கார்களின் டோர் ஹேண்டில்களில் சிறிய பட்டன் இருக்கும்... எதற்காக தெரியுமா? இவ்ளோ நாளா தெரியாம போச்சே!
கார்களின் டோர் ஹேண்டில்களில் ஏன் சிறிய பட்டன் வழங்கப்படுகிறது? என்பதற்கான காரணத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இன்றைய நவீன கார்களில் ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்படுகின்றன. உண்மையில் தங்கள் கார்களில் என்னென்ன வசதிகள் உள்ளன? என்பது, கார்களின் உரிமையாளர்கள் பலருக்கும் தெரிவதில்லை. இதன் காரணமாக தங்கள் கார்களில் வழங்கப்பட்டுள்ள நிறைய வசதிகளை அவர்கள் பயன்படுத்துவதே கிடையாது.

கார்களின் டோர் ஹேண்டில்களில் வழங்கப்பட்டிருக்கும் சிறிய பட்டன் இதற்கு ஒரு உதாரணம். ஆம், கார்களின் டோர் ஹேண்டில்களில் சிறிய பட்டன் ஒன்று வழங்கப்பட்டிருக்கும். இந்த பட்டன் எதற்காக வழங்கப்பட்டுள்ளது? என்பது கார் உரிமையாளர்கள் பலருக்கும் தெரிவதில்லை. அத்துடன் அவர்களின் காரை பயன்படுத்தும் மற்றவர்களுக்கும் தெரிவதில்லை.

கார் டோர் ஹேண்டில்களில் எதற்காக இந்த சிறிய பட்டன் வழங்கப்படுகிறது? என்பதை தெரிந்து கொள்ள நீங்கள் ஆர்வமாக இருந்தால், அதற்கான விடை எங்களிடம் இருக்கிறது. ஒரு சிலருக்கு இந்த பட்டன் எதற்காக வழங்கப்படுகிறது? என்பது கண்டிப்பாக தெரியும். இருப்பினும் பலருக்கும் தெரிவதில்லை. அவர்களுக்காகவே இந்த பதிவு.

தற்போது விற்பனைக்கு வரும் நிறைய கார்களின் டோர் ஹேண்டில்களில் சிறிய பட்டன் ஒன்று இடம்பெற்றிருக்கும். இந்த பட்டன் நமக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். காரின் 'கீ லெஸ் எண்ட்ரி' சிஸ்டத்தின் (Keyless Entry System) ஒரு பகுதியாக இந்த பட்டன்கள் செயல்படுகின்றன. உங்கள் காரின் கீ ஃபாப் ரிமோட் (Key Fob Remote) உடன் அவை இணைக்கப்பட்டிருக்கும்.

பொதுவாக நாம் காருக்கு உள்ளே செல்லும்போது சட்டை அல்லது பேண்ட் பாக்கெட்டிற்கு உள்ளே கையை விட்டு சாவியை தேடி கொண்டிருப்போம். ஆனால் காரின் டோர் ஹேண்டில்களில் இருக்கும் இந்த பட்டன் காரணமாக, நீங்கள் சாவியை தேடி கொண்டிருக்க வேண்டியதில்லை. சாவி உங்களுக்கு அருகில் இருந்தால் மட்டும் போதுமானது.

சாவி உங்களுக்கு அருகில் இருக்கிறது என்றால், டோர் ஹேண்டில்களில் உள்ள இந்த எஸ்கேஎஸ் (SKS - Smart Key System) பட்டனை அழுத்தி விட்டு உள்ளே செல்லலாம். காரின் டோர் ஹேண்டிலில் உள்ள பட்டனை நீங்கள் அழுத்தும்போது, அருகில் உங்கள் காருக்கான கீ ஃபாப் உள்ளதா? என்பதை, சிஸ்டம் உடனடியாக ஆராயும்.

பொதுவாக 3 அடி தொலைவிற்குள் உங்கள் காரின் கீ ஃபாப் இருக்க வேண்டும். இந்த சிஸ்டத்திற்கு முறையான சிக்னல் கிடைத்தால், அதாவது 3 அடி தொலைவிற்குள் உங்கள் காரின் கீ ஃபாப் இருந்தால், நீங்கள் பட்டனை அழுத்தியவுடன் காரின் கதவுகள் உங்களுக்காக திறக்கும். அதேபோல் நீங்கள் காரை விட்டு வெளியே செல்கிறீர்கள் என்றாலும் கூட, இந்த பட்டனை அழுத்தினால் மட்டும் போதும்.

நீங்கள் காரை விட்டு வெளியேற விரும்பினால், காரின் டோர்களை அடைத்து விட்டு, டோர் ஹேண்டிலில் உள்ள பட்டனை அழுத்தினால் மட்டும் போதுமானது. காரின் கீ ஃபாப்பில் உள்ள 'லாக்' பட்டனை அழுத்த வேண்டியதில்லை. ஆனால் உங்கள் காருக்கான கீ ஃபாப் உங்களிடம் இருக்க வேண்டும் என்பதை மறந்து விட வேண்டாம்.

இப்படி நமக்கு மிகவும் உபயோகமான வசதிகளில் ஒன்றாக இந்த சிறிய பட்டன் உள்ளது. ஆனால் பலரும் இதனை பயன்படுத்துவதில்லை. அல்லது நிறைய பேருக்கு தெரிவதில்லை. நாங்கள் இங்கே கூறியுள்ள தகவல்கள் உங்களுக்கு உதவி செய்யும் என நம்புகிறோம். இன்றைய நாட்களில் ஆட்டோமொபைல் துறையில் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது.

தங்கள் நிறுவனத்தின் காரை பயன்படுத்துபவர்களின் சௌகரியத்திற்காக, ஒவ்வொரு கார் உற்பத்தி நிறுவனமும் புதிய தொழில்நுட்பங்களை கண்டறிந்து கொண்டே இருக்கின்றன. கார் டோர் ஹேண்டில்களில் வழங்கப்படும் பட்டன்களும் இதில் ஒன்றுதான். 'ரெக்வஸ்ட் ஸ்விட்ச்' (Request Switch) அல்லது 'ரெக்வஸ்ட் சென்சார்' (Request Sensor) என்ற பெயர்களிலும் இந்த பட்டன்கள் அறியப்படுகின்றன.

சாவியை போட்டு டோர்களை திறந்து கொண்டிருக்கும் பழைய முறைக்கு பதிலாக, பட்டன்களை அழுத்துவதன் மூலம், டோர்களை திறக்க இந்த தொழில்நுட்பம் உங்களை அனுமதிக்கிறது. ஆனால் இதற்கு உங்கள் காரின் கீ ஃபாப் உங்களிடம் அல்லது உங்களுக்கு அருகே இருக்க வேண்டும். உங்கள் காரின் பின் பகுதியில் உள்ள ட்ரங்க்கையும் கூட, சாவியை சொருகாமலேயே திறக்க இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.


Click it and Unblock the Notifications








