உள்ள இருந்தது அவரா! சிக்னலில் காரை கழுவிய குழந்தைகளுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு! இத ஆயுசுக்கும் மறக்க மாட்டாங்க

இந்தியாவில் உள்ள டிராஃபிக் சிக்னல்களில் நாம் பலவிதமான காட்சிகளை காண முடியும். சிலர் வயிற்று பிழைப்பிற்காக பிச்சை எடுத்து கொண்டிருப்பார்கள். சிலர் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருப்பார்கள். சிலர் கார்களை கழுவி, அதன் மூலம் பணம் சம்பாதித்து கொண்டிருப்பார்கள். பெரியவர்கள் மட்டுமல்லாது, குழந்தைகளும் கூட இதை செய்கிறார்கள்.

இப்படி டிராஃபிக் சிக்னல் ஒன்றில் காரை கழுவிய குழந்தைகளுக்கு, 5 ஸ்டார் ஹோட்டலில் உணவு கிடைத்துள்ளது. ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், இது உண்மைதான். இந்த நெகிழ்ச்சிகரமான சம்பவம் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களைதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம். சரி, வாருங்கள். இனி செய்திக்குள் செல்லலாம்.

Kids Clean Chevrolet Cruze At Traffic Signal

சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. இதில், கவல்ஜித் சிங் (Kawaljeet Singh) என்பவர், செவர்லே க்ரூஸ் (Chevrolet Cruze) காரில் அமர்ந்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அப்போது ஒரு சில குழந்தைகள் உணவு தேவைக்கு பணம் சம்பாதிப்பதற்காக, அவரது காரை கழுவி கொண்டுள்ளனர்.

இதைக்கண்டு மனம் வருந்திய கவல்ஜித் சிங், அந்த குழந்தைகள் அனைவரையும் காரில் ஏற்றி கொண்டு, நேராக 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றுக்கு சென்றார். இந்த குழந்தைகள் அனைவருக்கும், 5 ஸ்டார் ஹோட்டலில் உணவு அருந்துவது அனேகமாக இதுதான் முதல் முறையாக இருக்கும் என கருதப்படுகிறது.

Kids Enjoying 5-star Hotel Dinner

இதன் காரணமாக அவர்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டார்கள். அடுத்த வேளை உணவு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற சந்தேகத்தில் இருந்தவர்களுக்கு, 5 ஸ்டார் ஹோட்டலில் உணவு கிடைத்தால் மகிழ்ச்சி ஏற்படாதா என்ன? காரில் பயணம் செய்தபோதும், 5 ஸ்டார் ஹோட்டலில் உணவு அருந்தியபோதும், அந்த குழந்தைகளின் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியை பார்க்கும்போதே நமக்கும் இனம் புரியாத சந்தோஷம் ஏற்படுகிறது.

இதற்கிடையே உணவு அருந்திய பிறகு, அந்த குழந்தைகள் அனைவரையும் ஒரு டொயோட்டா இன்னோவா (Toyota Innova) காரில் ஏற்றி, எங்கிருந்து அழைத்து வந்தாரோ, அதே இடத்திற்கு கவல்ஜித் சிங் அனுப்பி வைத்து விட்டார். இந்த குழந்தைகளுக்கு வாழ்க்கையில் எப்போதும் மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்த கவல்ஜித் சிங் பிரபலமான நபராக அறியப்படுகிறார்.

இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் மட்டும் அவரை பல லட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். தொழில் மற்றும் ஊடக ஆலோசகரான கவல்ஜித் சிங், அரசியல் ஆய்வாளராகவும் அறியப்படுகிறார். பிஸியான தனது வேலைகளுக்கு மத்தியில், அவ்வப்போது பல்வேறு நல்ல காரியங்களையும் கவல்ஜித் சிங் செய்கிறார்.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பலருக்கும் அவர் உதவிகள் செய்யும் வீடியோக்களை நம்மால் பார்க்க முடிகிறது. மனிதர்கள் மட்டுமல்லாது, நாய் போன்ற விலங்களுக்கும் கூட, கவல்ஜித் சிங்கின் உதவிக்கரங்கள் நீண்டுள்ளன. மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது கிடைக்கும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்பார்கள். கவல்ஜித் சிங்கிற்கு இந்த மகிழ்ச்சி நிறையவே கிடைத்து கொண்டுள்ளது!

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இனிமையாக கழிக்க வேண்டிய குழந்தை பருவத்தில், இந்த குழந்தைகள் டிராஃபிக் சிக்னல்களில் கார்களை கழுவி பணம் சம்பாதித்து கொண்டிருப்பது தனியாக விவாதிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். ஆனால் செவர்லே க்ரூஸ் மற்றும் டொயோட்டா இன்னோவா கார்களில் செய்த பயணத்தை இந்த குழந்தைகள் என்ஜாய் செய்திருப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம். கூடவே 5 ஸ்டார் ஹோட்டல் உணவையும்!

More from DriveSpark

Article Published On: Saturday, December 9, 2023, 13:26 [IST]
English summary
Kids clean chevrolet cruze at traffic signal receive 5 star hotel dinner from car owner
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+