பல கோடி ரூபாய் கார்களை சில்லு சில்லாக நொறுக்கிய சிறுவர்கள்

அமெரிக்கவில் உள்ள கார் டீலர்ஷிப்பில் நிறுத்தபட்டிருந்த ஜாகுவார், செவர்லே போன்ற 20க்கும் மேற்ப்பட்ட உயர் ரக கார்களை 4 சிறுவர்கள் உடைத்து நொறுக்கியுள்ளனர். இதனால் அந்நிறுவனத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.5 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.

பல கோடி ரூபாய் கார்களை சில்லு சில்லாக நொறுக்கிய சிறுவர்கள்

இதுகுறித்து அந்நாட்டின் ஹாரிஸ் கவுண்டி காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்தியில்; அமெரிக்க நாட்டை சேர்ந்த டெக்சாஸ் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான ஹியூஸ்டன் பகுதியில் உள்ள கார் டீலர்ஷிப் ஷோரூமில் ஜாகுவார், செவர்லே போன்ற பல உயர் ரக கார்களை நிறுத்தபட்டிருந்து. அங்கு கடந்த ஞாயிறு இரவு 10 மணியளவில் 4 சிறுவர்கள் டீலர்ஷிப் ஷோரூமின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று கார்களின் சாவிகளை திருடினர்.

பல கோடி ரூபாய் கார்களை சில்லு சில்லாக நொறுக்கிய சிறுவர்கள்

அதன்பின் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் ஒவ்வொன்றாக ஸ்டார்ட் செய்து ஓரு கார் மீது மற்றொரு காரினை மோதச்செய்து 20க்கும் மேற்ப்பட்ட கார்களை இடித்து நொறுக்கினர். இதில் டாட்ஜ் சேலஞ்சர் ஸ்காட் பேக், செவர்லே கொர்வெட் Z06, ஜாகுவார் XE, ஃபோர்டு முஸ்டாங் மற்றும் 987, போர்ஷே பாக்ஸ்டர் உள்ளிட்ட பல கார்கள் பலத்த சேதம் அடைந்தது. இதனால் அந்நிறுவனத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.5 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

பல கோடி ரூபாய் கார்களை சில்லு சில்லாக நொறுக்கிய சிறுவர்கள்

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டு அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரினை எடுத்து 4 சிறுவர்களும் தப்பிக்க முயன்றனர் அப்போது சம்பவ இடத்திலேயே இரு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். அதன்பின்னர் தப்பி சென்ற இரண்டு சிறுவர்களை அவர்கள் வீட்டின் அருகே போலீசார் கைது செய்தனர்.

பல கோடி ரூபாய் கார்களை சில்லு சில்லாக நொறுக்கிய சிறுவர்கள்

மேலும் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆராய்ந்தபோது 4 சிறுவர்கள் அங்குள்ள ஜன்னலை உடைத்து உள்ளே சென்று கார் சாவிகளை திருடி அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களை இடித்து சேதப்படுத்தியது தெரியவந்தது.

பல கோடி ரூபாய் கார்களை சில்லு சில்லாக நொறுக்கிய சிறுவர்கள்

பின்னர் கைது செய்யப்பட்ட 4 சிறுவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களிடம் விசாரனை நடத்தினர்.

பல கோடி ரூபாய் கார்களை சில்லு சில்லாக நொறுக்கிய சிறுவர்கள்

கைது செய்யப்பட்ட சிறுவர்களில் இரு சிறுவர்களுக்கு 14 வயதும் மற்ற இரு சிறுவர்களுக்கு 16 வயது என போலீசார் தெரிவித்தனர். சிறார் குற்றத்தில் கைது செய்யப்பட்ட 4 சிறுவர்களும் போலீசார் விசாரணை முடிந்து அவர்களை எச்சரித்து சிறுவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். பள்ளி பருவத்தில் உள்ள 4 சிறுவர்கள் கார்களின் மதிப்பினை அறியாமல் உயர் ரக கார்களை இடித்து சேதப்படுத்தியது அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 10, 2019, 16:36 [IST]
English summary
Teens Break Into Dealership Wreck cars $800K Demolition Derby : Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+