விஜய்க்கு கார் பரிசளித்த கன்னட நடிகர்! தமிழ்நாடு கைவிட்டாலும் மனுஷன் கர்நாடகால பொழச்சுக்குவாரு!
ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால், அதன் நடிகர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு, தயாரிப்பாளர் தரப்பில் இருந்து, மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்கள் போன்ற பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். ஒரு சில சமயங்களில், நடிகர்களும் கூட, இயக்குனர்களுக்கு கார்களை பரிசாக வழங்குகின்றனர்.
இந்த வரிசையில், கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் நடிகர்களில் ஒருவரான கிச்சா சுதீப் (Kiccha Sudeep), தன் திரைப்படத்தின் இயக்குனருக்கு, தற்போது கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். அவர் பரிசாக வழங்கியிருப்பது, ஸ்கோடா கைலக் (Skoda Kylaq) கார் ஆகும்.

கிச்சா சுதீப் நடிப்பில், கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம், மேக்ஸ் (Max) என்ற கன்னட திரைப்படம் வெளியானது. இதை விஜய் கார்த்திக்கேயா (Vijay Kartikeyaa) இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது விஜய் கார்த்திக்கேயாவிற்கு, ஸ்கோடா கைலக் காரை, கிச்சா சுதீப் பரிசாக வழங்கியுள்ளார்.
இந்த தகவலை விஜய் கார்த்திக்கேயா தனது எக்ஸ் தளத்தில் (முன்பு டிவிட்டர்), தற்போது தெரிவித்துள்ளார். ''கிச்சா சுதீப் சாரிடம் இருந்து கிடைத்துள்ள இந்த பரிசும், அவரது குடும்பமும், எனது மனதில் என்றென்றும் சிறப்பான இடத்தை பிடித்திருக்கும். நன்றி கிச்சா சுதீப் சார்'' என எக்ஸ் தளத்தில் விஜய் கார்த்திக்கேயா பதிவிட்டுள்ளார். அத்துடன் பரிசாக கிடைத்த புதிய காரின் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ஸ்கோடா கைலக் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 7.55 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 12.80 லட்ச ரூபாயாக இருக்கிறது.
இவை ஸ்கோடா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இது ஸ்கோடா நிறுவனத்தின் விலை குறைந்த கார்களில் ஒன்றாக இருந்தாலும் கூட, மிகவும் பாதுகாப்பானது ஆகும். பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில், ஸ்கோடா கைலக் கார், முழுமையாக 5-ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (5 Star Safety Rating) பெற்றுள்ளது.
ஸ்கோடா கைலக் காரில், பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன. அத்துடன் க்ரூஸ் கண்ட்ரோல், ரியர் வியூ கேமரா, வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்ற வசதிகளையும், ஸ்கோடா கைலக் கொண்டுள்ளது.
மேலும் கூல்டு க்ளவ் பாக்ஸ், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள், பின் பகுதியில் ஆர்ம்ரெஸ்ட், எலெக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 25.6 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 20.32 செமீ டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற வசதிகளும், ஸ்கோடா கைலக் காரில் வழங்கப்பட்டுள்ளன.
செயல்திறனை பொறுத்தவரையில், 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை ஸ்கோடா கைலக் கார் கொண்டுள்ளது. இதன் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டிப்ட்ரானிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), (Mahindra XUV 3XO), ரெனால்ட் கைகர் (Renault Kiger) மற்றும் நிஸான் மேக்னைட் (Nissan Magnite) ஆகிய கார்களுக்கு எல்லாம், மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக ஸ்கோடா கைலக் கருதப்படுகிறது.
அத்துடன் மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) போன்ற கார்களுக்கு மாற்றாகவும் கூட, ஸ்கோடா கைலக் காரை வாங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம். இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் ஒரு ஸ்கோடா காரை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு, கைலக் மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.
கிச்சா சுதீப்பிடம் இருந்து, ஸ்கோடா கைலக் காரை பரிசாக பெற்றுள்ள இயக்குனர் விஜய் கார்த்திக்கேயா தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார். தமிழில் சிவகாசி மற்றும் திருப்பதி போன்ற திரைப்படங்களில் அவர் அஸிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றியுள்ளார். ஆனால் கன்னடத்தில் இயக்கிய மேக்ஸ்தான் இயக்குனராக அவரது முதல் திரைப்படம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








