பிடித்த கலரில் கார் வாங்கிய பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளனி... எல்லாரும் வாங்கும் அளவுக்கு என்ன இருக்கு?

கேரளாவின் பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளர்களுள் ஒருவராக இருப்பவர், வீனா முகுந்தன் (Veena Mukundhan). அதேநேரம், சினிமா பிரபலங்களுக்கு முக அலங்காரம் செய்யும் மேக்-அப் ஆர்டிஸ்ட் ஆகவும் மலையாள சினிமா உலகில் கவனத்தை பெற்று வருகிறார். எல்லாவற்றையும் விட, சிறந்த மாடலிங் பெண்ணாக சில விருதுகளை பெற்றுள்ளார். இவர் புதியதாக மஹிந்திரா கார் ஒன்றை வாங்கியுள்ளார். அப்படி என்ன மாதிரியான மஹிந்திரா காரை வீனா முகுந்தன் வாங்கியுள்ளார் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வாழ்வில் புதியதாக ஒரு காரை ஆவது எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என ஆசை இருக்கும். ஆனால், அதை நிஜமாக்குபவர்கள் சிலர் மட்டுமே. அதிலிலும் மஹிந்திரா போன்ற பாதுகாப்புமிக்க காரை வாங்க வேண்டும் என்பது நம்மில் நிறைய பேருக்கு கனவாக இருக்கும். அந்த கனவை தான் கேரள மாடலிங் பிரபலம் வீனா முகுந்தன் நிஜமாக்கியுள்ளார்.

veena mukundhan buys mahindra xuv3xo

தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவரும் வீனா முகுந்தன் இதற்காகவே ஊடகத்துறையை தனியாக பட்டப்படிப்பு படித்தவர். கேரள சினிமா துறையில் தன்னுள் இருக்கும் பல்வேறு திறமைகளை வெளிக்காட்டி வந்தாலும், அதிக திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் வீனா முகுந்தனின் இலட்சியமாக உள்ளது. இதற்கு ஒருபக்கம் முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில், புத்தம் புதியதாக மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரை வீனா முகுந்தன் வாங்கியுள்ளார்.

இவருக்கு பிடித்த நிறம் கருப்பு. இதன் காரணமாகவே, புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரையும் கருப்பு நிறத்தில் வீனா முகுந்தன் வாங்கியுள்ளார். மேலும், காரை டெலிவிரி பெறவும் கருப்பு நிற உடையில் ஷோரூமுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். கார் டெலிவிரி பெறும்போது எடுக்கப்பட்ட வீடியோவில், வீனா முகுந்தனின் கணவர் மற்றும் அவரது நண்பர்களை காணலாம்.

veena mukundhan buys mahindra xuv3xo

வீனா முகுந்தன் வாங்கியுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், மஹிந்திரா நிறுவனம் கடந்த மே மாதத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரை அறிமுகம் செய்தது. டாடா மோட்டார்ஸின் நெக்ஸான், பஞ்ச் உள்ளிட்ட பிரபலமான கார்களை வடிவமைத்த பிரதாப் போஸ் அவர்கள் தான் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரையும் வடிவமைத்தார்.

பல்வேறு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இந்த மஹிந்திரா காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.79 லட்சத்தில் இருந்து ரூ.15.49 லட்சம் வரையில் தற்சமயம் உள்ளன. 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல், 1.2 லிட்டர் எம்ஸ்டாலியன் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என 3 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார் கிடைக்கிறது.

veena mukundhan buys mahindra xuv3xo

வேரியண்ட்களை போலவே, பல்வேறு விதமான கலர் ஆப்ஷன்களில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில், கேரள டிவி ஆங்கர் வீனா முகுந்தன் வாங்கியிருப்பது போல் மொத்தம் 5 விதமான கருப்பு கலர் ஆப்ஷன்களில் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ விற்பனை செய்யப்படுகிறது. தோற்றத்தை பொறுத்தவரையில், முன்பு விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி300 காரின் நெக்ஸ்ட் ஜென்ரேஷன் மாடலாக எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ உருவாக்கப்பட்டது.

இந்த காரின் வெளிப்பக்கத்தில் கூர்மையான ஸ்டைலில் எல்இடி ஹெட்லைட்கள், பனோராமிக் சன்ரூஃப் உள்ளிட்டவையும், உட்பக்கத்தில் பெரியதாக 10.25-இன்ச்சில் இரு டச் ஸ்க்ரீன்கள், பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி, கூல்டு க்ளோவ் பாக்ஸ் உள்ளிட்டவையும், பயணிகளின் பாதுகாப்புக்கு 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், 360-டிகிரி கேமரா உள்ளிட்டவையும் சிறப்பம்சங்களாக வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. வீனா முகுந்தன் போன்ற பிரபலங்கள் வாங்குவது இந்த காருக்கான வரவேற்பை இன்னும் அதிகரிக்கும். எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரின் எந்த வேரியண்ட்டை வீனா முகுந்தன் வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. எப்படியிருந்தாலும், விலைமிக்க வேரியண்ட்டை தான் தேர்வு செய்திருப்பார்.

More from DriveSpark

Article Published On: Friday, November 15, 2024, 21:28 [IST]
English summary
Kerala tv anchor veena mukundhan takes delivery of mahindra xuv 3xo check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X