பேடிஎம்-இல் வேலை பார்த்தவரின் வாழ்க்கை இப்போ மொத்தமா மாறிடுச்சு! வாங்கிய கார் மாநிலத்தில் யார்கிட்டயும் இல்ல!

கேரளா (Kerala), இந்தியாவில் ஆட்டோமொபைல் பிரியர்கள் அதிகம் உள்ள மாநிலங்களுள் ஒன்று. மற்றவர்களை காட்டிலும் வித்தியாசமான தோற்றம் கொண்ட வாகனங்களை அதிகம் விரும்பக்கூடியவர்களாக கேரள மக்கள் விளங்குகின்றனர். ஒரு காலத்தில் மாடிஃபை (Modify) செய்யப்பட்ட பைக் & கார்களை கேரளாவில் அதிக எண்ணிக்கையில் காண முடிந்தது. அதன்பின், போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் அவ்வாறான மாடிஃபை செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது என்றாலும், மஹிந்திரா தார் (Mahindra Thar), மினி (MINI) கார்கள் மற்றும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் (Royal Enfield Himalayan) பைக் போன்ற வித்தியாசமான தோற்றம் கொண்ட வாகனங்கள் கேரளாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகுகின்றன.

அதேபோல், அதிவேகமாக இயங்கக்கூடிய கார்கள் மீதும் கேரள மக்களுக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உள்ளது. அந்த வகையில், பி.எம்.டபிள்யூ (BMW) நிறுவனத்தின் வேகமாக இயங்கக்கூடிய ஸ்போர்ட்ஸ் காரான எம்2-க்கும் கேரளாவில் ரசிகர்கள் பலர் உள்ளனர். இன்னும் சொல்லப்போனால், இந்தியளவில் மட்டுமில்லாமல் பிஎம்டபிள்யூ எம்2 ஆனது உலகளவில் பிரபலமான பிஎம்டபிள்யூ ஸ்போர்ட்ஸ் கார்களுள் ஒன்று ஆகும்.

kerala s first bmw m2 lci

ஆதலால், பிஎம்டபிள்யூ எம்2 கார் கேரள மக்களுக்கு பிடித்திருப்பதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் எம்2 காரின் புதிய அப்டேட் செய்யப்பட்ட 'எம்2 எல்.சி.ஐ' (LCI) காரை கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. ரூ.1.03 கோடி என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் எம்2 எல்சிஐ கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு சில மாதங்கள் ஆகிவிட்டாலும் புதிய எம்2 எல்சிஐ காரை நம் நாட்டில் இதுவரையில் சிலர் மட்டுமே வாங்கி உள்ளனர். இன்னும் சொல்லப்போனால், இந்த காரை இந்தியாவில் முதல் கஸ்டமர் கடந்த மார்ச் மாத இறுதியில்தான் மும்பையில் டெலிவிரி பெற்றார்.

kerala s first bmw m2 lci

பளிச்சிடும் பச்சை நிறத்திலான இந்தியாவின் அந்த முதல் பிஎம்டபிள்யூ எம்2 எல்சிஐ காரை அதன் கஸ்டமர் இந்து முறைப்படி பூஜைகளை செய்து டெலிவிரி பெறும் வீடியோ ஒன்று அப்போது இணையத்தில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், கேரளா மாநிலத்தின் முதல் புதிய பிஎம்டபிள்யூ எம்2 எல்சிஐ கார் இப்போதுதான் சாலைக்கு வந்துள்ளது.

அதாவது, கேரளாவில் முதல் கஸ்டமர் இப்போதுதான் இந்த காரை டெலிவிரி பெற்றுள்ளார். கேரளாவின் அந்த முதல் பிஎம்டபிள்யூ எம்2 எல்சிஐ காரின் கஸ்டமரின் பெயர், போனி வர்கீஸ் (Bonie Varghese) ஆகும். இவர் 10 வருடங்களுக்கும் மேல் அனுபவமிக்க சிறந்த கிராஃபிக்ஸ் டிசைனர் (Graphics Designer) ஆவார்.

பேடிம் (Paytm), ஃப்ரீசார்ஜ் (Freecharge), ஸ்னாப்டீல் (Snapdeal) போன்ற பிரபலமான நிறுவனங்களில் பணியாற்றி, அந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு போனி வர்கீஸும் ஒரு காரணமாக விளங்குகிறார். தற்சமயம் பான்ஸ் (Panze) என்கிற நிறுவனத்தின் டிசைன் பிரிவின் முதன்மை அதிகாரியாகவும், இந்த நிறுவனத்தின் சிஇஓ (CEO) ஆகவும் போனி வர்கீஸ் விளங்குகிறார்.

இந்த அளவிற்கு, இந்தியாவின் முக்கியமான கிராஃபிக்ஸ் டிசைனர்களுள் ஒருவராக விளங்கும் போனி வர்கீஸ், அதன் மூலம் ஈட்டிய வருவாயில் தான் புதிய பிஎம்டபிள்யூ எம்2 எல்சிஐ காரை வாங்கியுள்ளார். போனி வர்கீஸ் பிராண்ட்-நியூ எம்2 எல்சிஐ காரை டெலிவிரி பெறும்போது எடுக்கப்பட்ட வீடியோவை சம்பந்தப்பட்ட பிஎம்டபிள்யூ ஷோரூமே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில், மனைவி, குழந்தை உள்பட நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உடன் ஷோரூமுக்கு சென்று போனி வர்கீஸ் தனது புதிய பிஎம்டபிள்யூ காரை டெலிவிரி பெறுவதை பார்க்க முடிகிறது. முற்றிலும் ஆரஞ்ச் நிறத்தில் இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை போனி வர்கீஸ் வாங்கி உள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்க வேண்டும் என்பது நிச்சயமாக நம்மில் நிறைய பேருக்கு ஆசையாக இருக்கும். அதனை இளம் வயதிலேயே தனது சொந்த முயற்சியில் போனி வர்கீஸ் நிஜமாக்கி உள்ளார். ரூ.1.03 கோடி என்பது புதிய எம்2 எல்சிஐ காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் பல இலட்சங்கள் அதிகமாக வரும்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 10, 2025, 23:36 [IST]
English summary
Keralas first bmw m2 lci bought by bonie varghese in bright orange colour paint
மேலும்... #car delivery #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+