ஒரே காரை 9.17 லட்சம் கி.மீ ஓட்டிய பாட்டி! இவ்வளவு உழைப்பிற்கு பின்னால் இப்படி ரகசியமா?

இந்தியாவில் கார் வாங்கும் உரிமையாளர்கள் பலர் அதை நீண்ட காலம் மற்றும் நீண்ட தூரம் பயன்படுத்த மாட்டார்கள். புதிதாக கார் வாங்கபவர்கள் கூட அதிகபட்சம் 1-2 லட்சம் கி.மீ வரை காரை ஓட்டி விட்டு அதை விற்று வேறு காரை வாங்கிவிடுார்கள். நீண்ட தூரம் காரை பயன்படுத்தினால் காரில் பிரச்சனைகள் வரும் என்பதால் இப்படியான முறையை கையாளுகின்றனர். ஆனால் 92 வயது பாட்டி ஒருவர் ஒரே காரை 9.1 லட்சம் கி.மீ ஓட்டினார் என்றால் நம்ப முடிகிறதா அதுவும் வெறும் 4 ஆண்டுகளில் இவ்வளவு பயன்படுத்தியுள்ளார். இது குறித்த விரினா விபரங்களை தான் இங்கே காணப்போகிறோம்.

Cowboy Kia என்ற சமூகவலைத்தள பக்கத்தில் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அமெரிக்காவை சேர்ந்த பாட்டி ஒருவர் தனது கார் ஓட்டும் அனுபவம் குறித்து பேசுகிறார். இந்த பாட்டிக்கு 92 வயதாவதாக கூறப்படுகிறது. ஆனால் வீடியோவில் பார்க்கும் போது அவ்வளவு வயதான பாட்டியாக தெரியவில்லை. ஆனால் அவருக்க நிச்சயம் 60-70 வயது மதிப்பிட முடியும்.

Kia Seltos 9 17 km Driven

இவர் காரில் மொத்தம் 5,70,141 மைல்கள் பயணித்துள்ளதாக ஓடோ மீட்டரில் பதிவாகியுள்ளது. அப்படி என்றால் 9,17,553 கி.மீ தூரம் இந்த கார் பயணித்துள்ளது. இது கியா நிறுவனத்தின் செல்டோஸ் கார். இந்த கார் கடந்த 2020ம் ஆண்டு முதன் முறையாக வாங்கப்பட்டது. வாங்கும்போது இவர் புதிய காராக வாங்கினார். ஓடோ மீட்டரில் 0 என குறிப்பிடப்பட்ட நிலையில் இந்த காரை வாங்கி பயன்படுத்தியுள்ளார்.

இந்த காரை அவர் 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் வாங்கியுளு்ளார். சுமார்4-5 ஆண்டுகள் தான் இந்த காரை அவர் பயன்படுத்தியள்ளார். இவ்வளவு குறுகிய காலத்திற்குள் இவர் 9.1 லட்சம் கி.மீ இந்த காரை ஓட்டியுள்ளது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இது குறித்து அவரிடம் கேட்டபோது அவர் அமெரிக்க ராணுவத்திடம் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளார். அதற்காக அவர் நீண்ட ததுரம் பயணிக்க வேண்டியது இருந்ததாகவும், நாடு முழுவதும் உள்ள ராணுவ வீரர்களை சந்திக்க வேண்டியது இருந்ததாகவும் குறிப்பிடுகிறது.

Kia Seltos 9 17 km Driven

இதனால் இவர் அதிக தூரம் காரை ஓட்டியதாகவும், இந்த காலகட்டத்தி்ல பல நேரங்களில் இவருக்கு கியர் பாக்ஸ் செயல் இழப்பு, இன்ஜின் ரிப்பேர் போன்ற பிரச்சனைகள் வந்ததாகவும் குறிப்பிடுகிறார். இருந்தாலும் இ்நத காரை வாங்கியதற்காக தான் சந்தோப்படுவதாகவும், இந்த காரின் மூலம் அவருக்கு நல்ல அனுபவங்களே அதிகம் கிடைத்ததாகவும் குறிப்பிடுகிறார்.

இந்த சம்பவம் கியா செல்டோஸ் காரின் நம்பதன்மை மற்றும் நீண்ட கால உழைப்பை காட்டுவதாக அமைந்துள்ளுது. இந்த கார் இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் விற்பவனையாகி வருகிறது. இந்நிறுவனம் விற்பனை செய்யும் குறைந்த விலை கார்களில் இதுவும் ஒன்று. இந்த காரை சரியாக பராமரித்து நல்ல டிரைவிங் திறனை வெளிப்படுத்தினால் நிச்சயம் நீண்ட காலம் உழைக்கும் என தெரிகிறது.

Kia Seltos 9 17 km Driven

இந்த காரை வாங்கி சிலர் ஆண்டிற்கு 10,000 கி.மீ பயன்படுத்தினாலும் பிரச்சனை வர வாய்ப்புள்ளது. இதற்க முக்கியமான காரணம் டிறைவி்ங திறன் தான். இது நேரடியா இன்ஜின் வாழ்நாள் மற்றும் பிற பாங்களின் வாழ்நாளை நேரடியாக பாதிக்கிறது. அதே நேரம் இது சிறப்பாக இருந்தால் 9 லட்சம் கி.மீ கூட சிறப்பாக இயக்க இந்த கார் உதவியாக இருக்கும்.

அமெரிக்காவில் விற்பனையாகும் இந்த கியா செல்டோஸ் காரில் 2.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் 4 சிலிண்டர்களுடன் இருக்கிறது. இது போக மற்றொரு ஆப்ஷனாக 1.6 லிட்டர் டர்போ சார்ஜ்டு 4 சிலிண்டர் இன்ஜின் ஆப்ஷனும் உள்ளது. 2.0 லிட்டர் இன்ஜின் 146 எச்பி பவரையும், 1.6லிட்டர் டர்போ இன்ஜின் 175 எச்பி பரவையும் வெளிப்படுத்துகிறது.

இதுவே இந்தியாவில் விற்பனையாகும் இந்த காரில் 3 விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. அதன்படி 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜினும், 1.4 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜினும், 1.5லி டீசல் இன்ஜின் ஆப்ஷனும் இதில் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனத்தின் திறன் மற்றும் பயன்பாடு அறிந்து அதை முறையான பாரமரிப்பு மற்றும் சிறப்பான டிரைவிங் ஸ்கில் உடன் இயக்கினால் நீண்ட காலம் பயன்படுத்தமுடியும் என்பதற்கு இந்த சம்பவமே உதாரணம். இதனால் நீங்கள் சரியான டிரைவிங் ஸ்கில்லையும் சரியான பராமரிப்பு முறைகளையும் பின்பற்ற வேண்டியது கட்டாயம்.

More from DriveSpark

Article Published On: Sunday, November 23, 2025, 15:30 [IST]
English summary
Kia seltos 9 17 km driven elderly woman logs 4 years
மேலும்... #auto news
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X