சேட்டன்களின் வாகனங்களை தொற்றிய கால்பந்து ஜூரம்! யமஹா, ஹோண்டாவும் தப்பவில்லை!

பிபா உலக கோப்பை கால்பந்து திருவிழா, நாளை தொடங்குகிறது. கால்பந்து ரசிகர்கள் அதிகளவில் உள்ள கேரள மாநிலத்தில், சேட்டன்களின் வாகனங்களை கால்பந்து ஜூரம் தொற்றிக்கொண்டு விட்டது.

By Arun

பிபா உலக கோப்பை கால்பந்து திருவிழா, நாளை தொடங்குகிறது. கால்பந்து ரசிகர்கள் அதிகளவில் உள்ள கேரள மாநிலத்தில், சேட்டன்களின் வாகனங்களை கால்பந்து ஜூரம் தொற்றிக்கொண்டு விட்டது. இதற்கு யமஹா, ஹோண்டா, ஆட்டோ ரிக்ஸா என எந்த வாகனமும் தப்பவில்லை. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

சேட்டன்களின் வாகனங்களை தொற்றிய கால்பந்து ஜூரம்! யமஹா, ஹோண்டாவும் தப்பவில்லை!

உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் பிபா உலக கோப்பை கால்பந்து திருவிழா, ரஷ்யாவில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. இந்தியர்கள் கிரிக்கெட்டை ஒரு மதம் போல் பின்பற்றினாலும், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் வட கிழக்கு மாநிலங்கள் மட்டும் இதற்கு விதிவிலக்காக உள்ளன.

சேட்டன்களின் வாகனங்களை தொற்றிய கால்பந்து ஜூரம்! யமஹா, ஹோண்டாவும் தப்பவில்லை!

ஆம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் கிரிக்கெட்டிற்கு இணையாக கால்பந்து விளையாட்டிற்கும் அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர். பிரபலமான கால்பந்து வீரர்கள் இந்தியா வருகை புரியும்போது, கேரளா அல்லது கொல்கத்தாவிற்கு செல்வதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர்.

சேட்டன்களின் வாகனங்களை தொற்றிய கால்பந்து ஜூரம்! யமஹா, ஹோண்டாவும் தப்பவில்லை!

இதனிடையே மேற்கண்ட மாநிலங்களில் எல்லாம் பிபா உலக கோப்பை கால்பந்து ஜுரம் அனைவரையும் தொற்றி கொண்டு விட்டது. இதில், கேரளாவின் சேட்டன்கள் எப்போதும் போல தாங்கள் ஒருபடி மேல் என்பதை நிரூபித்து விட்டனர். தங்களின் வாகனங்களில் எல்லாம் உலக கோப்பை கால்பந்து திருவிழா தொடர்பான ஸ்டிக்கர்களை ஒட்டி அலங்கரித்துள்ளனர்.

சேட்டன்களின் வாகனங்களை தொற்றிய கால்பந்து ஜூரம்! யமஹா, ஹோண்டாவும் தப்பவில்லை!

ஹோண்டா ஆக்டிவா

இந்திய மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவாதான். அந்த ஸ்கூட்டர் முழுவதும் அர்ஜென்டினா அணியின் ஸ்டிக்கர்களை ஒட்டி, கேரள ரசிகர்கள் தங்கள் ஆதரவை வெளிக்காட்டியுள்ளனர்.

சேட்டன்களின் வாகனங்களை தொற்றிய கால்பந்து ஜூரம்! யமஹா, ஹோண்டாவும் தப்பவில்லை!

ஸ்கை ப்ளூ மற்றும் வெள்ளை நிற கோடுகள் அடங்கிய அர்ஜென்டினா தேசிய கொடி, ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் முழுவதும் வ்ராப்பிங் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அர்ஜென்டினா அணியினரும் அணிவகுத்து நிற்கும் புகைப்படமும் ப்ரிண்ட் செய்யப்பட்டுள்ளது.

சேட்டன்களின் வாகனங்களை தொற்றிய கால்பந்து ஜூரம்! யமஹா, ஹோண்டாவும் தப்பவில்லை!

