மாருதிலாம் ஓரமா நில்லு! போலீசுக்கு இவ்ளோ விலை உயர்ந்த காரா! பச்சை கொடி காட்ட முதல் அமைச்சரே வந்துட்டாரு!
இந்தியாவின் எம்பிவி செக்மெண்ட்டில் தனி சாம்ராஜ்யம் நடத்தி கொண்டுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga). மும்பை, டெல்லி, குர்கான் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த காவல் துறை அதிகாரிகளும், மாருதி சுஸுகி எர்டிகா காரை, தங்கள் பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் சமீப காலமாக மாருதி சுஸுகி எர்டிகாவிற்கு பதிலாக, அதே எம்பிவி ரகத்தை சேர்ந்த கியா கேரன்ஸ் (Kia Carens) காரை, காவல் துறை அதிகாரிகள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதற்கு பஞ்சாப் காவல் துறை ஒரு உதாரணம். கடந்த 2024ம் ஆண்டில், 71 கியா கேரன்ஸ் கார்களை பஞ்சாப் காவல் துறை வாங்கியது.

இந்த வரிசையில் தற்போது கோவா காவல் துறையிலும், கியா கேரன்ஸ் கார்கள் பணியில் இணைக்கப்பட்டுள்ளன. இதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கோவா முதல் அமைச்சர் பிரமோத் சாவந்த் (Pramod Sawant) மற்றும் காவல் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களை, கோவா முதல் அமைச்சர் பிரமோத் சாவந்த், தனது அதிகாரப்பூர்வமான எக்ஸ் பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ளார். முதல் அமைச்சர் கொடி அசைத்து, இந்த கார்களின் சேவையை தொடங்கி வைத்துள்ள நிலையில், கோவாவின் பல்வேறு பகுதிகளில், அவை பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இந்திய சந்தையில் கியா நிறுவனம் தற்போது கியா கேரன்ஸ் மட்டுமல்லாது, கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) மற்றும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV) ஆகிய கார்களையும் விற்பனை செய்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இதில், கியா கேரன்ஸ் காரின் விலை 11.41 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. அதே நேரத்தில் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் விலை 11.50 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. மறுபக்கம் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரின் விலை 17.99 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது.
இவை அனைத்துமே கியா இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இதில், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் மற்றும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி ஆகிய 2 கார்களும், இந்திய சந்தைக்கு புது வரவு ஆகும்.
கியா கேரன்ஸ் க்ளாவிஸ் காரானது, கடந்த மே மாத இறுதியில்தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அதை தொடர்ந்து கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி எலெக்ட்ரிக் காரானது, கடந்த ஜூலை மாத மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் கியா கேரன்ஸ் காரானது, கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா கேரன்ஸ் காரில், சக்தி வாய்ந்த இன்ஜின் உடன், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள், தாராளமான இடவசதி மற்றும் பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. இதன் காரணமாகவே கியா கேரன்ஸ் கார், இந்தியாவை சேர்ந்த பல்வேறு பகுதிகளின் காவல் துறையின் விருப்பமான ஆப்ஷனாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications








