சர்வீசுக்கு வந்த காரை சின்னாபின்னமாக்கிய ஷோரூம் ஊழியர்! சொன்னாங்க பாருங்க ஒரு காரணம்! இந்தியாவே ஆடி போயிருச்சு

இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று கியா (Kia). கியா நிறுவனத்தின் கார்களை வாடிக்கையாளர்கள் பலரும் நேசிக்கின்றனர். ஆனால் கியா நிறுவனத்தின் காரை வாங்கியதால், வாடிக்கையாளர் ஒருவர் படாதபாடுபட்டுள்ளார். அவருக்கு நடந்த சோகம் காரணமாக கியா நிறுவனம் மீது வாடிக்கையாளர்கள் பலரும் தற்போது அதிருப்தியடைந்துள்ளனர்.

ஜலஜ் அகர்வால் என்பவர் கியா சொனெட் (Kia Sonet) கார் ஒன்றை வைத்திருந்தார். இந்த காரை அவர் வாங்கி இன்னும் ஒரு வருடம் கூட முழுமையாக முடியவில்லை. அதற்குள்ளாக இந்த கியா சொனெட் கார் விபத்தில் சிக்கியுள்ளது. இதற்கு ஜலஜ் அகர்வால் காரணம் அல்ல. கியா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப் ஒன்றுதான் இந்த விபத்திற்கு காரணமாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் உள்ள ஒரு கியா டீலர்ஷிப்தான் தற்போது புகாரில் சிக்கியுள்ளது.

சர்வீசுக்கு வந்த காரை சின்னாபின்னமாக்கிய ஷோரூம் ஊழியர்! சொன்னாங்க பாருங்க ஒரு காரணம்! இந்தியாவே ஆடி போயிருச்சு

இந்த டீலர்ஷிப்பின் பெயர் ராஜேஷ் கியா ஆகும். பாதிப்பிற்கு உள்ளான ஜலஜ் அகர்வால் கடந்த நவம்பர் 17ம் தேதி, தனது கியா சொனெட் காரை இந்த டீலர்ஷிப்பில் விட்டார். ஜென்ரல் சர்வீஸ் செய்வதற்காக கார் விடப்பட்டது. ஆனால் 6 நாட்கள் கழித்து, சர்வீஸ் மேனேஜரிடம் இருந்து ஜலஸ் அகர்வாலுக்கு செல்போன் அழைப்பு வந்தது. அப்போது அவரது கியா சொனெட் கார் விபத்தில் சிக்கி விட்டதாக கூறப்பட்டது. இதனால் ஜலஜ் அகர்வால் அதிர்ச்சியடைந்தார்.

ஆரம்பத்தில் பசு மோதியதால் விபத்து நிகழ்ந்து விட்டதாக டீலர்ஷிப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதாவது சர்வீஸ் முடிந்ததும், அனைத்தும் சரியாக உள்ளதா? என்பதை சோதனை செய்வதற்காக ஓட்டி பார்த்தபோது பசு மீது மோதி விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பாதிப்பிற்கு இன்சூரன்ஸ் க்ளைம் செய்து கொள்ளும்படியும் அவர்கள் ஜலஜ் அகர்வாலுக்கு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் காரின் முன் பகுதி மிகவும் கடுமையாக சேதமடைந்திருந்தது. எனவே ஜலஜ் அகர்வாலுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பம்பர், ஹெட்லைட்கள், ரேடியேட்டர் மற்றும் பானெட் என காரின் முன் பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டிருந்த காரணத்தால், இது தொடர்பாக டீலர்ஷிப்பிடம் ஜலஜ் அகர்வால் கேள்வி எழுப்பினார். இதன் பிறகுதான் உண்மை வெளிவந்தது. சம்பவத்தன்று க்ளீனர் ஒருவர் ஜலஜ் அகர்வாலின் காரை எடுத்து ஓட்டியுள்ளார். அப்போது டீலர்ஷிப் வளாகத்திற்குள்ளேயே கார் எதிர்பாராதவிதமாக சுவரில் மோதி விபத்தில் சிக்கியுள்ளது. இதன்பின் சமூக வலை தளங்கள் மூலமாக தனது நேர்ந்த சம்பவங்களை ஜலஜ் அகர்வால் வெளிப்படுத்தினார்.

இதற்கிடையே காரை சர்வீஸ் செய்வதற்கு இன்சூரன்ஸ் க்ளைம் செய்யும்படியும், கார் சர்வீஸ் செய்து முடிக்கப்படும் வரை மாற்று ஏற்பாடாக வேறு ஒரு காரை தருவதாகவும் டீலர்ஷிப் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அந்த மாற்று காரையும் அவர்கள் வழங்கவில்லை என கூறப்படுகிறது. ராஜேஷ் கியா டீலர்ஷிப் மட்டுமல்லாது, கியா நிறுவனம் தரப்பிலும் தனக்கு பிரச்னைகள் ஏற்பட்டதாக ஜலஜ் அகர்வால் தெரிவித்துள்ளார். அதாவது அவர்களை தொடர்பு கொள்வதில் சிரமங்கள் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

மேலும் கியா நிறுவனம் தன்னை தவிர்க்க முயன்றதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சமூக வலை தளங்களில் ஜலஜ் அகர்வாலின் பதிவுகள் கவனம் பெற தொடங்கிய நிலையில், இந்த பிரச்னைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய அதே மாடலில், புத்தம் புதிய கார் ஒன்றை வழங்குவதாக ஜலஜ் அகர்வாலுக்கு வழங்கப்பட்ட உறுதியின் மூலம் இந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் கார் உரிமையாளர்களை எவ்வளவு பாதிக்கிறது? என்பதை டீலர்ஷிப் ஊழியர்கள் உணர்வதில்லை.

சர்வீசுக்கு வரும் கார்களை டீலர்ஷிப் ஊழியர்கள் ஒரு சிலர் தங்கள் சொந்த வேலைகளுக்கு பயன்படுத்துகின்றனர். அதாவது உணவு சாப்பிட வீட்டிற்கு செல்வது, உறவினர்களை பேருந்து/ரயில் நிலையங்களில் 'டிராப்' செய்வது என சில சமயங்களில் அவர்கள் செய்யும் காரியங்கள் எல்லை மீறி செல்கிறது. ஒருவர் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் வாங்கிய காரை, விளையாட்டு பொம்மைகளை போல் பாவிப்பதையும், தங்கள் சொந்த வேலைகளுக்கு பயன்படுத்தி கொள்வதையும் டீலர்ஷிப் ஊழியர்கள் தவிர்க்க வேண்டும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kia sonet accident in dealership
Story first published: Monday, November 28, 2022, 13:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X