சொந்த காலில் நிற்பது என்றால் இதுதான்... 23 வயதில் சுற்றாத ஊர் கிடையாது! விலையுயர்ந்த காருக்கு ஓனர்!

நம்மில் நிறைய பேருக்கு தொலைத்தூர பயணங்களை அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும் என ஆசை இருக்கும். ஆனால், நமது பொருளாதார சூழல் தான் நம்மை தடுக்கும். ஆனால், கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் வெறும் 23 வயதில் சுமார் 22 நாடுகளை சுற்றி வந்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?. அந்த பெண் தற்போது செகண்ட்-ஹேண்டில் விலையுயர்ந்த ஸ்கோடா (Skoda) கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதுதொடர்பான படங்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். யார் அவர் என்பதையும், அவர் வாங்கியுள்ள ஸ்கோடா காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அன்றாட அலுவலக பணிகளில் இருந்து தற்காலிகமாக கொஞ்சம் தப்பிக்க டிராவல் மிகவும் ஏற்ற ஒன்றாகும். நண்பர்களுடன் ஒன்றாக சேர்ந்து தொலைத்தூர பகுதிகளுக்கு சுற்றுலா செல்வது ஜாலி என்றால், புது, புது இடங்களுக்கு தனியாக செல்வதும் ஒருவித ஜாலி தான். புதிய மனிதர்களை தனி ஆளாக சந்திக்கும்போது உங்களையே அறியாமல் உங்களது மனம் வலுப்பெற ஆரம்பிப்பதாக உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

backpacker arunima bought skoda octavia

பயணத்தின்போது ஏற்படும் கடின சூழல்களையும் தனியாளாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆதலால், தனியாக டிராவல் செய்வது என்பது கிட்டத்தட்ட ஆழ்ந்த யோகாசனத்தை போன்றதே. தனியாக இந்தியாவிற்குள் இருக்கும் சுற்றுலா பகுதிகளுக்கு சென்றுவருவதே பெரிய சாதனை எனும்போது, நாம் இந்த செய்தியில் பார்க்கவுள்ள 23 வயதான இளம்பெண் தனியாளாக 22 நாடுகளை சுற்றி வந்துள்ளார்.

அந்த இளம் தைரிய மங்கையின் பெயர், அருணிமா (Arunima). கேரளா மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒற்றப்பாலம் பகுதியை சேர்ந்தவரான இவரை பேக்பேக்கர் (Backpacker) அருணிமா என சொன்னால்தான் நிறைய பேருக்கு தெரியும். ஏனெனில், இவரது இன்ஸ்டாகிராம், யூடியூப் சேனல்களின் பெயர் இதுவாகும். எந்நேரமும் முதுகில் ஏதேனும் பையை மாட்டிக் கொண்டு வீடியோவில் காட்சி தருவதால் இவ்வாறான பெயரை அருணிமா பெற்றுள்ளார்.

backpacker arunima bought skoda octavia

இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 7 இலட்சத்திற்கும் அதிகமானோர் அருணிமாவை பின்தொடர்கின்றனர். வீடியோக்களில் நிறைய முறை அருணிமா சைக்கிள் ஓட்டுவதை தான் மக்கள் பார்த்துள்ளனர். ஆனால், சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் ஸ்கோடா கார் ஒன்றுடன் தான் இருக்கும் படங்களை அருணிமா வெளியிட்டுள்ளார். மேலும், இந்த இன்ஸ்டா பதிவுக்கு, "எனது முதல் குழந்தை" என அருணிமா கேப்ஷன் கொடுத்துள்ளார்.

ஆதலால், இது இவர் வாங்கிய முதல் கார் என கூறப்படுகிறது. இந்த படங்களில், அருணிமா உடன் காட்சித்தருவது ஸ்கோடா ஆக்டாவியா (Octavia) என்கிற சற்று விலைமிக்க காராகும். படங்களில் காரை பார்க்கும்போது புதியதுபோல் தெரியவில்லை. வேறொருவர் பயன்படுத்திய ஸ்கோடா ஆக்டாவியா காரை அருணிமா வாங்கியுள்ளது போல் தெரிகிறது. கேரள மக்களிடையே செகண்ட்-ஹேண்டில் கார் வாங்கும் பழக்கம் அதிகமாக உள்ளது.

சில்வர் நிறத்திலான ஸ்கோடா ஆக்டாவியா காரை டீசல் என்ஜின் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் அருணிமா வாங்கியுள்ளார். ஆக்டாவியா காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் பிரீமியம் தரத்திலான செடான் ரக காராக விளங்குகிறது. இந்த ஸ்கோடா கார் இந்தியாவில் நீண்ட வருடங்களாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது, சில மாதங்களுக்கு விற்பனையில் இருக்கும், அதன்பின் நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரப்படும்.

அந்த வகையில் சமீபத்தில்தான் இந்த ஸ்கோடா காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது. இன்னும் சில காலம் கழித்து மீண்டும் புதிய மேம்படுத்தப்பட்ட ஆக்டாவியா கார் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறுதான், ஸ்கோடா ஆக்டாவியா காரின் விற்பனை பயணம் இந்தியாவில் இருந்துள்ளது. ஆக்டாவியா கார் அதன் வலிமையான உடல் தரத்தினாலும், ஷார்ப்பான பெர்ஃபார்மன்ஸினாலும் உலகம் முழுவதும் பிரபலமானதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு உலகம் முழுக்க பிரபலமான ஸ்கோடா காரை தான் செகண்ட்-ஹேண்டில் கேரள யூடியூப்பர் அருணிமா வாங்கியுள்ளார். சாரி... பேக்பேக்கர் அருணிமா வாங்கியுள்ளார். யூடியூப்பர்கள் பொதுவாகவே புதியதாக ஏதேனும் ஒரு பொருளை வாங்கினால் அதை வைத்தே சில வாரங்களை ஓட்டி விடுவார்கள். ஆதலால், அருணிமாவிடம் இருந்தும் இந்த ஸ்கோடா ஆக்டாவியா காருடன் இன்னும் சில வாரங்களுக்கு நிறைய வீடியோக்களை எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, November 17, 2024, 7:30 [IST]
English summary
Kerala youtuber backpacker arunima bought second hand skoda octavia car
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+