30 லட்ச ரூபாய் காரை டெலிவரி எடுத்த அடுத்த வினாடியே நடந்த சம்பவம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு ஒதறுது

30 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரை டெலிவரி எடுத்த அடுத்த வினாடியே நடந்த சம்பவத்தின் அதிர்ச்சிகரமான வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

30 லட்ச ரூபாய் காரை டெலிவரி எடுத்த அடுத்த வினாடியே நடந்த சம்பவம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு ஒதறுது

சொந்தமாக ஒரு புதிய காரை வாங்க வேண்டும் என்ற கனவு பலருக்கும் இருக்கிறது. நடுத்தர வர்க்க மக்கள் புதிய காரை வாங்க வேண்டும் என்றால், பணத்தை சேமிப்பதற்காக சில தியாகங்களை செய்ய வேண்டும். புதிய காரை வாங்குவது என்பது தியாகம் மட்டுமல்லாது, பொருளாதார திட்டமிடல், ஆய்வு என பல அம்சங்களை உள்ளடக்கியதாக உள்ளது.

30 லட்ச ரூபாய் காரை டெலிவரி எடுத்த அடுத்த வினாடியே நடந்த சம்பவம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு ஒதறுது

அதே சமயம் கார் என்பது ஒரு சிலருக்கு, போக்குவரத்திற்கு பயன்படும் வாகனம் என்றில்லாமல், அவர்களின் அந்தஸ்தை வெளிக்காட்ட பயன்படும் கருவியாக இருக்கிறது. ஆக மொத்தத்தில் கஷ்டப்பட்டு பணத்தை சேமித்து கார் வாங்கும் நடுத்தர வர்க்க என்றாலும் சரி அல்லது அந்தஸ்தை வெளிக்காட்ட கார் வாங்கும் பணக்காரர்கள் என்றாலும் சரி, புதிய கார் வாங்கும்போது கிடைக்கும் இன்பம் அலாதியானது.

30 லட்ச ரூபாய் காரை டெலிவரி எடுத்த அடுத்த வினாடியே நடந்த சம்பவம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு ஒதறுது

நல்ல நாள் பார்த்து, காரில் ரிப்பன் மற்றும் பூக்களை கட்டி, கேக் வெட்டி, ஷோரூமில் இருந்து வெளியே ஓட்டி வரும்போது கிடைக்கும் மகிழ்ச்சியான அனுபவத்திற்கு ஈடு இணையில்லை. அதே சமயம் புதிய கார் டெலிவரிகள் உடனடியாக விபத்தில் முடிந்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை.

30 லட்ச ரூபாய் காரை டெலிவரி எடுத்த அடுத்த வினாடியே நடந்த சம்பவம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு ஒதறுது

உண்மையில் புதிய காரை டெலிவரி எடுக்கும்போது உற்சாக மிகுதியால், ஹார்ட் பீட் எகிறி கொண்டிருக்கும். அப்படிப்பட்ட ஒரு சூழலில் டிரைவிங்கில் போதிய அனுபவம் இல்லை என்றால், விபத்து நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். இது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று சமீபத்தில் அரங்கேறியுள்ளது.

30 லட்ச ரூபாய் காரை டெலிவரி எடுத்த அடுத்த வினாடியே நடந்த சம்பவம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு ஒதறுது

கியா கார்னிவல் கார் தற்போது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் வெகுவாக பிரபலமாகியுள்ளது. இது பிரீமியம் எம்பிவி ரக கார் ஆகும். டொயோட்டா இன்னோவா காரை விட கியா கார்னிவல் மிக சிறப்பாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் நடந்த ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில், கியா நிறுவனம் கார்னிவலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

30 லட்ச ரூபாய் காரை டெலிவரி எடுத்த அடுத்த வினாடியே நடந்த சம்பவம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு ஒதறுது

தென் கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் செல்டோஸ் எஸ்யூவி காருக்கு பிறகு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்த இரண்டாவது கார் கார்னிவல்தான். அட்டகாசமான வசதிகளுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள கியா கார்னிவல் காரை, வாடிக்கையாளர் ஒருவர் புக்கிங் செய்திருந்தார். அவருக்கு சமீபத்தில் அந்த கார் டெலிவரி கொடுக்கப்பட்டது.

30 லட்ச ரூபாய் காரை டெலிவரி எடுத்த அடுத்த வினாடியே நடந்த சம்பவம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு ஒதறுது

ஆனால் டெலிவரி எடுத்த உடனேயே டீலர்ஷிப்பின் சுவரில் மோதி அந்த கார் விபத்திற்குள்ளாகியுள்ளது. டெலிவரி பெற்ற அடுத்த வினாடியே ஷோரூம் காம்பவுண்டு சுவரில் கார் மோதியதற்கு, டிரைவரின் கவனக்குறைவுதான் காரணமாக பார்க்கப்படுகிறது. எனினும் இந்த கியா கார்னிவல் காரின் விலை எவ்வளவு? என்பது சரியாக தெரியவில்லை.

