கிணறுக்குள் கவிழ்ந்த ஸ்விஃப்ட் கார்! உள்ள இருந்த புதுமண தம்பதியினர்! எதனால் விபத்து நடந்தது தெரியுமா?
புதிதாக கல்யாணமான தம்பதியினர் தங்கள் காரில் வரும்போது மோசமான சாலை காரணமாக கார் விபத்தில் சிக்கி கிணற்றில் கவிழ்ந்த சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் சிறு காயம் கூட இல்லாமல் தம்பதியினர் உயிர் தப்பி உள்ளார்கள். இந்த சம்பவம் எப்படி நடந்தது எங்கு நடந்தது. இவர்கள் காயம் இல்லாமல் உயிர் தப்பியது எப்படி என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கேரள மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், இவருக்கும் கொட்டாரக்கரா பகுதியைச் சேர்ந்த விஸ்மயா என்பவருக்கும் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. புதுமண தம்பதியினரான இவர்கள் இந்த நவராத்திரி விடுமுறையை கொண்டாடுவதற்காக மனைவியின் ஊரான கொட்டாரக்கராவிற்கு விடுமுறையை கொண்டாட வந்துள்ளார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று இவர்கள் ஆலுவா பகுதிக்கு திரும்பி கொண்டு இருந்தார்கள். இவர்கள் தங்களது சொந்த மாருதி ஸ்விஃப்ட் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். இரவு நேரத்தில் இவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது கார் சரியாக எர்ணாகுளம் மாவட்டம் கொளஞ்சேரி பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அது இரவு நேரம் என்பதால் சாலை சரியாக தெரியவில்லை மிக மோசமான சாலையாக இருந்தது சரியான பராமரிப்பு இல்லாததால் காரணியாக இருந்ததால் இவர்கள் ஓட்டி வந்த கார் இது சாலையில் வழுக்கி விபத்துக்குள்ளானது. கார் கார்த்திக் இன் கட்டுப்பாட்டை இழந்தது தொடர்ந்து கார் அருகில் உள்ள சுவற்றில் மோதி சுவற்றை இடித்துக் கொண்டு அதன் உள்ளே சென்றது.

சுவற்றுக்கு மறுபுறம் சுமார் 15 வயது அடி ஆழ கிணறு இருந்துள்ளது. அதில் 5 அடி வரை தண்ணீரும் இருந்துள்ளது. சுவற்றை உடைத்துக் கொண்டு சென்ற கார் அந்தக் கிணற்றுக்குள் கவிழ்ந்து விட்டது. கண்ணிமைக்கும் நொடிகளில் இந்த விபத்து நடந்துள்ளது.இதை அப்பகுதியில் இருந்து சில மக்கள் பார்த்துள்ளார்கள். கிணற்றுக்குள் கார் விழுந்ததையடுத்து உடனடியாக பகுதியில் மக்கள் விரைந்தார்கள். காருக்குள் சிக்கி இருந்த புதுமண தம்பதியினரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
இதையடுத்து அருகில் உள்ள வீட்டில் இருந்து ஏணியை கொண்டு வந்து அதை கிணற்றுக்குள் இறக்கி. கார் விபத்தில் சிக்கிய புதுமண தம்பதியினர் இருவரையும் மீட்டு மேலே கொண்டு வந்தார்கள். இதையடுத்து அப்பகுதியில் உள்ள ஜேசிபிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு ஜேசிபி வர வைக்கப்பட்டு கிணற்றுக்குள் கிடந்த காரை மீட்டு எடுத்தார்கள்.

இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள். மோசமான சாலை காரணமாக கார் விபத்தில் சிக்கியது குறித்து பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இப்படியாக கார் விபத்திற்குள் சேர்க்க மோசமான சாலை ஒரு பக்கம் காரணமாக இருந்தாலும், மற்றொரு பக்கம் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாத இடத்தில் அதிக வேகமாக சென்றதும் ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
பொதுவாக நீங்கள் இரவு நேரத்தில் பயணம் செய்கிறீர்கள் என்றால் பகல் நேரத்தில் பயணம் செய்வதை விட அதிக உஷாராக பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அதுவும் மோசமான சாலையாக இருந்தால் நிச்சயம் கவனமாக இருக்க வேண்டும். நிதானமாக கார் ஓட்ட வேண்டும் அதிக வேகத்தில் கார் ஓட்டக்கூடாது. எக்காரணத்தைக் கொண்டும் கார் உங்கள் கட்டுப்பாட்டை மீறி செல்லக்கூடாது.
குறிப்பிட்ட சம்பவத்தில் மோசமான சாலை தான் விபத்திற்கு முக்கியமான காரணமாக இருந்தாலும், கார் வேகமாக வந்ததும் விபத்திற்கு ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. வேகமாக கார் வந்ததால் தான் மோசமான சாலையில் வாகனம் பயணிக்கும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்து சிக்கி உள்ளது. இதனால் நீங்கள் மோசமான சாலையில் எக்காரணத்தைக் கொண்டும் அதிக வேகமாக பயணம் செய்யாதீர்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலையில் வாகனம் ஓட்டும் போது எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும். இந்தியாவில் பல இடங்களில் மோசமான சாலைகள் தான் இருக்கின்றன. அதனால் இந்தியாவில் வாகனம் ஓட்டும்போது அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக சாலை மோசமாக இருந்தால் நிச்சயம் அதிக வேகமாக வாகனம் ஓட்டக்கூடாது. இல்லை என்றால் விபத்தில் சிக்க நேரிடும். இந்த சம்பவத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது இதுதான்.


Click it and Unblock the Notifications









