கேரளாவின் ஒரேயொரு பாஜக எம்பி... சாதாரண ஆளுனு நெனச்சா இத்தனை கார்கள் இவர்கிட்டயா...!!
2024 மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு தான் தற்சமயம் ஒட்டுமொத்த இந்தியாவும் காத்துக் கொண்டிருக்கிறது. ஆளும் பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சியின் இண்டியா கூட்டணிக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், கேரளாவின் முதல் பாஜக வெற்றியாளராக நடிகர் சுரேஷ் கோபி அறிவிக்கப்பட்டுள்ளார். அதாவது, கேரள மாநிலத்தில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்களில் சுரேஷ் கோபியை தவிர்த்து யாரும் முன்னிலை வகிக்கவில்லை. சுரேஷ் கோபி ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து முன்னிலை வகித்தது மட்டுமில்லாமல், வெற்றியாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலமாக இந்திய அளவில் தனி கவனத்தை பெற்றிருக்கும் நடிகர் சுரேஷ் கோபியிடம் உள்ள கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
'தமிழ்நாட்டில் தாமரை மலராது' என்கிற வசனத்தை பரவலாக பலர் கூற கேள்விப்பட்டு இருப்பீர்கள். இதன் அர்த்தம், தமிழ்நாட்டில் தாமரை மலராது என்பது அல்ல... தாமரை பூவை சின்னமாக கொண்டுள்ள பாஜக கட்சி தமிழ்நாட்டில் கால்பதிக்க முடியாது என்பதாகும். இதனையும் தாண்டி, கடந்த 2021 சட்டமன்ற தொகுதியில் 4 இடங்களை பாஜக கைப்பற்றியது.

இதன் காரணமாக, தமிழ்நாட்டில் 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை பாஜக கட்சியினர் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், கட்சியின் மாநில தலைவர் கூட வெற்றி பெறாதது அந்த கட்சி தொண்டர்களிடையே பெரிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக உடன் கூட்டணியிட்ட பாமக கட்சியின் சௌமியா அண்புமணி மட்டுமே தருமபுரி தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.
பாஜக கட்சி சார்பில் போட்டியிட்ட யாரும் இதுவரையில் வெற்றியாளராக அறிவிக்கப்படவில்லை. இதேபோன்ற நிலைமை தான் நம் அண்டை மாநிலமான கேரளாவிலும் நீடிக்கும் என எதிர்பார்த்தால், கேரளாவில் ஒரேயொரு பாஜக வெற்றி வேட்பாளராக பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சுரேஷ் கோபி 4 லட்சத்து 12,338 வாக்குகளை பெற்றுள்ள நிலையில், இவருக்கு அடுத்து 2வது இடத்தை பிடித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வி.எஸ் சுனில்குமார் வெறும் 74,686 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். இந்த அளவிற்கு, கிட்டத்தட்ட சுமார் 3.5 லட்ச ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நடிகர் சுரேஷ் கோபியிடம் ஏராளமான கார் கலெக்ஷன்ஸ் உள்ளன.
முன்னணி மலையாள நடிகர் சுரேஷ் கோபியிடம் உள்ள கார்கள் என்று பார்த்தால், இவரிடம் ஒரு டொயோட்டா வெல்ஃபையர் கார் ஒன்று உள்ளது. சாலையில் மிதக்கும் சொகுசு கப்பல் போன்று இருக்கும் இந்த காரை வெள்ளை நிறத்தில் சுரேஷ் கோபி வைத்துள்ளார். சிவப்பு நிற 'MP' (Member of Parliament) போர்டு உடன் இருக்கும் வெல்ஃபையர் காரில் சுரேஷ் கோபி சில நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்துள்ளார்.

மேலும், நடிகர் சுரேஷ் கோபியிடம் ஆடி க்யூ7 சொகுசு கார் ஒன்றும் உள்ளது. வெள்ளை நிறத்திலான ஆடி க்யூ7 காரை ஷோரூம் ஒன்றில் இருந்து சுரேஷ் கோபி டெலிவிரி பெறும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், பின்னர் அந்த காருக்கு அவர் பூஜை செய்யும் படத்தையும் உங்களில் சிலர் இணையத்தில் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
இந்த கார்கள் மட்டுமின்றி, நடிகர் சுரேஷ் கோபி ஆஃப்-ரோடு வாகனங்களையும் விரும்பக்கூடியவர். அதாவது, கரடு முரடான சாலைகளுக்கும் கொண்டு செல்லக்கூடிய கார்கள் இவரிடம் உள்ளன. இந்த வகையில், மஹிந்திரா தார் மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-வேகன் வாகனங்கள் இவரிடம் உள்ளன. இதில், ஜி-வேகன் ஆனது விலையுயர்ந்த வாகனம் ஆகும். மேலும், சுரேஷ் கோபியிடம் ஃபோக்ஸ்வேகன் பீட்லீ கார் ஒன்றும் உள்ளதாக கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மலையாள சினிமா உலகின் முக்கியமான நடிகர்கள் என்று பார்த்தால், அதில் சுரேஷ் கோபியும் நிச்சயமாக இருப்பார். அந்த அளவிற்கு செல்வாக்கை பெற்றவரிடம் இத்தனை கார்கள் இருப்பது ஒன்றும் ஆச்சிரியமான விஷயம் அல்ல. ஆனால், நடிகர் ஒருவர் கேரளாவில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்றிருப்பதுதான் சற்று ஆச்சிரியத்தை தருகிறது. ஏனெனில், கேரள மக்கள் பொதுவாகவே சினிமா மோகத்திற்கு பெரியதாக இடம் தரமாட்டார்கள்.


Click it and Unblock the Notifications









