உலக கோப்பை கால்பந்து தொடரில் இந்தியாவுக்கு முதல் முறையாக வாய்ப்பு! கியாவுக்கு சுனில் சேத்ரி நன்றி!

பிபா அமைப்பின் பார்ட்னர் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உதவியால், நாளை மறுநாள் தொடங்கவுள்ள உலக கோப்பை கால்பந்து தொடரில், இந்தியாவுக்கு முதல் முறையாக அங்கீகாரம் கிடைத்துள்ளது.

By Arun

பிபா அமைப்பின் பார்ட்னர் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உதவியால், நாளை மறுநாள் தொடங்கவுள்ள உலக கோப்பை கால்பந்து தொடரில், இந்தியாவுக்கு முதல் முறையாக அங்கீகாரம் கிடைத்துள்ளது. மெஸ்ஸி, ரொனால்டோ போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து, இந்திய சிறுவர், சிறுமிகள் மைதானத்தில் வீரநடை போடவுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

உலக கோப்பை கால்பந்து தொடரில் இந்தியாவுக்கு முதல் முறையாக வாய்ப்பு! கியாவுக்கு சுனில் சேத்ரி நன்றி!

கால்பந்து ஜூரம்

உலகம் முழுவதும் கால்பந்து ஜூரம் தொற்றிக்கொண்டுள்ளது. ஆம், உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் தொடங்க இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ளது.

உலக கோப்பை கால்பந்து தொடரில் இந்தியாவுக்கு முதல் முறையாக வாய்ப்பு! கியாவுக்கு சுனில் சேத்ரி நன்றி!

பிபா உலக கோப்பை கால்பந்து தொடர், ரஷ்யாவில் நாளை மறுநாள் கோலாகலமாக தொடங்குகிறது. உலக கோப்பை தொடரில், ஒவ்வொரு போட்டி தொடங்கும் முன்பும், அந்த போட்டிக்கான அதிகாரப்பூர்வ கால்பந்தை, சிறுவர்கள் மைதானத்திற்குள் எடுத்து வரும் நடைமுறை உள்ளது.

உலக கோப்பை கால்பந்து தொடரில் இந்தியாவுக்கு முதல் முறையாக வாய்ப்பு! கியாவுக்கு சுனில் சேத்ரி நன்றி!

அவர்களுக்கு ஆபீஸியல் மேட்ச் பால் கேரியர்ஸ் (OMBC) என்று பெயர். இந்த OMBC-களை தேர்வு செய்வதற்கான போட்டி, இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராமில் கடந்த மாதம் நடைபெற்றது.

உலக கோப்பை கால்பந்து தொடரில் இந்தியாவுக்கு முதல் முறையாக வாய்ப்பு! கியாவுக்கு சுனில் சேத்ரி நன்றி!

பிபா பார்ட்னர் கியா

தென் கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம்தான், OMBC தேர்வு போட்டியை நடத்தியது. பிபா அமைப்பின் அதிகாரப்பூர்வ ஆட்டோமோட்டிவ் பார்ட்னராக இருப்பது கியா மோட்டார்ஸ் நிறுவனம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை கால்பந்து தொடரில் இந்தியாவுக்கு முதல் முறையாக வாய்ப்பு! கியாவுக்கு சுனில் சேத்ரி நன்றி!

OMBC தேர்வு போட்டியில், 10-14 வயதுடைய இந்திய கால்பந்து வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி கலந்து கொண்டு, சிறுவர், சிறுமிகளை தேர்வு செய்தார். மொத்தமாக கலந்து கொண்ட 1,600 பேரில், 50 பேர் இறுதி சுற்றுக்கு தேர்வு பெற்றனர்.

உலக கோப்பை கால்பந்து தொடரில் இந்தியாவுக்கு முதல் முறையாக வாய்ப்பு! கியாவுக்கு சுனில் சேத்ரி நன்றி!

இந்த 50 பேரில் இருந்து 2 பேர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒரு சிறுமி தமிழகத்தை சேர்ந்த நாதனியா ஜான் (வயது 11). மற்றொரு சிறுவன் கர்நாடகாவை சேர்ந்த ரிஷி தேஜ் (வயது 10). இவர்கள் இருவரையும் கியா மோட்டார்ஸ் நிறுவனம், ரஷ்யா அழைத்து செல்கிறது.

உலக கோப்பை கால்பந்து தொடரில் இந்தியாவுக்கு முதல் முறையாக வாய்ப்பு! கியாவுக்கு சுனில் சேத்ரி நன்றி!

போட்டி தொடங்கும் முன்பாக அதிகாரப்பூர்வ கால்பந்தை, அவர்கள் இருவரும் கையில் ஏந்தி கொண்டு, உலகின் தலை சிறந்த வீரர்களுடன் இணைந்து மைதானத்திற்குள் வருவார்கள். இந்திய கால்பந்து வீரர்களுக்கு இத்தகைய அங்கீகாரம் கிடைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை கால்பந்து தொடரில் இந்தியாவுக்கு முதல் முறையாக வாய்ப்பு! கியாவுக்கு சுனில் சேத்ரி நன்றி!

