Just In
- 5 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 7 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 9 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 9 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Lifestyle
ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை!
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா - கியா செல்டோஸ் இடையே ட்ராக் ரேஸ்... எந்த கார் வெற்றி பெற்றது தெரியுமா?
மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் கியா செல்டோஸ் கார்களுக்கு இடையே ட்ராக் ரேஸ் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போது நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸுகி உள்ளது. பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுக்கும் ஏற்ற பல்வேறு கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதில், ஒன்றுதான் விட்டாரா பிரெஸ்ஸா. சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணக்கமான பெட்ரோல் இன்ஜின் தேர்வுடன் விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அதற்கு முன்பாக 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுடன் மட்டுமே மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கிடைத்து வந்தது.

மறுபக்கம் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் கியா செல்டோஸ் தற்போது மிகவும் பிரபலமான மாடலாக உள்ளது. இந்திய சந்தைக்கான கியா நிறுவனத்தின் முதல் மாடலாக கடந்த 2019ம் ஆண்டு செல்டோஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவை போல், கியா செல்டோஸ் எஸ்யூவியும் வெகு விரைவாகவே வாடிக்கையாளர்களின் மனங்களை கொள்ளை கொண்டு விட்டது.

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா டீசல் மற்றும் கியா செல்டோஸ் இரண்டும் வெவ்வேறு செக்மெண்ட்களை சேர்ந்த கார்கள். அதற்காக இந்த 2 கார்களுக்கும் இடையே பந்தயங்களை நடத்த சிலர் தயங்குவதில்லை. இந்த வரிசையில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா டீசல் மற்றும் கியா செல்டோஸ் டீசல் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டு கார்களும் ஒன்றுக்கொன்று ட்ராக் ரேஸில் (Drag Race) ஈடுபட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

Sanjeet Jaat என்ற யூ-டியூப் சேனலில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கியா செல்டோஸ் டீசல் ஆட்டோமேட்டிக் மாடலும், ஃபேஸ்லிஃப்டுக்கு முந்தைய மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வுடனான மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவிக்கும் இடையே ட்ராக் ரேஸ் நடத்தப்பட்டதை இந்த வீடியோ நமக்கு காட்டுகிறது.

ட்ராக் ரேஸில் ஈடுபடுத்துவதற்காக, வாகன போக்குவரத்து இல்லாத நேரான சாலையை தேர்வு செய்துள்ளனர். இந்த ட்ராக் ரேஸ் மொத்தம் இரண்டு சுற்றுகளாக நடத்தப்பட்டுள்ளது. நாம் ஏற்கனவே குறிப்பிட்டதை போல் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மேனுவல் கியர் பாக்ஸ் மாடலாகும். அதே சமயம் கியா செல்டோஸ் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

பந்தயம் தொடங்கியதும், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களும் சரிசமமாகதான் பயணித்தன. ஆனால் அடுத்த சில வினாடிகளில், கியா செல்டோஸ் முன்னிலை பெற்றது. அத்துடன் பந்தயம் முழுமைக்கும் அந்த முன்னிலையை தக்க வைத்து கொண்டது. நாம் ஏற்கனவே கூறியதை போல், இந்த பந்தயம் இரண்டு சுற்றுகளாக நடத்தப்பட்டது.

இரண்டாவது சுற்றிலும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா பின்னால்தான் வந்தது. அதே சமயம் கியா செல்டோஸ் எந்தவிதமான போராட்டமும் இன்றி முன்னிலை பெற்று வெற்றியை தனதாக்கி கொண்டது. பொதுவாக ஒரே செக்மெண்ட்டை சேர்ந்த 2 கார்களைதான் ட்ராக் ரேஸில் ஈடுபடுத்துவார்கள். ஆனால் இங்கே வெவ்வேறு செக்மெண்ட்டை சேர்ந்த 2 கார்கள் ட்ராக் ரேஸில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
அத்துடன் இந்த இரண்டு கார்களும் வெவ்வேறு வகையான இன்ஜினை கொண்டவை. எனவே இந்த ட்ராக் ரேஸின் முடிவு மிக எளிதாக கணிக்க கூடிய ஒன்றுதான். இந்த பந்தயத்தின் 2 சுற்றுகளிலும் கியா செல்டோஸ் வெற்றி பெற்று விட்டது. ஏனெனில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவுடன் ஒப்பிடும்போது, கியா செல்டோஸ் மிகவும் சக்தி வாய்ந்தது.