஸ் ஷோரூம் விலை 10 லட்ச ரூபாய்க்கும் அதிகம் என்பது பிரம்மிப்பான ஒரு விஷயம். இதற்கு ஏற்ற வகையில், இந்த 2 பைக்குகளும் மிகவும் சக்தி வாய்ந்தவையாக உள்ளன.

இதில், டிரையம்ப் டேடோனா 675 பைக்கில், 675 சிசி, மூன்று சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 118 பிஎஸ் பவரையும், 70 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். மறுபக்கம் டிரையம்ப் டேடோனா 675 ஆர் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 675 சிசி, மூன்று சிலிண்டர் இன்ஜின் அதிகபட்சமாக 126 பிஹெச்பி பவரையும், 74 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியதாக உள்ளது.

இதற்கிடையே இந்த செய்தியின் ஆரம்பத்தில் கவாஸாகி இஸட்800 பைக்கை பற்றி நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். இந்த பைக் தற்போது இந்திய சந்தையில் விற்பனையில் இல்லை. விற்பனையில் இருந்து விலக்கப்பட்டு விட்டது. ஆனால் இந்திய சந்தையில் கடைசியாக விற்பனையில் இருந்தபோது, 7.68 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற விலையில் இந்த பைக் விற்பனையாகி கொண்டிருந்தது. இந்த பைக்கில், 806 சிசி, இன்-லைன் நான்கு சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 111 பிஹெச்பி பவரையும், 83 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட செயல்திறன் மிக்க பைக்குகளை எல்லாம் இந்தியாவில் காவல் துறையினர் சொந்தமாக வைத்திருப்பது மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம்தான். இந்தியாவில் காவல் துறையினரின் பயன்பாட்டிற்கு சாதாரணமான பைக் மற்றும் கார்களைதான் அரசு வழங்குகிறது. ஆனால் துபாய் போன்ற இடங்களில் காவல் துறையினர், மிகவும் விலை உயர்ந்த மற்றும் செயல்திறன் மிக்க கார், பைக்குகளை பயன்படுத்தி வருகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 21, 2022, 13:25 [IST]
English summary
Kerala superbiker cops viral pic
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+