அடையாளமே தெரியல... 4 கோடி ரூபா கார்ல போனது அவங்க பெத்த பொண்ணா... அம்மாவை விட ரொம்ப அழகா இருக்காங்களே...
திரைப்பட நடிகைகள் என்றாலே, மிகவும் விலை உயர்ந்த கார்களில் வலம் வருவது வழக்கமான ஒரு விஷயம்தான். அதிலும் குறிப்பாக பாலிவுட் திரையுலகை சேர்ந்த நடிகைகள் பலரும், பல கோடி ரூபாய் மதிப்புடைய கார்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு குஷி கபூரும் (Khushi Kapoor) விதிவிலக்கு அல்ல. 23 வயது மட்டுமே நிரம்பிய இவர், பாலிவுட் திரையுலகில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவர் அடிப்படையிலேயே திரைத்துறையை சேர்ந்த குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
ஆம், பிரபல திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூர்தான் (Boney Kapoor), குஷி கபூரின் தந்தை ஆவார். தாய் ஸ்ரீதேவி (Sridevi). எனவே அறிமுகமே தேவை இல்லை என்னும் அளவிற்கு, மிகவும் பிரபலமான குடும்ப பின்னணி கொண்டவராக நடிகை குஷி கபூர் அறியப்படுகிறார்.

இந்த சூழலில், குஷி கபூரின் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதில், நாம் பார்ப்பது மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் (Mercedes Benz G-Class) கார் ஆகும். இந்த காரின் முன் பக்க பயணியின் இருக்கையில் குஷி கபூர் அமர்ந்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அவர் இந்த காரை புதிதாக வாங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது இந்திய சந்தையில் கிடைக்க கூடிய மிகவும் விலை உயர்ந்த கார்களில் ஒன்றாக உள்ளது. தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப விலையே 2.55 கோடி ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 4 கோடி ரூபாயாக உள்ளது.

இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் இந்த காரின் எந்த வேரியண்ட்டை குஷி கபூர் வாங்கியுள்ளார்? என்பது உறுதியாக தெரியவில்லை. 3.0 லிட்டர் டீசல், 4.0 லிட்டர் பெட்ரோல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. மிகவும் விலை உயர்ந்த கார் என்பதால், சொகுசு வசதிகளுக்கு சற்றும் பஞ்சமில்லாத ஒரு தயாரிப்பாக இது இருக்கிறது.
மல்டி-ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல், வைடு ஸ்க்ரீன் காக்பிட், பர்ம்ஸ்டர் சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் மற்றும் 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங் என ஏகப்பட்ட வசதிகள் எல்லாம் இந்த காரில் வழங்கப்படுகின்றன. இது இந்தியாவின் திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் போன்றவர்களிடம் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்றாகும்.
இதில், ஆனந்த் அம்பானி (Anant Ambani), மஹேந்திர சிங் டோனி (Mahendra Singh Dhoni), ஹர்திக் பாண்டியா (Hardik Pandya), ஸ்ரேயாஸ் அய்யர் (Shreyas Iyer), சாரா அலி கான் (Sara Ali Khan) மற்றும் ரன்பீர் கபூர் (Ranbir Kapoor) போன்றவர்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender) மற்றும் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் (Toyota Land Cruiser) போன்ற கார்களுக்கு எல்லாம், மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








