கார் உரிமையாளர் சொன்ன செம ட்ரிக்... எவ்வளவு தூரம் ஓட்டினாலும் ஒரு பைசா கூட செலவு ஆகாது... எப்படினு தெரியுமா?

கேரளாவை சேர்ந்த ஒருவர், ஒரு பைசா கூட செலவு இல்லாமல் காரை ஓட்டி வருகிறார். அது எப்படி? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார் உரிமையாளர் சொன்ன செம ட்ரிக்... எவ்வளவு தூரம் ஓட்டினாலும் ஒரு பைசா கூட செலவு ஆகாது... எப்படினு தெரியுமா?

இந்திய சந்தையில் 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒரு சில புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் பிரீமியம் ஹேட்ச்பேக் ரக காரான அல்ட்ராஸ் ஒன்று. இதற்கு அடுத்தபடியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காரான நெக்ஸான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

கார் உரிமையாளர் சொன்ன செம ட்ரிக்... எவ்வளவு தூரம் ஓட்டினாலும் ஒரு பைசா கூட செலவு ஆகாது... எப்படினு தெரியுமா?

நேரடி போட்டி இல்லை என்றாலும் கூட, ஹூண்டாய் கோனா மற்றும் எம்ஜி இஸட்எஸ் உள்ளிட்ட எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களுக்கு டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனையில் சவால் அளித்து வருகிறது. மேலும் இந்திய சந்தையில் கிடைக்கும் விலை குறைவான எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காராகவும் டாடா நெக்ஸான் திகழ்ந்து வருகிறது.

கார் உரிமையாளர் சொன்ன செம ட்ரிக்... எவ்வளவு தூரம் ஓட்டினாலும் ஒரு பைசா கூட செலவு ஆகாது... எப்படினு தெரியுமா?

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை 13.99 லட்ச ரூபாய் மட்டுமே. அதே சமயம் டாப் வேரியண்ட்டின் விலை 16.25 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். தற்போதைய நிலையில் 2,200க்கும் மேற்பட்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது.

கார் உரிமையாளர் சொன்ன செம ட்ரிக்... எவ்வளவு தூரம் ஓட்டினாலும் ஒரு பைசா கூட செலவு ஆகாது... எப்படினு தெரியுமா?

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் இன்னும் பெரிய அளவில் பிரபலமாகவில்லை. அத்துடன் சார்ஜிங் ஸ்டேஷன் போன்ற கட்டமைப்பு வசதிகளும் இன்னும் அதிகரிக்கவில்லை. இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது இது சிறப்பான விற்பனை எண்ணிக்கைதான். மிக குறுகிய காலத்தில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி எவ்வளவு பிரபலமாகியுள்ளது? என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

கார் உரிமையாளர் சொன்ன செம ட்ரிக்... எவ்வளவு தூரம் ஓட்டினாலும் ஒரு பைசா கூட செலவு ஆகாது... எப்படினு தெரியுமா?

இந்த சூழலில் தன்னுடைய வீட்டின் பயன்பாட்டிற்கும், நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை ரீசார்ஜ் செய்வதற்கும், சூரிய ஆற்றலை (Solar Energy) பயன்படுத்தும் ஒருவரின் காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், அவரது நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை இயக்குவதற்கு ஒரு பைசா கூட செலவு ஆவதில்லை.

கார் உரிமையாளர் சொன்ன செம ட்ரிக்... எவ்வளவு தூரம் ஓட்டினாலும் ஒரு பைசா கூட செலவு ஆகாது... எப்படினு தெரியுமா?

பொதுவாக பெட்ரோல், டீசல் கார்களுடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் கார்களை இயக்குவதற்கான செலவு குறைவு. ஆனால் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ரீசார்ஜ் செய்வதற்கு குறிப்பிட்ட அளவு மின்சாரம் செலவு ஆகும். இதற்கு நாம் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் இந்த நபர் சூரிய சக்தியை பயன்படுத்துவதால், தனது நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ரீசார்ஜ் செய்வதற்கு கட்டணம் செலுத்துவதில்லை.

கார் உரிமையாளர் சொன்ன செம ட்ரிக்... எவ்வளவு தூரம் ஓட்டினாலும் ஒரு பைசா கூட செலவு ஆகாது... எப்படினு தெரியுமா?

சோலார் கார்ட் என்ற யூ-டியூப் சேனலில் இது தொடர்பான காணொளி வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை வாங்கிய கேரளாவை சேர்ந்த மருத்துவர் ஒருவரை இந்த காணொளி நமக்கு அறிமுகம் செய்கிறது. தன்னுடைய வீட்டில் சோலார் பேனல் அமைப்பை அவர் வைத்திருப்பதால், எலெக்ட்ரிக் காரின் பேட்டரிகளை ரீசார்ஜ் செய்வதற்கு அவர் செலவு செய்வதில்லை.

கார் உரிமையாளர் சொன்ன செம ட்ரிக்... எவ்வளவு தூரம் ஓட்டினாலும் ஒரு பைசா கூட செலவு ஆகாது... எப்படினு தெரியுமா?

கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சோலார் பேனல்களை அவர் அமைத்தார். அதே சமயம் ஊரடங்கிற்கு பிறகு, நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை வாங்கினார். எலெக்ட்ரிக் காருக்கு ரீசார்ஜ் செய்ய ஒரு பைசாவை கூட அவர் செலவழிக்க வேண்டியதில்லை என்பதுதான், வீட்டில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டதால் கிடைத்துள்ள மிக முக்கியமான நன்மை.

கார் உரிமையாளர் சொன்ன செம ட்ரிக்... எவ்வளவு தூரம் ஓட்டினாலும் ஒரு பைசா கூட செலவு ஆகாது... எப்படினு தெரியுமா?

காரின் பேட்டரியை ரீசார்ஜ் செய்வதற்கும், வீட்டின் பயன்பாட்டிற்கும் தேவையான மின்சாரத்தை இந்த சோலார் பேனல்கள் உருவாக்கி விடுகின்றன. இதுதவிர நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் செயல்திறனும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அதன் உரிமையாளர் கூறியுள்ளார். இந்த காரின் பேட்டரியை முழுமையாக நிரப்புவதற்கு 30 யூனிட் மின்சாரம் செலவு ஆவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கார் உரிமையாளர் சொன்ன செம ட்ரிக்... எவ்வளவு தூரம் ஓட்டினாலும் ஒரு பைசா கூட செலவு ஆகாது... எப்படினு தெரியுமா?

வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே காரை ரீசார்ஜ் செய்வதாகவும், ஒரு முறை பேட்டரியை முழுமையாக நிரப்பினால் 250 கிலோ மீட்டர்கள் வரை எளிதாக பயணம் செய்ய முடிகிறது எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் பெட்ரோல், டீசல் கார்களை போல் எலெக்ட்ரிக் கார்களை அடிக்கடி சர்வீஸ் செய்ய வேண்டியதில்லை.

கார் உரிமையாளர் சொன்ன செம ட்ரிக்... எவ்வளவு தூரம் ஓட்டினாலும் ஒரு பைசா கூட செலவு ஆகாது... எப்படினு தெரியுமா?

எனவே பராமரிப்பு செலவு என்ற விஷயத்திலும், கணிசமான தொகையை மிச்சம் பிடிக்க முடியும். இந்த நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் உரிமையாளர், பேட்டரியை ரீசார்ஜ் செய்வதற்கு வழக்கமான மின்சார இணைப்பை பயன்படுத்தியிருந்தால், மின்சாரத்திற்கு கொஞ்சம் தொகையை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆனால் சோலார் பேனல்கள் மூலம் உருவாக்கப்பட்ட மின்சாரத்தை அவர் பயன்படுத்துவதால், நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை ரீசார்ஜ் செய்வதற்கு செலவு ஆவதில்லை. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத ஒரு எலெக்ட்ரிக் காரை, ஒரு பைசா கூட செலவு இல்லாமல் அவர் பயன்படுத்தி வருகிறார் என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

கார் உரிமையாளர் சொன்ன செம ட்ரிக்... எவ்வளவு தூரம் ஓட்டினாலும் ஒரு பைசா கூட செலவு ஆகாது... எப்படினு தெரியுமா?

இந்த விஷயத்தை அறிந்த பலர் எலெக்ட்ரிக் கார்களை வாங்க முடிவு செய்துள்ளனர். ஆனால் இந்தியாவில் தற்போது ஒரு சில எலெக்ட்ரிக் கார்கள் மட்டும்தான் கிடைக்கின்றன. எனினும் மத்திய, மாநில அரசுகள் அளித்து வரும் ஆதரவு காரணமாக, முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதில் ஆர்வமாக உள்ளன.

கார் உரிமையாளர் சொன்ன செம ட்ரிக்... எவ்வளவு தூரம் ஓட்டினாலும் ஒரு பைசா கூட செலவு ஆகாது... எப்படினு தெரியுமா?

இந்த வகையில் டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார், மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் உள்ளிட்ட மாடல்கள் 2021ம் ஆண்டு இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர மாருதி சுஸுகி நிறுவனத்தின் வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரும் 2021ம் ஆண்டு விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார் உரிமையாளர் சொன்ன செம ட்ரிக்... எவ்வளவு தூரம் ஓட்டினாலும் ஒரு பைசா கூட செலவு ஆகாது... எப்படினு தெரியுமா?

இந்த கார்கள் அனைத்தும் நடைமுறை பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்கும். மேலும் ஏராளமான சொகுசு கார் நிறுவனங்களும் 2021ம் ஆண்டில் இந்திய சந்தையில் தங்களின் எலெக்ட்ரிக் தயாரிப்புகளை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளன. எனவே நீங்கள் கொஞ்சம் காத்திருந்தால், எலெக்ட்ரிக் கார்களில் ஏராளமான தேர்வுகளை பெற முடியும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala: Tata Nexon Electric SUV Owner Uses Solar Power To Recharge Batteries - Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X