இது எல்லாம் பிஞ்சுலயே முத்தினது... டிவிஎஸ் எக்ஸ்.எல் பைக்கில் இவ்வளவு வேகம் ஆகாது!!

வயதான ஒருவரை பின்னால் அமர்த்தி கொண்டு சிறுவன் ஒருவன் அதிவேகமாக டிவிஎஸ் எக்ஸ்.எல் (TVS XL) பைக்கை ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. யார் இந்த சிறுவன்? இந்த சம்பவம் எங்கு நடந்துள்ளது என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.

சாலை விபத்துகளுக்கு இந்தியா பெயர் போனது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் உலகளவில் அதிக சாலை விபத்துகள் நடைபெறக்கூடிய நாடுகளுள் ஒன்றாக இந்தியா உள்ளது. இதற்கு முக்கிய காரணம், இந்தியாவில் பெரும்பாலானோருக்கு விழிப்புணர்வு இல்லாததே ஆகும். குறிப்பாக, குறைந்த வயதில் வாகனங்களை இயக்குவோரின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகமாக உள்ளதை கூறியே ஆக வேண்டும்.

kid riding tvs xl100 bike

இதற்கு உதாரணங்களாக பல்வேறு சம்பவங்களை இதற்குமுன் பார்த்துள்ளோம். இந்த வரிசையில் தற்போது, டிவிஎஸ் எக்ஸ்.எல் பைக்கில் சிறுவன் ஒருவன் தனது பாட்டியை அழைத்து சென்றுள்ளான். இதுகுறித்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை, சம்பவத்தின்போது அந்த எக்ஸ்.எல் பைக்கிற்கு அருகில் சென்ற மற்றொரு வாகன ஓட்டி தனது மொபைல் போனில் காட்சிப்படுத்தி உள்ளார்.

இந்த விஷயத்தில் முக்கியமான குற்றம், இருசக்கர வாகனத்தை போதிய வயதை எட்டாத சிறுவன் ஓட்டியுள்ளான். இதற்கடுத்த குற்றம், பைக்கில் செல்லும் இருவரது தலையிலும் ஹெல்மெட் இல்லை. 3வது குற்றம், அதிவேகத்தில் பயணித்திருப்பது. எந்த அளவிற்கு அதிவேகம் என்றால், வீடியோவை காட்சிப்படுத்தியவர்கள் காரில் சென்றுள்ளனர். ஆனால் இவர்களது காரை காட்டிலும் அதிவேகத்தில் அந்த சிறுவன் தனது எக்ஸ்.எல் பைக்கை ஓட்டியுள்ளான்.

வீடியோவில், சாலையில் இவர்கள் இருவரது வாகனங்களை தவிர்த்து வேறெந்த வாகனமும் இல்லை. வீடியோ முடியும் தருவாயின்போதே சில வாகனங்களை பார்க்க முடிகிறது. சாலை எந்தவொரு குண்டுக்குழியும் இன்றி தரமானதாக காட்சியளிக்கிறது. அத்துடன், சாலை நேராக எந்தவொரு வளைவும் இன்றி உள்ளதால், இந்த சிறுவனால் அவ்வளவு வேகத்தில் வயதானவரை பின்னால் வைத்து கொண்டு செல்ல முடிந்துள்ளது.

இருப்பினும் இவ்வாறான செயல்கள் தண்டனைக்குரிய குற்றமாகும். சிறுவனது பாட்டி அவரது ஆபத்தான சூழலை உணராமல் பயணம் செய்துள்ளார். ஏனெனில் பொதுவாகவே 2-வீலரில் ஒரு பக்கம் பார்த்தவாறு அமர்ந்தால் ரைடருக்கு போதிய பேலன்ஸ் கிடைக்காது. நன்கு டிரைவிங் தெரிந்தவரால் மட்டுமே அத்தகைய சூழலை கையாள முடியும். ஒரு சிறுவனால் அது சாத்தியமற்றது.

சாலையில் இவ்வளவு வேகத்தில் செல்லும்போது ஏதேனும் ஒன்று குறுக்கே வந்தாலோ அல்லது குழியில் பைக் இறங்க நேர்ந்தாலோ பைக்கின் கட்டுப்பாட்டை இழக்க நேரிடலாம். அத்தகைய சூழலை நன்கு முதிர்ந்த பைக் ஓட்டியாலேயே சரிவர கையாள முடியாது எனும்போது, கால் கூட எட்டாத இந்த சிறுவனால் வாய்ப்பே இல்லை. டிவிஎஸ் எக்ஸ்.எல் அளவில் சிறியது. இருப்பினும் அத்தகைய பைக்கிலேயே இந்த சிறுவனுக்கு கால் எட்டவில்லை.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: கால் எட்டாத காரணத்தாலேயே இந்த சிறுவனால் முழுமையாக இருக்கையில் அமர்ந்து பைக்கை இயக்க முடியவில்லை. எந்தவொரு ஆட்டோமொபைல் நிறுவனமும் 18 வயது நிரம்பியவருக்கு ஏற்றவாறே தங்களது வாகனங்களை வடிவமைக்கின்றன. இந்த சிறுவனை பைக்கை ஓட்ட அனுமதித்த அவனது பெற்றோர்களை தான் இந்த விஷயத்தில் குற்றஞ்சாட்ட வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 1, 2023, 14:42 [IST]
English summary
Kid riding tvs xl100 at high speed with his grandmother
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+