30 லட்ச ரூபாய் காரை டெலிவரி எடுத்த அடுத்த வினாடியே நடந்த சம்பவம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு ஒதறுது

கியா கார்னிவல் காரின் பேஸ் வேரியண்ட்டின் விலை 24.95 லட்ச ரூபாய். அதே சமயம் டாப் வேரியண்ட்டின் விலை 33.95 லட்ச ரூபாய். இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். விபத்துக்குள்ளான காரின் வேரியண்ட் சரியாக தெரியாத சூழலில், எப்படி இருந்தாலும் ஆன் ரோடு விலை 30 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

30 லட்ச ரூபாய் காரை டெலிவரி எடுத்த அடுத்த வினாடியே நடந்த சம்பவம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு ஒதறுது

இவ்வளவு விலை உயர்ந்த ஒரு கார், ஷோரூமில் இருந்து தனது வாழ்க்கையை தொடங்கிய அடுத்த வினாடியே விபத்தில் சிக்குவது என்பது மிகவும் வேதனைக்குரிய ஒரு விஷயம்தான். தற்போது அந்த விபத்தின் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் ஷோரூம் ஊழியர் போல் தோற்றமளிக்கும் ஒருவர் டிரைவருக்கு ஒரு சில டிப்ஸ்களை வழங்கி கொண்டுள்ளார்.

30 லட்ச ரூபாய் காரை டெலிவரி எடுத்த அடுத்த வினாடியே நடந்த சம்பவம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு ஒதறுது

அந்த சமயத்தில் டிரைவர் காரை இயக்கி விபத்தில் சிக்க வைத்து விட்டார். டிரைவர் பக்க டோர் மூடாமல் இருப்பதையும் இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது. ஆர்வமிகுதி மற்றும் பதற்றம் காரணமாக இவ்விபத்து நடைபெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. விபத்து நடைபெற்ற உடனே டிரைவர், கோ-டிரைவர் என முன்பக்கத்தின் 2 ஏர்பேக்குகளும் விரிவடைந்து விட்டன.

30 லட்ச ரூபாய் காரை டெலிவரி எடுத்த அடுத்த வினாடியே நடந்த சம்பவம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு ஒதறுது

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவம் எங்கு நடைபெற்றது? என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் வீடியோவில் சிலர் தமிழ் பேசுவதை கேட்க முடிகிறது. எனவே தமிழகத்தில் உள்ள ஏதேனும் ஒரு கியா டீலர்ஷிப்பில் இந்த விபத்து நடைபெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

30 லட்ச ரூபாய் காரை டெலிவரி எடுத்த அடுத்த வினாடியே நடந்த சம்பவம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு ஒதறுது

விபத்தில் சிக்கிய கியா கார்னிவல் காரை சரி செய்ய அதிக செலவு ஆகலாம். எனினும் ஷோரூம் வளாகத்தை விட்டு வெளியே வரும் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பாகவே, மிகவும் விருப்பமான கார் விபத்தில் சிக்கியதால் ஏற்படும் வலியும், மன உளைச்சலும், செலவுடன் ஒப்பிடும்போது பெரியது. விபத்தில் சிக்கிய கார், சர்வீஸ் சென்டரில், சில நாட்களை கழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

30 லட்ச ரூபாய் காரை டெலிவரி எடுத்த அடுத்த வினாடியே நடந்த சம்பவம்... வீடியோ பாக்கறப்பவே ஒடம்பு ஒதறுது

அதனை மீண்டும் சாலையில் ஓட்டுவதற்கு ஏற்ப மெக்கானிக்குகள் தயார் செய்ய ஒரு சில நாட்கள் ஆகலாம். அதுவரை அந்த காரின் உரிமையாளர் காத்திருந்தாக வேண்டும். இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தின் வீடியோவை BMC HD Videos வெளியிட்டுள்ளது. சமூக வலை தளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

பொதுவாக புதிய கார்களை டெலிவரி எடுக்கும்போது ஒரு வித படபடப்பு வருவது இயற்கைதான். எனவே உங்களுக்கு முழு நம்பிக்கை இல்லாவிட்டால், அனுபவம் வாய்ந்த ஒருவரை காரை ஓட்ட வைக்கலாம். அதிலும் குறிப்பாக குறுகலான இடமாக இருந்தால் கார் டிரைவிங்கில் கைதேர்ந்த ஒருவரை பயன்படுத்துவதுதான் சரியானதாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kia Carnival Premium MPV Crashed Into Showroom Compound Wall During Delivery - Watch Viral Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X