நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்த சாலை விபத்து... மனச இரும்பா மாத்திகிட்டு வீடியோவை பாருங்க...
சமூக வலை தளங்களில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது. யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், பயங்கரமான சாலை விபத்து (Road Accident) ஒன்றில் இருந்து ஒரு குழந்தை அதிர்ஷ்டவசமாக தப்பிப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் கேரளா (Kerala) மாநிலம் கண்ணூர் (Kannur) பகுதியில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று 2 பெண்கள் ஒரு குழந்தையை அழைத்து கொண்டு ஆட்டோவில் வந்தனர். அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும், தவறுதலாக அந்த 2 பெண்களும் குழந்தையை கவனிக்க தவறி விட்டனர்.

இதை பயன்படுத்தி கொண்ட குழந்தை, அவர்களை தனியாக விட்டு விட்டு, அவசர அவசரமாக சாலையை கடக்க ஓடியது. அப்போது மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) கார் ஒன்று அவ்வழியாக வந்தது. ஆனால் அந்த காரின் டிரைவர், சாலையை கடக்க முயன்ற குழந்தையை முதலில் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
ஏனெனில் குழந்தையின் முன்னால் ஆட்டோ நின்று கொண்டிருந்தது. ஆனால் நல்ல வேளையாக ஒரு கட்டத்தில் அவர் குழந்தையை பார்த்து விட்டார். அவர் லாவகமாக காரை சற்று திருப்பியதால், காரின் முன் பகுதியில் குழந்தை மோதுவது தவிர்க்கப்பட்டது. எனினும் காரின் பக்கவாட்டு கதவுகளில் மோதி, குழந்தை கீழே விழுந்ததாக தெரிகிறது.

இதன் பின் அந்த 2 பெண்களும் அலறியடித்து கொண்டு வந்து குழந்தையை தூக்குவதை நம்மால் பார்க்க முடிகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த சாலை விபத்தில் குழந்தையின் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் குழந்தைக்கு காயங்கள் ஏதாவது ஏற்பட்டுள்ளதா? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த குழந்தையை அழைத்து வந்த பெண்கள் மீதே தவறு இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் குழந்தைகள் எப்போதுமே விளையாட்டுதனமாகதான் இருப்பார்கள். பெரியவர்கள்தான் அவர்களை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். இதை செய்ய அந்த 2 பெண்களும் தவறி விட்டனர்.
குழந்தைகளை நாம் எப்போதும் கையை பிடித்து அழைத்து செல்வதுதான் சிறந்தது. குறிப்பாக சாலைகளை கடக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். என்ன நடந்து விட போகிறது? என சிறிது அலட்சியமாக இருந்தவர்கள், கடந்த காலங்களில் பெரிய விலையை கொடுத்துள்ளார்கள் என்பதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்வது சிறந்தது.
இந்த விபத்தில், கார் டிரைவரை நிச்சயமாக பாராட்டியே ஆக வேண்டும். அவர் 'அலர்ட்' ஆக இருந்த காரணத்தால்தான், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் அனைவருக்குமே ஒரு பாடம். சாலைகளில் குழந்தைகளை கவனமாக கையாள வேண்டும் என்ற பாடத்தை பெற்றோர்களுக்கு இந்த சம்பவம் கற்று கொடுத்துள்ளது.
மறுபக்கம் இந்திய சாலைகளில் எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை வாகன ஓட்டுனர்களுக்கு இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது. அதாவது வாகனத்தின் குறுக்கே குழந்தைகளோ, கால்நடைகளோ திடீரென குறுக்க வரலாம். எனவே மிதமான வேகத்தில் பயணம் செய்வதுதான் நல்லது. அப்போதுதான் உடனடியாக வாகனத்தை கட்டுப்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications








