கிண்டல் செய்தவர்களுக்கு புது கார் மூலமாக பதிலடி - யூடியூப் தம்பதி வாங்கியிருக்கும் காரில் இத்தனை அம்சங்களா?
சமூக வலைத்தளங்கள் மூலமாக வருவாய் ஈட்டுபவர்கள் உலகம் முழுவதுமே தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம், இணையத்தளத்தின் வளர்ச்சி ஆகும். ஒரு சிலர் வேறு எந்த வேலையையும் பார்க்காமல், முழு மூச்சாக இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வளைத்தளங்களில் வீடியோக்களை பதிவிடுவதை மட்டுமே வேலையாக பார்க்கின்றனர். அவ்வாறு கேரளாவில் யூடியூப் மூலமாக கணிசமான வருவாயை ஈட்டிவரும் ஒரு தம்பதியினர் அதன் மூலமாக புதியதாக மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Fronx) காரை வாங்கியுள்ளனர். யார் அந்த கேரள தம்பதி? அவர்கள் வாங்கியுள்ள ஃப்ரான்க்ஸ் காரின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
டிடி ஃபேமலி (TT Family) என்கிற பெயரில் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக வீடியோக்களை பதிவிட்டுவரும் கேரள தம்பதியினர், ஷெமி மற்றும் ஷெஃபி. இருவரின் பெயரும் ஒரே ரைமிங்கில் இருப்பதன் காரணமாக நெட்டிசன்கள் மத்தியில் இவர்கள் பிரபலமடைந்து இருக்கலாம் என நீங்கள் நினைக்கலாம். அதுவும் ஒரு காரணம்தான் என்றாலும், அதனை விட மிக முக்கிய காரணம் ஒன்று உள்ளது.

பெரும்பாலும், மனைவியை விட கணவருக்கு தான் வயது அதிகமாக இருக்கும். ஆனால், இந்த தம்பதியில் கணவரை விட மனைவிக்கு வயது மிகவும் அதிகம். இதன் காரணமாகவே, இந்த ஜோடியை இணையத்தில் பலரும் அடிக்கடி கேலி, கிண்டல் செய்வது வழக்கம். ஆனால் உண்மையில், அந்த கேலி, கிண்டல்கள் தான் இவர்களை இணையத்தில் பிரபலமடைய செய்தது என சொல்ல வேண்டும்.
இந்த தம்பதியினருக்கு யூடியூப்பில் 3 இலட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். அதேபோல், இன்ஸ்டாகிராமில் இவர்களது டிடி ஃபேமலி பக்கத்தை 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் பின்பற்றுகின்றனர். தங்களது தினசரி வாழ்க்கையையும், அதில் நடக்கக்கூடிய சுவாரஸ்யமான விஷயங்களையும் இவர்கள் வீடியோக்களாக பதிவிடுகின்றனர். கோழிக்கோடு மாவட்டத்தில் ஒரு துணிக்கடையையும் இவர்கள் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்த கடையின் மூலமாகவும், இணையம் மூலமாகவும் கிடைத்த வருவாயில் இந்த கேரள தம்பதி புதியதாக பிராண்ட்-நியூ மாருதி சுஸுகி பலேனோ கார் ஒன்றை வாங்கியுள்ளனர். ஷோரூமுக்கு மகளுடன் சென்று காரை டெலிவிரி பெற்றிருப்பதையும் இவர்கள் வீடியோவாக பதிவிட்டுள்ளனர். இந்த தம்பதியினரின் மற்ற வீடியோக்களை போன்று, இந்த வீடியோவுக்கும் ஹேட்டர்ஸிடம் இருந்து கேலி, கிண்டல்கள் வந்துள்ளன. இருப்பினும், இதுவரையில் 2.5 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் இந்த கார் டெலிவிரி வீடியோவுக்கு கிடைத்துள்ளது.
இவர்கள் வாங்கியிருக்கும் பலேனோ கார் ஆனது மாருதி சுஸுகியின் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக் கார் ஆகும். இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.6.66 லட்சத்தில் இருந்து ரூ.9.88 லட்சம் வரையில் உள்ளன. பலேனோ காரின் டாப் வேரியண்ட்டை இந்த கேரள தம்பதி வாங்கியுள்ளனர். அதாவது, ரூ.9.88 லட்சத்திலான பலேனோ காரை இவர்கள் வாங்கியுள்ளனர்.

ரூ.9.88 லட்சம் என்பது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. ஆன்-ரோடு விலை கிட்டத்தட்ட ரூ.11 லட்சம் அளவில் வரும். விற்பனையில் டாடா அல்ட்ராஸ், ஹூண்டாய் ஐ10 மற்றும் டொயோட்டா க்ளான்ஸா உள்ளிட்டவற்றிற்கு போட்டியாக விளங்கும் பலேனோவின் நீளம் 3995மிமீ, அகலம் 1745மிமீ மற்றும் உயரம் 1510மிமீ ஆகும். இந்த காரில் முன் மற்றும் பின் சக்கரங்கள் 2520மிமீ தூரத்தில் வழங்கப்படுகின்றன.
பலேனோவில் பொருத்தப்படும் 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 88 பிஎச்பி மற்றும் 113 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்குகிறது. பலேனோவில் இந்த என்ஜினை 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் வாங்கலாம். பலேனோ காரை சிஎன்ஜி பவர்டிரெயின் ஆப்ஷனிலும் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மற்றவர்கள் கிண்டல் செய்தாலும் எங்களுக்கு பிடித்த வாழ்க்கையை நாங்கள் வாழுவோம் என்கிற இந்த தம்பதியின் எண்ணம் பாராட்டுக்குரியது. தற்போது ரூ.11 லட்சத்தில் பிராண்ட்-நியூ காரை வாங்கியிருப்பதன் மூலம் தங்களது வாழ்க்கையில் இந்த தம்பதியினர் வெற்றி பெறவும் ஆரம்பித்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. இந்தியாவில் அதிக மக்களால் வாங்கப்படும் காரை இவர்கள் தேர்வு செய்திருப்பதன் மூலம் கார்கள் பற்றிய புரிதலும் இவர்களிடம் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications









