மஹிந்திரா தாரை வாங்க ஆர்வமாக இருக்கும் ‘கேஜிஎஃப்’ ஹீரோயின்!! “எங்களுக்கும் திருப்பி அடிக்க தெரியும்...”
ஆஃப்-ரோடு பிரியர்களிடையே பிரபலமான வாகனமாக விளங்கும் மஹிந்திரா தாரை வாங்குவதில் ஆர்வமாக இருப்பதாக பிரபல நடிகை ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். யார் அவர்? என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

சினிமா பிரபலங்களையும், ஆட்டோமொபைல் துறையையும் பிரிக்கவே முடியாது என்றுதான் கூற வேண்டும். இதனாலேயே சினிமா நட்சத்திரங்கள் பலர் பல்வேறு விதமான சொகுசு கார்களை தங்களது கேரஜில் வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர். இவ்வாறு எத்தனை லக்சரி கார்கள் இருந்தாலும், சந்தையில் அறிமுகமாகும் புதிய காரை வாங்கிவிட வேண்டும் என்கிற ஆர்வம் சினிமா பிரபலங்கள் இடையே அதிகமாக இருக்கிறது.

அவ்வாறு, தான் புதிய தார் வாகனத்தை வாங்குவதில் ஆர்வமாக உள்ளதாகவும், அதற்காக தயாராகி வருவதாகவும் நடிகை ரவீனா தண்டோன் தெரிவித்துள்ளார். 90களில் பாலிவுட்டில் வேகமாக வளர்ந்துவரும் நடிகையாக விளங்கிய ரவீனா தண்டோன் டுவிட்டரில் மஹிந்திரா தார் வாகனத்தை பற்றி மேலும் தெரிவிக்கையில், "எனது டிரைவிங்கை மஹிந்திரா ஜீப் வாகனத்தில் கற்றேன், அதனை தொடர விரும்புகிறேன்" என கூறியுள்ளார்.

மேலும், அந்த டுவிட்டர் பதிவில் மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவையும் டேக் செய்துள்ள ரவீனா தண்டோன், மஹிந்திரா ஜீப் கல்லூரி காலத்தில் தனது முதல் வாகனம் என குறிப்பிட்டுள்ளார். நடிகை ரவீனாவின் இந்த டுவிட்டர் பதிவை கண்ட ஆனந்த் மஹிந்திரா பதிலுக்கு, "க்ளப் மஹிந்திரா ரெசார்ட்டிற்கு தார் வாகனத்தை கொண்டுவருவது போல் எதுவும் இணையில்லை (மஹிந்திரா ரைஸுக்கு இரட்டை பலன்)" என தெரிவித்துள்ளார்.

உண்மையில் இந்த உரையாடலை ஆரம்பித்தது என்னவோ ஆனந்த் மஹிந்திரா தான். க்ளப் மஹிந்திரா பிராண்டிற்கு ரவீனா தண்டோன் நடித்து கொடுத்த தொலைக்காட்சி கமர்ஷியல் வீடியோவை ரவீனா தண்டோனை டேக் செய்து ஆனந்த் மஹிந்திரா பதிவிட, அதற்கு பதிலளிக்கும் விதமாகவே, தான் புதிய தார் வாகனத்தை வாங்க தயாராகி வருவதாகவும், கல்லூரி காலத்தில் தனது முதல் வாகனம் மஹிந்திரா ஜீப் எனவும் ரவீனா தண்டோன் தெரிவித்துள்ளார்.

இயக்குனரும் மற்றும் தயாரிப்பாளருமான ரவி தண்டோனின் மகளான ரவீனா தண்டோன் 1991இல் முதன்முதலாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் இவரது நடிப்பில் வெளிவந்த தில்வாலே, மோஹ்ரா, கில்லாடியோன், கா கில்லாடி, ஜிட்டி உள்ளிட்ட பாலிவுட் படங்கள் வெற்றியை பெற்றதை அடுத்து பாலிவுட் சினிமா துறையில் கவனிக்கத்தக்க நடிகையாக ரவீனா உருவெடுத்தார்.

மஹிந்திரா தாரை பற்றி கூற வேண்டுமென்றால், ஆஃப்-ரோடு பயணங்களை விரும்புவோரின் பிரதான தேர்வுகளுள் ஒன்றாக விளங்கும் தாரின் 2ஆம் தலைமுறை மாடல் கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் தலைமுறை தாரை காட்டிலும், 2ஆம் தலைமுறை தார் பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

எந்த அளவிற்கு என்றால், தற்சமயம் தார் வாகனத்தை முன்பதிவு செய்துவிட்டு டெலிவிரிக்காக வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய கால அளவு ஆனது அதிகப்பட்சமாக 1 வருடம் வரையில் உள்ளது. தற்சமயம் மஹிந்திராவின் இந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம் 3-கதவு தேர்வில் மட்டுமே விற்பனைக்கு கிடைத்துவரும் நிலையில், எதிர்காலத்தில் 5-கதவு தேர்விலும் அறிமுகப்படுத்த மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இன்னும் சரியாக சொல்லப்போனால், 5-கதவு தார் மாடலை வடிவமைக்கும் பணியில் ஏற்கனவே மஹிந்திரா & மஹிந்திரா இறங்கிவிட்டது. 5-கதவு தார் நடைமுறை பயன்பாட்டிற்கு இன்னும் ஏற்றதாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போதைய 3-கதவு தார் மாடலானது முழுக்க முழுக்க ஆஃப்-ரோடு பயணங்களை வேண்டுவோர்க்கும், தனியாகவோ அல்லது மிகவும் சிறிய குழுவுடனோ பயணிக்க விரும்புவோர்க்கும் மட்டுமே ஏற்றதாக உள்ளது.

ஆனால் புதிய 5-கதவு தார் ஆனது அதிக எண்ணிக்கையில் இருக்கைகளுடன் குடும்பத்துடன் பயணிப்பதற்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. கூடுதல் இடவசதி மட்டுமின்றி, செயற்கைக்கோள் நாவிகேஷன், ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே உள்ளிட்டவற்றை ஏற்கக்கூடிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பையும் அளவில் பெரியதாக 5-கதவு தாரில் எதிர்பார்க்கிறோம்.

இதனுடன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், பவர் ஜன்னல் கண்ணாடிகள், க்ரூஸ் கண்ட்ரோல், பல-செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம், சாவியில்லா நுழைவு, டிராக்ஷன் கண்ட்ரோல், இபிடி உடன் ஏபிஎஸ், ரிவர்ஸில் பார்க்கிங் செய்வதற்கு உதவியாக சென்சார்கள், இரட்டை காற்றுப்பைகள் உள்பட தொழிற்நுட்ப வசதிகள் மிகுந்ததாகவும் 5-கதவு தாரை கொண்டுவர மஹிந்திரா விரும்பும்.


Click it and Unblock the Notifications








