செம ஐடியா! காஸ்ட்லியான காரை ஹோட்டலாக மாற்றிய கணவன்-மனைவி! விலை எவ்ளோனு தெரிஞ்சா ஆடி போயிருவீங்க!
இந்தியாவில் பிஸ்னஸ் (Business) தொடங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரு சிலர் மிகவும் வித்தியாசமான முறையில் தொழில் செய்கின்றனர். ஆடி (Audi) காரில் இளைஞர் ஒருவர் டீ விற்பனை செய்வது தொடர்பான செய்தியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாங்கள் உங்களுக்கு வழங்கியது நினைவிருக்கலாம்.
இந்த வரிசையில் இன்னொரு நபர், கியா கேரன்ஸ் (Kia Carens) காரில் ஹோட்டல் (Hotel) நடத்தி வருவது குறித்த தகவல் நமக்கு கிடைத்துள்ளது. இது தொடர்பான வைரல் வீடியோ (Viral Video), யூடியூப் (YouTube) தளத்தில் தற்போது பதிவிடப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான ஐடியா குறித்த சுவாரஸ்யமான தகவல்களைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

கியா கேரன்ஸ் காரில், ஹோட்டல் நடத்துபவர் டெல்லியை (Delhi) சேர்ந்தவர் ஆவார். தன் மனைவி சமைத்து வழங்கும் உணவுகளை, கியா கேரன்ஸ் காரின் பின் பகுதியில் வைத்து அவர் விற்பனை செய்து வருகிறார். இதற்காக கியா கேரன்ஸ் காரின் மூன்றாவது வரிசை இருக்கைகளை அவர் மடித்து வைத்து கொள்கிறார்.
இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ள கியா கேரன்ஸ் கார், புத்தம் புதியது ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா கேரன்ஸ் காரின் ஆரம்ப விலை (Price) 10.45 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 19.45 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஹோட்டலாக மாற்றப்பட்டிருப்பது கியா கேரன்ஸ் காரின் என்ன வேரியண்ட்? என்பது தெரியவில்லை. ஒருவேளை அது டாப் வேரியண்ட்-ஆக இருந்தால், ஆன் ரோடு விலை சுமார் 24 லட்ச ரூபாய் வரை வரும். இவ்வளவு விலை உயர்ந்த காரை ஹோட்டலாக மாற்றியிருப்பதன் மூலம், இந்த நபர் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
கியா கேரன்ஸ் காரில், 115 பிஎஸ் பவர் மற்றும் 144 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் (Petrol), 115 பிஎஸ் பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.5 லிட்டர் டீசல் (Diesel) இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
இதுதவிர 160 பிஎஸ் பவர் மற்றும் 253 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் இந்த காரில் கொடுக்கப்படுகிறது. இப்படி பல்வேறு இன்ஜின் ஆப்ஷன்கள் உடன், வாடிக்கையாளர்களுக்கு தேவையான அதிநவீன வசதிகளும் (Features) கியா கேரன்ஸ் காரில் ஏராளமாக வாரி வழங்கப்பட்டுள்ளன.
இதில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பாஸ் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், ஆம்பியண்ட் லைட்கள், முன் பகுதியில் வென்டிலேஷன் அம்சத்துடன் கூடிய இருக்கைகள், லெதரேட் அப்ஹோல்ஸ்ட்ரி, எலெக்ட்ரிக் சன்ரூஃப், மல்டி ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட புத்தம் புதிய கார் ஒன்றை ஹோட்டலாக மாற்றியிருப்பது உண்மையிலேயே வித்தியாசமான முடிவாகதான் தெரிகிறது. இந்த வித்தியாசமான முடிவை எடுத்திருப்பதன் மூலமாகவே, இந்த காரின் உரிமையாளர் தற்போது நம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications








