சாலையில் தென்பட்ட அதிசய கார்! ஓட்னது யார்னு தெரிஞ்சா மெரண்டு போயிருவீங்க! இதலாம் அவங்களாலதான் வாங்க முடியும்!

சமூக வலை தளங்களில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று மிக வேகமாக பரவி வருகிறது. இதில் சேடீன் ப்ளூ (Satin Blue) நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்ட கார் ஒன்று செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. அது போர்ஷே பனமெரா ஜிடிஎஸ் (Porsche Panamera GTS) கார் ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் போர்ஷே பனமெரா ஜிடிஎஸ் காரின் ஆரம்ப விலையே (Price) 2.03 கோடி ரூபாயாக உள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும். போர்ஷே பனமெரா ஜிடிஎஸ் காரை பொறுத்தவரையில் எக்ஸ் ஷோரூம் விலையில் இருந்து ஆன் ரோடு விலை சுமார் 50 லட்ச ரூபாய் அதிகமாக வரும்.

Porsche Panamera GTS

எனவே சுமார் 2.50 கோடி ரூபாய் மதிப்புள்ள கார் சாலையில் சுற்றியதால், அது யாருடையது? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த போர்ஷே பனமெரா ஜிடிஎஸ் கார், நடிகர் கிச்சா சுதீப் (Kiccha Sudeep) உடையது ஆகும்.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர் என இவருக்கு பல்வேறு முகங்கள் இருக்கின்றன. இவர் கன்னட திரைத்துறையை சேர்ந்தவர். எனினும் தமிழ் ரசிகர்களுக்கும் இவர் நன்கு பரிட்சயமானவர்தான். மற்ற நடிகர்கள் (Actors) மற்றும் நடிகைகளை (Actresses) போல், கிச்சா சுதீப்பும் விலை உயர்ந்த கார்களின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்தான்.

Kiccha Sudeep

பிஎம்டபிள்யூ எம்5 காம்படீசன் (BMW M5 Competition) உள்ளிட்ட விலை உயர்ந்த கார்கள் எல்லாம் ஏற்கனவே கிச்சா சுதீப்பிடம் உள்ளன. இந்த வரிசையில்தான் தற்போது அவர் போர்ஷே பனமெரா ஜிடிஎஸ் காரை வாங்கியுள்ளார். இந்த காரை அவர் சாலையில் ஓட்டி செல்லும்போதுதான், தற்போது வைரல் ஆக பரவி வரும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

போர்ஷே பனமெரா ஜிடிஎஸ் காரில், 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 473 பிஹெச்பி பவர் மற்றும் 620 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 300 கிலோ மீட்டர்கள் ஆகும்.

பெரிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்பட போர்ஷே பனமெரா ஜிடிஎஸ் காரில் ஏராளமான அதிநவீன வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன. கிச்சா சுதீப்பின் கார் கலெக்ஸனை (Car Collection) பொறுத்தவரையில், இன்னும் பல்வேறு கார்கள் அவரிடம் இருக்கின்றன.

இதில், டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire) மற்றும் வால்வோ எக்ஸ்சி90 (Volvo XC90) போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். இதில், டொயோட்டா வெல்ஃபையர் காரானது, திரையுலக நட்சத்திரங்களுக்கு விருப்பமான ஒன்றாக உள்ளது. கிச்சா சுதீப்பை போல், அதே கன்னட திரையுலகை சேர்ந்த மற்றொரு முன்னணி நடிகரான தர்ஷன் (Darshan) கூட டொயோட்டா வெல்ஃபையர் காரை வைத்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: போர்ஷோ நிறுவனத்தின் கார்கள் செயல்திறன் மிக்கவை. இந்த நிறுவனத்தின் பனமெரா ஜிடிஎஸ் கார் கூட பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3.9 வினாடிகளில் எட்டி விடும். எனவே கிச்சா சுதீப் இந்த காரில் உற்சாகமான பயணங்களை 'என்ஜாய்' செய்வார் என நாம் நம்பலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 4, 2023, 16:29 [IST]
English summary
Kiccha sudeep porsche panamera gts viral video know all details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+