Just In
- 5 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 6 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 7 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 8 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கேரளாவில் அதிசயம்... வாடிக்கையாளருக்கு பதில் காரை டெலிவரி எடுத்த ரோபோ... சிட்டி மாதிரி செமயா இருக்கு
கேரளாவில் வாடிக்கையாளருக்கு பதிலாக, மனித ரோபோ ஒன்று புத்தம் புதிய காரை டெலிவரி எடுத்திருக்கும் நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கியா நிறுவனம் இந்திய சந்தைக்கு வந்தது முதலே, ஒவ்வொரு மாதமும் மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் காரான செல்டோஸ் எஸ்யூவி மிக பிரம்மாண்டமானதொரு வெற்றியை பதிவு செய்தது. தற்போதும் செல்டோஸ் விற்பனை ஒவ்வொரு மாதமும் சிறப்பாக இருந்து வருகிறது.

அதற்கு பிறகு கியா நிறுவனம் அறிமுகம் செய்த கார்னிவல், விலை உயர்ந்த பிரீமியம் கார் என்றாலும், மாதந்தோறும் ஓரளவிற்கு நல்ல விற்பனை எண்ணிக்கைய பதிவு செய்து கொண்டுள்ளது. இந்த வரிசையில் கியா நிறுவனம் இந்திய சந்தைக்கான தனது மூன்றாவது தயாரிப்பான சொனெட் காரை சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்தது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

மிகவும் சவால் நிறைந்த சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் நிலை நிறுத்தப்பட்டுள்ள கியா சொனெட் கார், கடந்த செப்டம்பர் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. செல்டோஸ் எஸ்யூவியை போல், சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி காரின் விற்பனையும் இந்திய சந்தையில் மிக சிறப்பாக இருந்து வருவது கியா நிறுவனத்திற்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் கேரளாவில் உள்ள கியா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்பான இன்ச்சியான் கியா, தனது வாடிக்கையாளருக்கு சொனெட் காம்பேக்ட் எஸ்யூவியை மிகவும் வித்தியாசமான முறையில் டெலிவரி செய்துள்ளது. ஆம், வாடிக்கையாளருக்கு பதிலாக மனித ரோபோ ஒன்று, கியா சொனெட் காரை டெலிவரி எடுத்துள்ளது.

கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி இப்படியான ஒரு முறையில் டெலிவரி செய்யப்படுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. இதற்கு முன்பாக மனித ரோபோ ஒன்று கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவியை டெலிவரி எடுத்தது கிடையாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அந்த காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சயாபோட் என அழைக்கப்படும் இந்த ரோபோ, ஜெயகிருஷ்ணன் என்பவரின் சார்பாக, கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவியை டெலிவரி எடுத்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியை அடிப்படையாக கொண்ட அஸிமோவ் ரோபோடிக்ஸின் (Asimov Robotics) தலைமை செயல் அதிகாரியாக ஜெயகிருஷ்ணன் உள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கார் டீலர்ஷிப்களில் மனித ரோபோக்களின் பயன்பாட்டை எடுத்துகாட்டுவதற்காக, புத்தம் புதிய கார் ஒன்றை மனித ரோபோ தற்போது டெலிவரி எடுத்துள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்பட்ட பிறகு, கார் டீலர்ஷிப்களில் மனித ரோபோக்கள் அவசியமாகின்றன. இந்தியாவில் கொரோனா பிரச்னை தீவிரமடைந்த பிறகு, கார் டீலர்ஷிப்களுக்கு வரவே மக்கள் அஞ்சினர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்தியாவில் செயல்படும் பல்வேறு முன்னணி கார் நிறுவனங்கள், ஆன்லைன் மூலம் காரை விற்பனை செய்ய தொடங்கின. அத்துடன் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று புத்தம் புதிய கார்களை டெலிவரி செய்யும் திட்டங்களும் கொண்டு வரப்பட்டன. இதன் மூலம் கூடுமான வரை மனித தொடர்பு தவிர்க்கப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், மனித ரோபோட் ஒன்று புத்தம் புதிய காரை டெலிவரி எடுத்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கார் டீலர்ஷிப்களில் மனித ரோபோக்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், விற்பனையில் அவற்றால் உதவி செய்ய முடியும். அத்துடன் மனிதர்களின் உடல் வெப்பநிலையை சோதிப்பது, சானிடைசர் வழங்குவது போன்ற பணிகளையும் அவற்றால் செய்ய முடியும்.

இதற்கு இந்த கியா சொனெட் டெலிவரி ஒரு அடித்தளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கியா சொனெட் கார் இப்படி வித்தியாசமான முறையில் டெலிவரி செய்யப்படுவது இது முதல் முறை கிடையாது. சமீபத்தில் கூட குஜராத்தில் உள்ள கியா டீலர்ஷிப் ஒன்று, அவென்ஜர்ஸை கருப்பொருளாக கொண்ட சிறிய நிகழ்ச்சியை நடத்தி சொனொட் காரை டெலிவரி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த டீலர்ஷிப்பில் சூப்பர் ஹீரோக்களின் சிறிய கட்அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் ஸ்பைடர்மேன் மற்றும் சூப்பர்மேன் போல் இரண்டு பேர் உடையணிந்திருந்தனர். காரை டெலிவரி எடுத்தவர்களின் மகனின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படி ஒரு வித்தியாசமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த வரிசையில் தற்போது கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவியை மனித ரோபோ ஒன்று டெலிவரி எடுத்துள்ளது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, டொயோட்டா அர்பன் க்ரூஸர் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்களுடன், கியா சொனெட் போட்டியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சிகரமான டிசைன், பல்வேறு இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள், அட்டகாசமான வசதிகள் உள்ளிட்ட காரணங்களால், இந்திய சந்தையில் கியா சொனெட் மிகவும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. அத்துடன் கியா நிறுவனம் செய்துள்ள மிக சவாலான விலை நிர்ணயமும் அதன் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள கார்கள் மட்டுமல்லாது, வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ள நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவிக்கும் கியா சொனெட் சவால் அளிக்கும். இந்தியாவில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே இந்த செக்மெண்ட்டில் கார் நிறுவனங்கள் தொடர்ச்சியாக பல்வேறு புதிய தயாரிப்புகளை களமிறக்கி வருகின்றன.