ஒரு காலத்துல தமிழ்நாட்டை கலக்கிய நடிகையின் சொந்தம்! வயிற்றில் குழந்தையுடன் காஸ்ட்லி காரில் வந்த வீடியோ வைரல்
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் கைரா அத்வானி. இவர் பல மெகா ஹிட் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் பழம்பெரும் நடிகர் டெப் முகர்ஜியின் மறைவுக்கு இவர் காஸ்ட்லியான கார் ஒன்றில் வந்திறங்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹிந்தி சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் கைரா அத்வானி பலர் நேரடியாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை. தமிழ் திரைப்பட இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கி வெளியான கேம் சேஞ்சர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடத்திருந்தார். இதனால் இவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக இருக்கிறார். இந்நிலையில் கடந்தாண்டு இவர் சித்தார்த் மல்கோத்திரா என்ற பிரபல நடிகரை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கைரா அத்வானி கர்ப்பமாக இருக்கிறார். இவர் கர்ப்பமான வயிற்றுடன் பொதுவெளியில் வரும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் தற்போது இந்தியில் படமாகி வரும் வார் 2 திரைப்படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜியின் தந்தை டெப் முகர்ஜி வயது முதிர்வின் காரணமாக மரணமடைந்துள்ளார்.
இவர் தமிழில் பிரபலமான நடிகை கஜோல், ராணி முகர்ஜி ஆகியோருக்கு மாமா முறை ஆவார். இவர் மரணத்திற்காக அயன் முகர்ஜியின் வீட்டிற்கு தற்போது கர்ப்பமாக இருக்கும் கைரா அத்வானி காஸ்ட்லியான கார் ஒன்றில் வந்திறங்கினார். இவர் வந்த கார் மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் மேபேக் எஸ்580 4 மேட்டிக் கார் ஆகும்.

இந்த காரை பொருத்தவரை இது மைல்டு ஹைபிரிட் கார் ஆகும். இந்த கார் ஒரே நேரத்தில் எலெக்ட்ரிக் மற்றும் பெட்ரோலில் இயங்கும் திறன் கொண்டது. இந்த கார் மார்கெட்டில் ரூ3.19 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை வி8 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 496 பிஎச்பி பவரையும், 700 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளுது.
இந்த இன்ஜின் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 4.8 நொடியில் பிக்கப் செய்ய உதவுகிறது. இந்த கார் ஒரு ஆல்வீல் டிரைவ் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 5 நபர்கள் பயணிக்க முடியும். அதிகமான பொருட்களை எடுத்து செல்ல 505 லிட்டர் அளவு கொண்ட பூட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரில் பானரோமிக் சன்ரூஃப், குரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட எக்ஸாஸ்ட், ரூஃப் மவுண்டட் ஆண்டனா, உள்ளிட்ட வடிவமைப்பு அம்சங்கள் உள்ளன. மேலும் பாதுகாப்பிற்காக இந்த காரில் 10 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், பிரேக் அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம். டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காரை பல பிரபலங்கள் பயன்படுத்துவது ஒன்றும் புதிய விஷயம் கிடையாது. காஸ்ட்லியான அதிக சொகுசு அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு நிறைந்த கார்கள் பிரபலங்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