பஜாஜ் RE60

இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் காணப்படும் ஆட்டோ ரிக்ஸா பஜாஜ் RE60தான். இந்தியாவின் ஒவ்வொரு தெருவையும் கனெக்ட் செய்யும் முக்கிய வாகனம் இந்த ஆட்டோதான். இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் வாகனங்களில் ஒன்றாகவும் பஜாஜ் RE60 விளங்குகிறது.

சேட்டன்களின் வாகனங்களை தொற்றிய கால்பந்து ஜூரம்! யமஹா, ஹோண்டாவும் தப்பவில்லை!

ஹோண்டா ஆக்டிவாவை போல், பஜாஜ் RE60 ஆட்டோவும் அர்ஜென்டினா அணியின் தேசிய கொடியை பெற்றுள்ளது. அதன் விண்டுஷீல்டில், அர்ஜென்டினா அணியின் மந்திர வீரரான மெஸ்ஸியின் படம் ஒட்டப்பட்டிருக்கிறது.

சேட்டன்களின் வாகனங்களை தொற்றிய கால்பந்து ஜூரம்! யமஹா, ஹோண்டாவும் தப்பவில்லை!

ஹோண்டா டியோ

இளைய தலைமுறை மிகவும் விரும்பும் வாகனங்களில் ஹோண்டா டியோவும் ஒன்று. இந்த ஹோண்டா டியோவின் உரிமையாளரும் அர்ஜென்டினா அணிக்குதான் ஆதரவு அளிக்கிறார். இதற்காக தனது ஹோண்டா டியோ முழுவதும் அர்ஜென்டினா அணியின் தேசிய கொடி வண்ணத்தை பெயிண்ட் செய்துள்ளார்.

சேட்டன்களின் வாகனங்களை தொற்றிய கால்பந்து ஜூரம்! யமஹா, ஹோண்டாவும் தப்பவில்லை!

அதுமட்டுமல்லால் அதன் ஹேண்டில் பாரில், அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தின் (AFA) லோகோ இடம்பெற்றுள்ளது. அத்துடன் முன்பக்கத்தில் மெஸ்ஸியின் படமும் வ்ராப்பிங் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில், அர்ஜென்டினா அணிக்குதான் அதிக ரசிகர்கள் உள்ளனர் என்பதை இவை நிரூபிக்கின்றன.

சேட்டன்களின் வாகனங்களை தொற்றிய கால்பந்து ஜூரம்! யமஹா, ஹோண்டாவும் தப்பவில்லை!

யமஹா YZF R15

அர்ஜென்டினாவை போல், உலக கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கும் மற்றொரு முன்னணி அணி பிரேசில். இந்த யமஹா YZF R15 உரிமையாளர், பிரேசில் அணியின் ஜெர்சி நிறமான மஞ்சளை, ஒட்டுமொத்த பைக் முழுவதும் இடம்பெற செய்துள்ளார்.

சேட்டன்களின் வாகனங்களை தொற்றிய கால்பந்து ஜூரம்! யமஹா, ஹோண்டாவும் தப்பவில்லை!

அதன் விண்டுஷீல்டில், பிரேசில் அணியின் முன்னணி வீரர்களான நெய்மர் மற்றும் பிலிப் கட்டின்கோ ஆகியோரின் படங்கள் உள்ளன. இந்த டிசைனில் யமஹா YZF R15 கச்சிதமாக காட்சியளிக்கிறது.

சேட்டன்களின் வாகனங்களை தொற்றிய கால்பந்து ஜூரம்! யமஹா, ஹோண்டாவும் தப்பவில்லை!

ஆட்டோ ரிக்ஸா

இந்த ஆட்டோ ரிக்ஸாவின் முன்பகுதி டாப்பில், பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மரின் படம் ஒட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவரது டீம் மேட்ஸ்ஸின் படங்களும் முன்பகுதியில் இடம்பெற்றுள்ளன. அத்துடன் 2018 பிபா உலக கோப்பை, ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ லோகோ ஆகியவையும் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது.

Source: Cartoq

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala vehicles go football crazy: From Yamaha R15 to Honda Activa. Read in tamil.
Story first published: Tuesday, June 12, 2018, 19:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X