6 பேருக்கு வாய்ப்பு

முன்னதாக OMBC தேர்வு போட்டியில் ரன்னர்களாக வந்த 4 சிறுவர்களையும், கியா மோட்டார்ஸ் நிறுவனம் ரஷ்யாவுக்கு அழைத்து செல்கிறது. ஆனால் அவர்கள் 4 பேரும் போட்டிகளை காண மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

உலக கோப்பை கால்பந்து தொடரில் இந்தியாவுக்கு முதல் முறையாக வாய்ப்பு! கியாவுக்கு சுனில் சேத்ரி நன்றி!

ஆக மொத்தம் இந்தியாவில் இருந்து 6 சிறுவர், சிறுமிகளை கியா மோட்டார்ஸ் நிறுவனம், ரஷ்யாவுக்கு அழைத்து செல்கிறது. ஒவ்வொரு சிறுவர்களுடனும் அவர்களது பெற்றோர் அல்லது கார்டியன் யாரேனும் ஒருவர் உடன் வர அனுமதிக்கப்படுவர். மொத்த செலவும் கியா மோட்டார் நிறுவனத்தினுடையதுதான்.

உலக கோப்பை கால்பந்து தொடரில் இந்தியாவுக்கு முதல் முறையாக வாய்ப்பு! கியாவுக்கு சுனில் சேத்ரி நன்றி!

நன்றி கியா!

கால்பந்து உலகில் கோலேச்சும் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி, போர்ச்சுக்கல்லின் கிறிஸ்டியானா ரொனால்டோ போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களை சந்திக்கும் வாய்ப்பு, இந்த 6 சிறுவர், சிறுமிகளுக்கும் கிடைத்துள்ளது. இந்த அனுபவம் அவர்களின் எதிர்கால கால்பந்து வாழ்க்கைக்கு உதவி செய்யும்.

உலக கோப்பை கால்பந்து தொடரில் இந்தியாவுக்கு முதல் முறையாக வாய்ப்பு! கியாவுக்கு சுனில் சேத்ரி நன்றி!

இந்த வாய்ப்பை அவர்களுக்கு வழங்கியதற்காக, இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, கியா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். OMBC தேர்வு போட்டியில், இந்தியாவில் கால்பந்து விளையாட்டை நேசிக்கும் அவ்வளவு சிறுவர்களை ஒன்றாக சந்தித்தது மகிழ்ச்சியளித்தாகவும் அவர் கூறியுள்ளார்.

உலக கோப்பை கால்பந்து தொடரில் இந்தியாவுக்கு முதல் முறையாக வாய்ப்பு! கியாவுக்கு சுனில் சேத்ரி நன்றி!

நீலகிரி சிறுமி

தமிழகத்தில் இருந்து தேர்வாகியுள்ள சிறுமி நாதனியா ஜான், நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பிறந்தவர். தற்போது 7ம் வகுப்பு படித்து வருகிறார். கால்பந்து விளையாட்டில் அவருக்கு இருந்த திறன்களை கண்டு, சுனில் சேத்ரியே வியப்படைந்தார்.

உலக கோப்பை கால்பந்து தொடரில் இந்தியாவுக்கு முதல் முறையாக வாய்ப்பு! கியாவுக்கு சுனில் சேத்ரி நன்றி!

மற்றொரு சிறுவன் ரிஷி தேஜ், பெங்களூருவில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். விளையாட்டில் மட்டுமல்ல, படிப்பிலும் ஸ்கூல் டாப்பர் ரிஷி தேஜ்தான். OMBCஆக தேர்வு செய்து பெருமிதப்படுத்தியதற்காக, கியா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ரிஷி தேஜ் நன்றி தெரிவித்து கொண்டுள்ளார்.

உலக கோப்பை கால்பந்து தொடரில் இந்தியாவுக்கு முதல் முறையாக வாய்ப்பு! கியாவுக்கு சுனில் சேத்ரி நன்றி!

பிபா உலக கோப்பை தொடருக்காக, பல்வேறு நாடுகளை சேர்ந்த மொத்தம் 64 OMBC-க்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், இருவர் மட்டுமே இந்தியாவை சேர்ந்தவர்கள். அதுவும் இந்த அங்கீகாரம் இந்தியாவுக்கு கிடைப்பது இதுவே முதல் முறை.

உலக கோப்பை கால்பந்து தொடரில் இந்தியாவுக்கு முதல் முறையாக வாய்ப்பு! கியாவுக்கு சுனில் சேத்ரி நன்றி!

பிபா மட்டும் அல்ல, கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன், NBA கூடைப்பந்து லீக் உள்ளிட்ட போட்டிகளிலும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் பார்ட்னராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #கியா
English summary
Kia Fulfills The Dream Of 6 Young Indian Footballers. read in tamil.
Story first published: Tuesday, June 12, 2018, 11:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X