ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த இளம் தொழிலதிபர்!! 20கிமீ மைலேஜ் தரும் காரை வாங்கி அசத்தல்!
ஷிபிலி ரஹிமான் (Shibili Rahiman), இந்தியாவின் இளம் தொழிலதிபர். வெறும் 22 வயது தான் ஆகிறது. இதற்காக இந்திய சாதனைகள் புத்தகத்திலும் இடம்பிடித்தவர். கேரளாவின் திரூர் என்கிற பகுதியை சேர்ந்தவர். இந்த சின்ன வயதிலேயே பல்வேறு துறைகளில் மொத்தம் 7 விதமான நிறுவனங்களை ஷிபிலி ரஹிமான் நிர்வகிக்கிறார். இத்தகைய நபர் மாருதி சுஸுகி (Maruti Suzuki)-இல் புதியதாக ஒரு பவர்ஃபுல்லான காரை வாங்கியுள்ளார். அப்படி என்ன மாதிரியான கார் அது? என்பதையும் ஷிபிலி ரஹிமானை பற்றிய கூடுதல் விபரங்களையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
நம் இந்திய நாடு சமீப காலங்களில் அனைத்து விதங்களிலும் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது என்பதற்கு நாட்டில் புதியதாக உருவெடுத்து இருக்கும் தொழிலதிபர்களின் எண்ணிக்கை தான் சாட்சியாகும். குறிப்பாக, இளம் தொழிலதிபர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து காட்டியுள்ளனர். முக்கியமாக, பங்கு சந்தை முதலீடுகளில் நிறைய இலாபத்தை சம்பாதித்தவர்கள் ஏராளம்.

அவ்வாறு கிடைக்கும் பணத்தின் மூலமாக சிலர் விரைவாகவே தங்களது கனவு நிறுவனத்தை துவங்கி விடுகின்றனர். அத்தகைய இந்திய இளம் தொழிலதிபர்களுள் ஒருவர் தான், ஷிபிலி ரஹிமான் ஆவார். ராயல் அசெட்ஸ் க்ரூப் (Royal Assets Group)-ஐ 2020ஆம் ஆண்டில் நிறுவியவர் மற்றும் தற்போதைய சிஇஓ-வாக ஷிபிலி ரஹிமான் உள்ளார். இந்த நிறுவனத்தை துவங்கிய போது இவருக்கு 17- 18 வயதுதான் ஆகி இருந்தது.
இதனாலேயே, இளம் வயது தொழிலதிபராக இந்திய சாதனைகள் புத்தகத்தில் இடம்பிடித்தார். நிறுவனத்தை எவ்வாறு நடத்துவது, பிஸ்னஸை எவ்வாறு மேம்படுத்துவது, பங்குச்சந்தை உள்ளிட்ட முதலீடுகளை எவ்வாறு மேற்கொள்வது என்பதை கற்றுக் கொடுக்கும் மற்றும் அதுகுறித்த ஆலோசனைகளை வழங்கும் நிறுவனமாக ஷிபிலி ரஹிமானின் ராயல் அசெட்ஸ் க்ரூப் செயல்படுகிறது.

சிம்பிளாக சொல்ல வேண்டுமென்றால், கார்ப்பிரேட் நிறுவனத்தை எவ்வாறு பெரிதுப்படுத்துவது என்பதை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்து ஷிபிலி ரஹிமான் தனது நிறுவனத்தை பெருக்கி கொள்கிறார். இந்த நிலையில், இதன் மூலம் கிடைத்த வருவாயில் தொழிலதிபர் ஷிபிலி ரஹிமான் புதியதாக கார் ஒன்று வாங்கியுள்ளார். இவர் வாங்கியிருப்பது மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் டர்போ (Fronx Turbo) கார் ஆகும்.
அதாவது, கடந்த 2023ஆம் ஆண்டில் புதியதாக மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஃப்ரான்க்ஸ் காரை டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் ஷிபிலி ரஹிமான் வாங்கியுள்ளார். குடும்பத்துடன் மாருதி சுஸுகியின் நெக்ஸா டீலர்ஷிப் ஷோரூமுக்கு சென்று ஃப்ரான்க்ஸ் டர்போ காரை ஷிபிலி ரஹிமான் டெலிவிரி பெறும் படங்கள் சமூக வலைத்தளங்களில் கவனத்தை பெற்றுள்ளன.

மார்க்கெட்டில் பிரபலமான மாருதி சுஸுகி பலேனோ ஹேட்ச்பேக் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஃப்ரான்க்ஸ் கார் கடந்த 2023 ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், காரை புக் செய்தவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்க ஏப்ரல் ஆகிவிட்டது. இந்த மாடர்ன் மாருதி சுஸுகி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.51 லட்சத்தில் இருந்து ரூ.13.04 லட்சம் வரையில் உள்ளன.
1.2 லிட்டர், 4-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர், 3-சிலிண்டர், டர்போ-பெட்ரோல் என்ஜின் என 2 விதமான பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் ஃப்ரான்க்ஸ் கார் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் என்ஜின் ஆப்ஷன் எதுவும் வழங்கப்படுவது இல்லை. ஏற்கனவே கூறியதுபோல், இதில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் இந்த காரை ஷிபிலி ரஹிமான் வாங்கியுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டர்போ என்ஜின் உடன் ஃப்ரான்க்ஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9.73 லட்சத்தில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன. வளர்ந்த தொழிலதிபர்களின் கார்களுடன் ஒப்பிடுகையில் இந்த மாருதி கார் சற்று விலை குறைவானதுதான், என்றாலும் இளம் தொழிலதிபர் ஷிபிலி ரஹிமானின் எதிர்கால வாழ்க்கைக்கு இந்த ஃப்ரான்க்ஸ் கார் முக்கிய அடித்தளமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









