அம்மா ஆக போற சந்தோஷம்! வீட்டுக்காரரின் கையை விடாமல் பிடித்து கொண்டே வந்து சொகுசு காரில் போன நடிகை! அவங்களா இது

இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) நிறுவனத்தின் சொகுசு கார்களுக்கு, நடிகர், நடிகைகள் பலரும் ரசிகர்களாக இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். குறிப்பாக சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ (Mercedes Benz GLE) காருக்கு, திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இதில், முன்னணி பாலிவுட் நடிகர்களான ஹிருத்திக் ரோஷன் (Hrithik Roshan) மற்றும் பொம்மன் இரானி (Boman Irani) போன்றவர்கள் எல்லாம் இங்கே குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆவர்.

அத்துடன் பாலிவுட் நடிகையான ஃபாத்திமா ஷனா ஷேக் (Fatima Sana Shaikh) போன்றோரும், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரை வைத்துள்ளனர். சுருக்கமாக சொல்வதென்றால், பாலிவுட் பிரபலங்கள் பலரிடமும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ சொகுசு கார் உள்ளது. எனவே அவர்களை அடிக்கடி இந்த காரில் பார்க்க முடியும்.

Kiara Advani - Sidharth Malhotra Spotted In Mercedes Benz GLE

இந்த வரிசையில் விரைவில் பெற்றோர் ஆக போகும் கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா (Kiara Advani - Sidharth Malhotra) தம்பதியினர், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரில் பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்த வைரல் வீடியோவில் கியாரா அத்வானியும், அவரது கணவர் சித்தார்த் மல்ஹோத்ராவும் கையை பிடித்து கொண்டே நடந்து வந்து, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ காரில் ஏறுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இவர்கள் இருவரும் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகை, நடிகர்களாக திகழ்ந்து வருகின்றனர்.

Kiara Advani - Sidharth Malhotra

இவர்கள் இருவரும் கடந்த 2023ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த சூழலில், கியாரா அத்வானி கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அவர்கள் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு திரையுலக நட்சத்திரங்களும், ரசிகர்களும் சமூக வலை தளங்களில் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த சூழலில்தான், கியாரா அத்வானி மற்றும் அவரது கணவர் சித்தார்த் மல்ஹோத்ராவின் வைரல் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அனேகமாக கியாரா அத்வானி கர்ப்பம் என்ற அறிவிப்பு வெளியான பிறகு, அவர்கள் இருவரும் பொது வெளியில் முகம் காட்டியிருப்பது இதுவே முதல் முறை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் பயன்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ கார் தற்போதைய நிலையில் 99 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 1.17 கோடி ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கர்ப்பமாக உள்ள கியாரா அத்வானிக்கு அலுங்கல் குலுங்கல் இல்லாத சௌகரியமான பயணத்தை, அவர் பயணம் செய்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ கார் வழங்கும் என எதிர்பார்க்கலாம். கியாரா அத்வானி மற்ற பாலிவுட் நடிகைகளை போலவே, சொகுசு கார்களில் பயணம் செய்வதை அதிகம் விரும்ப கூடியவர் ஆவார்.

அவரிடம் உள்ள விலை உயர்ந்த கார்களே இதற்கு சாட்சி. பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5), பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series), மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் (Mercedes Benz E-Class), மெர்சிடிஸ் மேபெக் எஸ்580 (Mercedes Maybach S580) மற்றும் ஆடி ஏ8எல் (Audi A8L) போன்றவை எல்லாம் கியாரா அத்வானியின் கார் கலெக்ஸனில் (Car Collection) உள்ள குறிப்பிடத்தகுந்த கார்கள் ஆகும்.

மறுபக்கம் அவரது கணவர் சித்தார்த் மல்ஹோத்ரா, லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வோக் (Land Rover Range Rover Vogue) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் எம்-க்ளாஸ் (Mercedes Benz M-Class) போன்ற மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை எல்லாம் வைத்துள்ளார்.

More from DriveSpark

Article Published On: Sunday, March 2, 2025, 23:40 [IST]
English summary
Kiara advani sidharth malhotra spotted in mercedes benz gle luxury car viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+