என்னங்க சொல்றீங்க... பிறந்தநாள் பரிசாக ரூ.3 லட்சம் மதிப்புள்ள BMW பைக்கா!! பிரபல நடிகரின் தாராள மனசு...

தனது பிறந்த நாளில் அட்டகாசமான பிஎம்டபிள்யூ பைக்கை தனது நண்பருக்கு வழங்கி பிரபல நடிகர் ஒருவர் அசத்தியுள்ளார். யார் அந்த நடிகர்? அவர் எத்தகைய பிஎம்டபிள்யூ பைக்கை பரிசாக வழங்கியுள்ளார்? என்பதை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

என்னங்க சொல்றீங்க... பிறந்தநாள் பரிசாக ரூ.3 லட்சம் மதிப்புள்ள BMW பைக்கா!! பிரபல நடிகரின் தாராள மனசு...

நடிகர், நடிகைகள் சொகுசு கார்களையும், லக்சரி பைக்குகளையும் வாங்குவது சர்வ சாதாரணமான விஷயம் தான். ஆனால் அதே வாகனங்களை மற்றவர்களுக்கு அவர்கள் வழங்கும்போது அது மனிதநேயமாக மாறி, சமூக வலைத்தள பக்கங்களில் செய்திகளாக உருவெடுக்கிறது.

என்னங்க சொல்றீங்க... பிறந்தநாள் பரிசாக ரூ.3 லட்சம் மதிப்புள்ள BMW பைக்கா!! பிரபல நடிகரின் தாராள மனசு...

அந்த வகையில் தான் சமீபத்தில் பிரபல நடிகர் ஒருவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது நண்பருக்கு பிஎம்டபிள்யூ பைக்கை பரிசளித்து அவரது ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். அந்த பிரபல நடிகர் வேறு யாருமில்லை, முன்னணி கன்னட நடிகர் கிச்சா சுதீப் தான். கன்னட நடிகர் என கூறுவதை காட்டிலும் கிச்சா சுதீப்பை முன்னணி தென்னிந்திய நடிகர் என்றுதான் கூற வேண்டும்.

என்னங்க சொல்றீங்க... பிறந்தநாள் பரிசாக ரூ.3 லட்சம் மதிப்புள்ள BMW பைக்கா!! பிரபல நடிகரின் தாராள மனசு...

ஏனெனில் தென்னிந்திய மக்கள் அனைவருக்கும் நன்கு பரீட்சையமானவராக கிச்சா சுதீப் விளங்குகிறார். இவரது நடிப்பில் பல வெற்றிப்படங்கள் வெளிவந்துள்ளன. நடிகர் விஜய் உடன் புலி, கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் முடிஞ்சா இவன புடி உள்ளிட்ட நேரடி தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார். குறிப்பாக, எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் வில்லன் ரோலில் இவர் நடித்த நான் ஈ படம் தென்னிந்தியா முழுவதும் பட்டித்தொட்டி எங்கும் சுதீப்பை கொண்டுப்போய் சேர்த்தது.

என்னங்க சொல்றீங்க... பிறந்தநாள் பரிசாக ரூ.3 லட்சம் மதிப்புள்ள BMW பைக்கா!! பிரபல நடிகரின் தாராள மனசு...

இன்னும் சொல்லப்போனால், எதிர்மறையான கதாபாத்திரமாக இருந்தாலும் நான் ஈ படத்தின் மூலமாக இந்தியா முழுவதும் கவனிக்கத்தக்க நடிகரானார், கிச்சா சுதீப். இத்தகைய பிரபலமான நடிகரின் பிறந்த நாள் இன்று (செப்டம்பர் 2). 49 வயதை நிறைவு செய்து தனது 50 ஆவது வயதில் சுதீப் நுழைந்துள்ளார். கிச்சா சுதீப்பின் பிறந்த நாள் குறிப்பாக கர்நாடகாவில் அவரது ரசிகர்களால் விமர்ச்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

என்னங்க சொல்றீங்க... பிறந்தநாள் பரிசாக ரூ.3 லட்சம் மதிப்புள்ள BMW பைக்கா!! பிரபல நடிகரின் தாராள மனசு...

அதேநேரம் தனது பிறந்தநாளிற்கு ஏழை, எளியோர்க்கு தன்னால் முடிந்த உதவிகளையும் கடந்த காலங்களில் கிச்சா சுதீப் செய்து கொடுத்துள்ளார். இம்முறை தனது நண்பரும், பிக்பாஸ் கன்னடா சீசன் 2 வெற்றியாளருமான நடிகர் அகுல் பாலாஜிக்கு பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கை பரிசளித்துள்ளார். இதனை அகுல் பாலாஜி தனது சமூக வலைத்தள பக்கங்களில் படங்களுடன் வெளியிட்டுள்ளார்.

அகுல் பாலாஜிக்கு கிச்சா சுதீப் வழங்கியிருப்பது புதிய ஜி310ஆர் கிடையாது, ஆர்டிஓ அலுவலத்தில் பதிவு செய்யப்பட்ட பழையதே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கை பொறுத்தவரையில், பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்தின் நாக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்காக விளங்கும் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.2.70 லட்சமாக உள்ளது. ஸ்டாண்டர்ட் என்ற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே ஜி310ஆர் கிடைக்கிறது.

என்னங்க சொல்றீங்க... பிறந்தநாள் பரிசாக ரூ.3 லட்சம் மதிப்புள்ள BMW பைக்கா!! பிரபல நடிகரின் தாராள மனசு...

ஆனால், ரேசிங் நீலத்துடன் போலார் வெள்ளை, ரேசிங் சிவப்பு, காஸ்மிக் கருப்பு என்ற 3 விதமான நிறத்தேர்வுகளில் இந்த பைக்கை தேர்வு செய்யலாம். இதில் ரேசிங் சிவப்பு நிறத்தேர்வில் தான் தனது நண்பருக்கு ஜி310ஆர் பைக்கை நடிகர் கிச்சா சுதீப் பரிசளித்துள்ளார். இந்த பிஎம்டபிள்யூ நாக்டு பைக்கில் 313சிசி வாட்டர்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் 4-ஸ்ட்ரோக் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 9,250 ஆர்பிஎம்-இல் 34 எச்பி மற்றும் 7,500 ஆர்பிஎம்-இல் 20.6 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்த என்ஜின் உடன் கான்ஸ்டண்ட் மெஷ் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. அதிகப்பட்சமாக ஜி310ஆர் பைக்கில் மணிக்கு 141கிமீ வேகத்தில் செல்ல முடியும். இந்த பைக்கில் ஓட்டுனர் இருக்கை ஆனது தரையில் இருந்து 30.9 இன்ச் உயரத்தில் பொருத்தப்படுகிறது. சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் தலைக்கீழான ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் ப்ரீ-லோடு அட்ஜெஸ்ட் ஆகக்கூடிய சுருளும் வழங்கப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, September 2, 2022, 19:42 [IST]
English summary
Kiccha sudeepa gift bmw g 310 r to friend
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+