கேஜிஎஃப் படத்துக்கு மியுசிக் போட்டது இவர்தானா? ஆளை பார்த்தால் சுத்தமா தெரியல! கார் ஷோரூமில் எல்லாரும் ஹாப்பி!!
கே.ஜி.எஃப் (KGF) திரைப்படத்தை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். ஏனெனில், கன்னட மொழியில் உருவாகினாலும், நம் தமிழ்நாடு உள்பட இந்திய அளவில் இந்த திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. தென்னிந்தியாவை தாண்டி வட இந்தியாவிலும் பலரும் கே.ஜி.எஃப் திரைப்படத்தை ஆர்வமாக பார்த்தனர். இந்த திரைப்படத்தில் பணியாற்றியவர்களில் முக்கியமானவர்களுள் ஒருவர், படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் (Ravi Basrur) ஆவார். இவர், கர்நாடகாவில் கார் ஷோரூம் ஒன்றில் கவனத்தை ஈர்க்கும் வகையில் அசத்தலான காரியத்தை செய்துள்ளார். அது என்ன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு மொழியிலும் ஒரு திரைப்பட இசையமைப்பாளர் புகழின் உச்சத்தில் இருப்பார். வேற்று மொழி திரைப்படங்களில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தாலும் அவர்களால் அங்கு பெரிய அளவிற்கு வரவேற்பை பெற முடியாது. உதாரணத்திற்கு, நம் கோலிவுட்டை சேர்ந்த இசையமைப்பாளர் அனிருத். அதேபோல், கன்னட சினிமா உலகில் இருக்கும் இசையமைப்பாளர், ரவி பஸ்ரூர்.

கடந்த 10 வருடங்களில், மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் புனீத் ராஜ்குமாரில் இருந்து நடிகர் உபேந்திர ராவ் வரையிலானோரின் திரைப்படங்களில் இசையமைத்து இருந்தாலும், கடந்த 2018ஆம் ஆண்டில் வெளிவந்த கேஜிஎஃப் முதல் பாகம் திரைப்படம் தான் ரவி பஸ்ரூரின் சினிமா வாழ்க்கையை திருப்பி போட்டது. கேஜிஎஃப் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் நாடு முழுவதும் சூப்பர் டூப்பர் ஹிட்.
குறிப்பாக, "தந்தானே நானே தானின்னனானோ" என்கிற தாய்- மகன் இடையேயான பாச பாடல் ஒலிக்காத இடமே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். இதன் மூலம் கேஜிஎஃப் 2ஆம் பாகத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்ற ரவி பஸ்ரூரின் கையில் தற்சமயம் கணிசமான பட வாய்ப்புகள் குவிந்துக் கிடக்கின்றன. இதற்கிடையில், கர்நாடகாவில் உள்ள கார் ஷோரூம் ஒன்றில் புதிய மாருதி சுஸுகி டிசைர் காரை ரவி பஸ்ரூர் அறிமுகம் செய்துள்ளார்.
மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில்தான் அதன் புத்தம் புதிய மேம்படுத்தப்பட்ட டிசைர் காரை அறிமுகம் செய்தது. புதிய டிசைர் காரை மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தியது என்றாலும், கர்நாடகாவில் இந்த ஒரு குறிப்பிட்ட ஷோரூமில் அறிமுகப்படுத்தி உள்ளதன் மூலமாக கர்நாடகாவின் உடுப்பி பகுதியில் புதிய டிசைர் காரை கேஜிஎஃப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் அறிமுகம் செய்துள்ளதாக ஷோரூம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, இதன் பின்னரே கர்நாடகவின் உடுப்பி பகுதியில் புதிய டிசைர் காரை மக்கள் வாங்க ஆரம்பிப்பர். உடுப்பி நகரம் ஆனது கர்நாடகா மாநிலத்தின் மேற்கு பகுதியில் மங்களூருவுக்கு அருகே அரபிக்கடலை ஒட்டி அமைந்துள்ள கடற்கரை நகரமாகும். உடுப்பி ஓட்டலை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். உடுப்பி நகரத்தில் இருந்துதான் உடுப்பி ஓட்டலுக்கான பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
இத்தகைய நகரத்தில், புகழ்பெற்ற இசையமைப்பாளரின் கையால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய மாருதி சுஸுகி டிசைர் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், பழைய டிசைருக்கும், புதிய டிசைருக்கும் தோற்றத்தில் பெரிய அளவில் அப்டேட்கள் கொண்டுவரப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் செடான் ரக காராக டிசைர் விளங்குகிறது. தற்போது மாடர்ன் தோற்றத்திற்கு மேம்படுத்தப்பட்டு உள்ளதால், இந்த காரின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மாருதி சுஸுகி டிசைர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.79 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த காருக்கான முன்பதிவுகள் ரூ.11,000 டோக்கன் தொகை உடன் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. புதிய டிசைர் காரில் முக்கியமான அம்சமாக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றப்படி, புதிய டிசைர் காரும் டீசல் என்ஜின் உடன் கிடைக்காது. பெட்ரோல் & சிஎன்ஜி ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேஜிஎஃப் படத்தில் பணியாற்றியவர்கள் பலரை பற்றி தெரிந்தவர்களுக்கு கூட இந்த படத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரை பற்றி தெரியவில்லை. ஏனெனில், அந்த அளவிற்கு அமைதியானவராக விளங்கும் ரவி பஸ்ரூரின் வாயிலாக உடுப்பி பகுதியில் புதிய மாருதி சுஸுகி டிசைர் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது அந்த பகுதி மக்களுக்கு கிடைத்த பாக்கியம் ஆகும். ரவி பஸ்ரூர் அறிமுகம் செய்ததன் காரணமாகவே பலரும் இந்த மாருதி காரை விரும்பி வாங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








