வித்தியாசமான வாகனத்தை தொட்டு பார்க்க ஏங்கிய சிறுவனுக்கு கிடைத்த சர்ப்பிரைஸ்! இதோட விலை என்ன? வைரல் வீடியோ!
வித்தியாசமான வாகனத்தை ஆசையுடனும் ஏக்கத்துடன் பார்த்த குழந்தைக்கு அந்த வாகன உரிமையாளர் கொடுத்த சர்ப்ரைஸ் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள். இவர் இந்த குழந்தைக்கு செய்த விஷயத்தை பலர் பாராட்டி வருகிறார்கள். வித்தியாசமான வாகனத்தில் குழந்தை பயணிந்ததால் சந்தோஷமாக இருந்தது. இப்படியான வித்தியாசமான வாகனம் எது? என்ன நடந்தது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நாம் சிறுவயதில் இருக்கும்போது சாலையில் காஸ்ட்லியான வித்தியாசமான கார்கள் எதுவும் இருந்தால் அதை ஆசையுடனும் இயக்கத்துடன் பார்த்திருப்போம். இந்த காரில் ஒருமுறையாவது பயணித்து விட மாட்டோமா என்ற ஏக்கம் நம் மனதில் இருக்கும். இந்த இயக்கத்தில் எப்படியாவது காரைத் தொட்டுப் பார்ப்போம் என்று கூட தோன்றும். ஆனால் அதை காரின் உரிமையாளர் பார்த்தால் நம்மை திட்டுவார்கள் என பயந்து பயந்து காரைத் தொட்டு பார்ப்போம்.

இப்படியான சம்பவம் ஒன்று சமீபத்தில் நடந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் சீனு மாலிக் 365 என்ற பக்கத்தில் ஒரு வீடியோ பதிவாகி இருந்தது. இந்த வீடியோவில் சாலையின் ஓரம் வித்தியாசமான வழக்கமான வாகனமாக இல்லாமல் ATV ரக வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. ATV என்றால் ஆல் டிரைன் வெஹிகில் ஆகும். இந்தியாவில் இப்படியான வாகனங்கள் மிகக் குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன.
இந்த வித்தியாசமான வாகனத்தை பார்த்த பகுதியில் இருந்த குழந்தை உரிமையாளர் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு வாகனத்தின் அருகே மெதுவாக சென்று வாகனத்தை தொட்டு பார்த்தது. இதை வீட்டின் மாடியில் இருந்த காரின் உரிமையாளர் பார்த்து தனது செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்த குழந்தை தனது வாகனத்தை ஏக்கமாக பார்ப்பதை உணர்ந்தார்.
உடனடியாக அவர் கீழே சென்றார் அவர் வருவதை பார்த்ததும் குழந்தை தன்னை பிடிக்க தான் என தவறாக புரிந்து கொண்டு அங்கிருந்து ஓட துவங்கியது இவர் பின்னால் ஓடி சென்று அந்த குழந்தையை பிடித்து அந்த குழந்தையின் இயக்கத்தை போக்கும் விதமாக அந்த குழந்தையை அந்த வாகனத்தில் ஏற்றி ஒரு ரவுண்டு சுற்றி வந்தார்.
தன்னை பிடிக்க வருகிறார்கள் என நினைத்த குழந்தைக்கே இப்படி ஒரு சர்ப்ரைஸ் கிடைத்தது அந்த குழந்தையை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து அந்த குழந்தையை அவர் அந்த பகுதியில் சுற்றி கூட்டி வந்து அந்த குழந்தைக்கு பிடித்த விஷயங்களை எல்லாம் வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த குழந்தைக்கு அவர் ஷூ, மில்க் ஷேக் எல்லாம் வாங்கி கொடுத்துள்ளார். இந்த காட்சிகள் எல்லாம் அவர் வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், இவர் பயணித்த ATVரக வாகனம் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் வாகனமாக இருக்கிறது. இந்த வாகனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பயன்பாட்டில் இல்லை என்றாலும் இதற்கென தனியாக ரசிகர்கள் இருக்கிறார்கள். ATV ரக வாகனம் என்பது ஆல் டிரைன் வெஹிக்கிள் ஆகும். பெயர் கேட்டால் போல் இது அனைத்து விதமான பகுதிகளிலும் பயணம் செய்யக்கூடிய வாகனமாக இருக்கிறது.
சமமான சாலையாக இருந்தாலும் சரி, கரடு முரடான சாலையாக இருந்தாலும் சரி, அல்லது சாலையே இல்லாத ஆஃப் ரோடு பகுதியாக இருந்தாலும் சரி, இந்த வாகனத்தால் அசால்டாக பயணம் செய்ய முடியும். குறிப்பிட்ட இந்த வாகனம் போலரிஸ் நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் மேன் டூரிங் 570 என்ற வாகனமாகும். இந்த வாகனம் இந்தியாவில் ரூபாய் 8.5 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
இது ஒரு 4 வீல் ட்ரைவ் வாகனமாகும். இதில் 567 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 34எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் லிக்யூட் கூல்டு இன்ஜினாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் எலெக்ட்ரானிக் இன்ஜெக்ஷன் முறையில் இன்ஜினிற்குள் எரிபொருள் செலுத்தப்படுகிறது0 இது ஒரு ஆட்டோமேட்டிக் கியர் அம்சம் கொண்ட வாகனமாகும் 280 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இருக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பெரிய வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சமீபகாலமாக வித்தியாசமான ரக வாகனங்களை வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. இப்படியாகத்தான் இந்த ATV ரக வாகனம் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இந்த வாகனங்கள் வித்தியாசமான ரைடிங் அனுபவத்தை பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாகனமாக இருக்கும். இதன் விலை சற்று அதிகமாக இருந்தாலும் இதன் பயன் மிக அதிகமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








