ஆம்புலன்ஸ்க்கு கூட வழி விடாம அம்மணி எங்க போறாங்க? கடைசில போலீஸ் ஸ்டேஷன்ல இப்படி கைகட்டி நிக்க வச்சுடாங்களே!

இந்தியாவில் பல பெரு நகரங்களிில் டிராஃபிக் ஜாம் மிகவும் சாதாரண வினுயம் தான். பல சாலைகளில் நீண்ட தூர டிராஃபிக் ஜாம் அல்லது வெகு நேரம் காத்திருப்பது காரணமாக மக்கள் அடிக்கடி கோப்பட்டு பார்த்திருப்போம். பல நேரங்களில் அவசர வாகனங்களான ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் கூட இப்படியாக போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி விடுகின்றன. இந்த வாகனங்கள் எல்லாம் டிராஃபிக் நெருக்கடி இருந்தாலும் அதற்கு மற்ற வாகன ஓட்டிகள் வழி விட வேண்டும் என்பது விதிமுறை. பலர் இதை செய்தும் விடுவார்கள்.

பல தருணங்களில் மிககடுமையான டிராஃபிக் ஜாம் இருக்கும் ரோட்டில் ஆம்புலன்ஸ்க்கு மற்ற வாகன ஓட்டிகள் வழி விடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வரும். இந்நிலையில் தற்போது இதற்கு நேர் மாறாக ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. சாலை ஒன்றில் ஆம்புலன்ஸ் செல்லும் போது அதற்கு மு்னனர் டூவீலரை ஓட்டிச் செல்லும் பெண் ஒருவர் அதற்கு வழி விடாமல் சென்றுள்ளார். இ்நத வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

kerala women blocking ambulance way

மலையாள செய்தி சேனலான மாத்ரூபூமியின் யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோ வெளியாகியுளு்ளது. கேரளாவின் ஆலுவா பகுதியில் இருந்து கொச்சின் பகுதியில் உள்ள ஒரு ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு நோயாளி ஒருவரை ஆம்புலன்ஸில் கூட்டி சென்றுள்ளனர். அப்பொழுது ஆம்புலன்ஸிற்க முன்னர் ஹோண்டா நேவி டூவீலரில் பெண் ஒருவர் சென்று கொண்டுள்ளது. ரோட்டில் பெரிய அளவு டிராஃபிக் ஒன்றும் இல்லை.

இருந்தாலும் அவர் ஆம்புலன்ஸ் சைரஸ் சத்தம் மற்றும் ஹாரன் சத்தம் கேட்டும் ஆம்புலன்ஸிற்கு வழி விடாமல் சென்றுள்ளார். இதை ஆம்புலன்ஸ் உள்ளே இருந்தவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் வாகனத்தின் பதிவெண் தெளிவாக தெரிகிறது. நோயாளி அறுவைசிகிச்சைக்காக அவசரமாக எடுத்து செல்லும் நேரத்தில் இப்படி ஒரு பைக் வாகனத்தில் ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் சென்றது பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

kerala women blocking ambulance way

ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவழியாக சமாளித்து உரிய நேரத்தில் நோயாளியை மருத்துவமனைக்கு கூட்டி சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்து ஆம்புலன்ஸ் டிரைவர் போலீசில் புகார் அளித்தார். பதிவான வீடியோவில் உள்ள வாகன பதிவெண்ணை வைத்து வாகனத்தின் உரிமையாளருக்கு போலீசா் அழைப்பு விடுத்துள்ளனர். குறிப்பிட்ட பெண் போலீசில் ஆஜராகி நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Take a Poll

இது போன்ற சம்பவம் நடப்பது முதன் முறையல்ல இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இப்படியாக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்களுக்கு வழி விடாமல் வாகன ஓட்டிகள் வாகனங்களில் பயணித்துள்ளனர். இந்த வீடியோ வெளியான பிறகு பலர் புரிந்து கொள்ள வேண்டியது சாலையில் நீங்கள் என்னதான் அவசரமாக சென்று கொண்டிருந்தாலும் அவசரவாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது போக்குவரத்து சட்ட விதிமுறையில் இருப்பதால் அதை நீங்கள் பின்பற்ற வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன ஓட்டிகள் பலர் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு வழி விட்டாலும் சிலர் அதை செய்ய மறுத்துவருகின்றனர். குறிப்பிட்ட இந்த சம்பவத்தில் அந்த பெண் காதில் ஹெட்சென் அணிந்து பயணம் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.அப்படி செய்திருந்தால் அதுவும் தவறான விஷயம் தான். வாகனத்தில் பயணிக்கும் போது எப்பொழுதும் கவனம் சாலையில் இருக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, March 17, 2025, 16:25 [IST]
English summary
Kerala women on honda navi blocking ambulance way viral video
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X