விஜயை சிஎம் ஆக்க துடிப்பவர் கூட வேலை செஞ்சவங்களா இவங்க! 3.50 கோடி ரூபா கார்ல போற அளவுக்கு பெரிய ஆள் ஆயிட்டாங்க
இந்திய கோடீஸ்வரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மெர்சிடிஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் (Mercedes Maybach S-Class). இது சொகுசு லிமோசின் (Luxury Limousine) ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்றாகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப விலையே 2.77 கோடி ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 3.48 கோடி ரூபாயாக இருக்கிறது. இத்தனைக்கும் இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) மட்டுமே.
ஆன்-ரோடு விலையை (On-Road Price) கணக்கிட்டால், ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 3.47 கோடி ரூபாய் என்ற அளவிலும், டாப் வேரியண்ட்டின் விலை 4.35 கோடி ரூபாய் என்ற அளவிலும் வரும். இவ்வளவு விலை உயர்ந்த காரில் பிரபல நடிகை ஒருவர் பயணம் செய்யும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது கியாரா அத்வானி (Kiara Advani) ஆவார். இவர் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். எம்எஸ் டோனி தி அன்டோல்டு ஸ்டோரி திரைப்படத்தில் நடித்ததன் மூலம், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் இவர் பிரபலமாக மாறினார்.
இந்த சூழலில் மும்பை நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, மெர்சிடிஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் காரில் திரும்பும்போதுதான், தற்போது வைரலாக பரவி வரும் கியாரா அத்வானியின் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இது நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி மிகவும் விலை உயர்ந்த கார் என்பதால், சொகுசு வசதிகளுக்கு சற்றும் பஞ்சமில்லை.

மசாஜ் மற்றும் மெமரி வசதியுடன் கூடிய இருக்கைகள், 3டி டிரைவர் டிஸ்ப்ளே, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, பனரோமிக் சன்ரூஃப், முன் மற்றும் பின் பகுதியில் வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் 360 டிகிரி கேமரா போன்றவை எல்லாம் மெர்சிடிஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் காரின் குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும்.
இவை எல்லாம் தவிர, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், லெதர் சுற்றப்பட்ட மல்டி ஃபங்ஷன் ஸ்டியரிங் வீல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் போன்ற வசதிகளும் கூட மெர்சிடிஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் சொகுசு லிமோசின் காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன.
செயல்திறனை பொறுத்தவரையில், 4.0 லிட்டர் 6.0 லிட்டர் என மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை இரண்டுமே பெட்ரோல் இன்ஜின்கள் ஆகும். இந்த 2 இன்ஜின்கள் உடனும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்தான் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த 2 இன்ஜின்களின் டாப் ஸ்பீடும் மணிக்கு 250 கிலோ மீட்டர்கள் என்கிற அளவிலேயே இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில் நாம் பார்ப்பது கியாரா அத்வானியின் சொந்த கார்தான். கடந்த 2023ம் ஆண்டிலேயே அவர் இந்த காரை வாங்கி விட்டார். கியாரா அத்வானி வைத்திருப்பது மெர்சிடிஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும்.
ஆரம்ப நிலை வேரியண்ட் என்றாலும், இதன் விலை 3.47 கோடி ரூபாய் ஆகும். மெர்சிடிஸ் மேபெக் எஸ்-க்ளாஸ் தவிர, மெர்சிடிஸ் பென்ஸ் இ-க்ளாஸ் (Mercedes Benz E-Class), ஆடி ஏ8எல் (Audi A8L), பிஎம்டபிள்யூ 530டி (BMW 530d) மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5) உள்ளிட்ட விலை உயர்ந்த கார்களையும் கியாரா அத்வானி வைத்துள்ளார்.
கியாரா அத்வானியின் சினிமா செய்திகளை பொறுத்தவரையில், ஷங்கர் (Shankar) இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கேம் சேஞ்சர் (Game Changer) திரைப்படத்தில், அவர் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், ஷங்கர் அடுத்து முதல்வன் (Mudhalvan) திரைப்படத்தின் 2ம் பாகத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அர்ஜூன் நடிப்பில் வெளிவந்த முதல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் பிரம்மாண்ட வெற்றியை பெற்ற நிலையில், இதன் 2வது பாகத்தில், விஜயை (Vijay) நடிக்க வைக்க இயக்குனர் ஷங்கர் தீவிர முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திரைப்படத்தில் நடித்து விஜய் சிஎம் ஆவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








