ஹோம் டெலிவெரி செய்யும் ஊழியர்களுக்கு ரூ. 11 லட்சம் டுகாட்டி பைக்கை வழங்கிய கேஎஃப்சி..!!

Written By:

உலகளவில் பிரபலமான உணவகங்களில் கே.எஃப்.சி-க்கு மிகப்பெரிய வாடிக்கையாளர் வட்டம் உண்டு. கே.எஃப்.சி சென்று வாங்கி சாப்பிட்டால் மட்டுமே பலருக்கு சாப்பிட்ட மாதிரி இருக்கும்.

ரூ. 11 லட்சம் டுகாட்டி பைக்கில் ஹோம் டெலிவெரி செய்யும் கேஎஃப்சி ஊழியர்கள்..!!

இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு கால்பதித்த கே.எஃப்.சி, இந்தியாவின் உணவு முறையையே மாற்றிவிட்டது என்றே சொல்லலாம். குறிப்பாக இதன் கோழிக்கறி ருசி ஊர் அறிந்தது.

ரூ. 11 லட்சம் டுகாட்டி பைக்கில் ஹோம் டெலிவெரி செய்யும் கேஎஃப்சி ஊழியர்கள்..!!

கடைக்கு சென்று வாங்குவதோடு மட்டுமில்லாமல், ஆர்டர் செய்த உணவு வகைகளை வீட்டிற்கே வந்து வழங்கும் ஹோம் டெலிவிரி முறையும் கே.எஃப்.சி சிஸ்டத்தில் உண்டு.

ரூ. 11 லட்சம் டுகாட்டி பைக்கில் ஹோம் டெலிவெரி செய்யும் கேஎஃப்சி ஊழியர்கள்..!!

ஹோம் டெலிவெரி செய்வதற்காக ஸ்கூட்டர் மற்றும் 100சிசி திறன் பெற்ற பைக் மாடல்களில் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் சாலைகளில் எப்போதும் பறந்துக்கொண்டே இருப்பார்கள்.

ரூ. 11 லட்சம் டுகாட்டி பைக்கில் ஹோம் டெலிவெரி செய்யும் கேஎஃப்சி ஊழியர்கள்..!!

இதுபோன்ற குறைந்த சிசி திறன் பெற்ற வாகனங்களை விடுத்து கே.எஃப்.சி-யின் ஹோம் டெலிவெரி பாய்ஸ் இனிமேல் டுகாட்டி ஹைப்பர்மோட்டார்ட் 939 பைக்கில் பறக்க போகிறார்கள்.

Recommended Video - Watch Now!
Under-Aged Rider Begs The Policewomen To Spare Him - DriveSpark
ரூ. 11 லட்சம் டுகாட்டி பைக்கில் ஹோம் டெலிவெரி செய்யும் கேஎஃப்சி ஊழியர்கள்..!!

ஆமாம். இது உண்மை. ஆனால் இந்தியாவில் அல்ல. மலேசியாவை சேர்ந்த கே.எஃப்.சி உணவகத்தின் ஊழியர்களுக்கு தான் இந்த ஜாக்பாட் அடித்துள்ளது.

ஆர்டர் கொடுத்த வாடிக்கையாளர்களிடம் பொருட்களை கொண்டு சேர்ப்பதில் காலதாமதம் ஏற்படுவதால் கேஎஃப்சி இந்த முடிவை எடுத்துள்ளது.

ரூ. 11 லட்சம் டுகாட்டி பைக்கில் ஹோம் டெலிவெரி செய்யும் கேஎஃப்சி ஊழியர்கள்..!!

மலேசியாவின் சாலைகளில் டுகாட்டி

ஹைப்பர்மோட்டார்ட் 939 பைக்கில் பறக்கும் ஊழியர்கள், தலையில் கோழி கொண்டை கொண்ட ஹெல்மெட்டுகளை அணிந்திருப்பது அங்கு பலரையும் கவர்ந்துள்ளது.

ரூ. 11 லட்சம் டுகாட்டி பைக்கில் ஹோம் டெலிவெரி செய்யும் கேஎஃப்சி ஊழியர்கள்..!!

ஹெல்மெட்டில் மட்டுமில்லாமல், டுகாட்டி பைக்கின் டேங்க் மற்றும் முகப்பு பகுதிகளில் கே.எஃப்.சி நிறுவனத்தின் முத்திரை ஸ்டிக்கர் ஓட்டப்பட்டு டிசைனிங் செய்யப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, பெரிய பிராண்ட கொண்ட வாகனத்தை பயன்படுத்தும் இரண்டாவது நிறுவனமாக உள்ளது கே.எஃப்.சி.

ரூ. 11 லட்சம் டுகாட்டி பைக்கில் ஹோம் டெலிவெரி செய்யும் கேஎஃப்சி ஊழியர்கள்..!!

முன்னதாக இந்த டிரென்டிங்கை ஊபர் கால்டாக்ஸி சேவை ஆரம்பித்து வைத்தது. அது தனது வாடிக்கையாளர்களுக்காக பல ஆடம்பர கார் மாடல்களை வாடகை கார்களாக பயன்படுத்தியது.

ரூ. 11 லட்சம் டுகாட்டி பைக்கில் ஹோம் டெலிவெரி செய்யும் கேஎஃப்சி ஊழியர்கள்..!!

கேஎஃப்சி நிறுவனத்திற்கு டுகாட்டி ஆகப்பொருத்தமான ஒரு இணைப்பு தான். காரணம் இரண்டு நிறுவனங்களுக்குமே தீம் கலரிங் சிவப்பு . அதனால் எளிதாக டிசைனிங் கோட்பாடுகள் ஒத்துப்போகும்.

ரூ. 11 லட்சம் டுகாட்டி பைக்கில் ஹோம் டெலிவெரி செய்யும் கேஎஃப்சி ஊழியர்கள்..!!

தவிர ஹோம் டெலிவெரி செய்யும் ஊழியர்கள் அணியும் ஹெல்மெட்டில் கோழி கொண்டை வடிவமைப்பு இருப்பது அதற்கு ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தி தந்துள்ளது.

ரூ. 11 லட்சம் டுகாட்டி பைக்கில் ஹோம் டெலிவெரி செய்யும் கேஎஃப்சி ஊழியர்கள்..!!

டுகாட்டி ஹைப்பர்மோட்டார்ட் மோட்டார் சைக்கிளில் 937 சிசி சிங்கிள் சிலிண்டர் உள்ளது. இது அதிகப்பட்சமாக 110 பிஎச்பி பவர் மற்றும் 95 என்.எம் டார்க் திறன் வழங்கும்.

ரூ. 11 லட்சம் டுகாட்டி பைக்கில் ஹோம் டெலிவெரி செய்யும் கேஎஃப்சி ஊழியர்கள்..!!

6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த பைக் லாங் டிரேவல் சஸ்பென்ஷனை பெற்றுள்ளது. மல்டி-பர்பஸ் தேவைக்கான இந்த பைக் 204 கிலோ எடைக்கொண்டது.

ரூ. 11 லட்சம் டுகாட்டி பைக்கில் ஹோம் டெலிவெரி செய்யும் கேஎஃப்சி ஊழியர்கள்..!!

பைரெல்லி டைப்ளோ டயர்கள், பிரம்போ பிரேக்குகள் மற்றும் 43 மிமீ யுஎஸ்டி ஃபோர்க்ஸ் இந்த பைக்கில் இருப்பது இதன் உறுதிப்பாட்டை சிறப்பாக எடுத்துக்கூறுகிறது.

ரூ. 11 லட்சம் டுகாட்டி பைக்கில் ஹோம் டெலிவெரி செய்யும் கேஎஃப்சி ஊழியர்கள்..!!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியிலும் பிரபல மாடலாக உள்ள டுகாட்டி ஹைப்பர்மோட்டார் 939 மோட்டார் சைக்கிள் ரூ. 11,16,000 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனைக்கு உள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: KFC Using Ducati Hypermotord Bikes to Deliver Chicken. Click for Details...
Story first published: Thursday, February 15, 2018, 8:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark