இந்தியாவையே கலக்கிய தமிழ் நடிகையின் பொண்ணா இவங்க! குழந்தைகள் கை காட்டியதும் 3 கோடி ரூபா காரை நிறுத்தீட்டாங்க!

இந்திய சந்தையில் முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட எஸ்யூவி ரக கார்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள்தான் இந்த ரகத்தை சேர்ந்த கார்களை அதிகம் விரும்புகின்றனர். திரையுலக நட்சத்திரங்களை பொறுத்தவரையில், மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் (Mercedes Benz G-Class) எஸ்யூவி காரில் பயணம் செய்வது என்பது, அவர்களுடைய அந்தஸ்தின் அடையாளமாக கருதப்படுகிறது. இது மிகவும் விலை உயர்ந்த சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்றாகும். அத்துடன் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்றதாகவும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் திகழ்கிறது.

சொகுசு மற்றும் ஆஃப்-ரோடு திறன்கள் என இரண்டும் கலந்து கட்டிய கலவையாக உருவாக்கப்பட்டுள்ளதால், மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் காரை திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வைத்துள்ளனர். ரன்பீர் கபூர் (Ranbir Kapoor) மற்றும் சாரா அலி கான் (Sara Ali Khan) போன்ற திரையுலக நட்சத்திரங்களிடம் எல்லாம் இந்த கார் உள்ளது.

Kids Stopped Khushi Kapoor s Mercedes Benz G-Class

அத்துடன் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் (IPL) கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் எம்எஸ் டோனி (MS Dhoni), ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) போன்ற கிரிக்கெட் வீரர்களிடமும் கூட மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் கார் இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்த வரிசையில் பாலிவுட் திரையுலகில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவரான குஷி கபூரிடமும் (Khushi Kapoor) மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் கார் இருக்கிறது. இவர் தமிழ்நாட்டில் இருந்து சென்று ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் கலக்கிய நடிகை ஸ்ரீதேவியின் (Sridevi) மகள் ஆவார்.

Mercedes Benz G-Class

குஷி கபூர் கடந்த 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் காரை வாங்கினார். குஷி கபூர் வாங்கியுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் கார் சிகப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. குஷி கபூர் வாங்கியிருப்பது மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் காரின் 400டி அட்வென்ஜர் எடிசன் (G-Class 400d Adventure Edition) ஆகும்.

இந்த காரை வாங்கியது முதலே, பல்வேறு இடங்களுக்கும் இந்த காரில்தான் குஷி கபூர் வந்து சென்று கொண்டுள்ளார். இந்த வரிசையில் ஏர்போர்ட் (Airport) ஒன்றுக்கு, இந்த காரில் குஷி கபூர் வந்தபோது எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்த வைரல் வீடியோவில், குஷி கபூரை பார்த்த சந்தோஷத்தில், அவரது காரை குழந்தைகள் சிலர் நிறுத்தி ஆரவாரம் செய்வதை நம்மால் காண முடிகிறது. குழந்தைகள் கை காட்டியதால், குஷி கபூரும் காரை நிறுத்தினார். பின்னர் அவர்களுக்கு கை கொடுத்து விட்டு, சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

குஷி கபூர் வைத்துள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் 400டி அட்வென்ஜர் எடிசன் வேரியண்ட்டின் தற்போதைய விலை 2.55 கோடி ரூபாயாக உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) மட்டுமே. ஆன்-ரோடு விலை (On-road Price) சுமார் 3.20 கோடி ரூபாய் என்ற அளவில் வரும்.

மிகவும் விலை உயர்ந்த இந்த காரில் 3.0 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 330 பிஎஸ் பவர் மற்றும் 700 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன், 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஸ்லைடிங் சன்ரூஃப், பர்ம்ஸ்டர் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 64 கலர் ஆம்பியண்ட் லைட்டிங், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி போன்ற பல்வேறு வசதிகளும், மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் 400டி அட்வென்ஜர் எடிசனில் வாரி வழங்கப்பட்டுள்ளன. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: குஷி கபூரின் அம்மாவான ஸ்ரீதேவி தமிழகத்தில் பிறந்தவர் ஆவார். இங்கிருந்து சென்று மலையாளம், கன்னடா, தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களிலும் அவர் நடித்தார். இதன் மூலம் இந்திய சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெருமையை அவர் பெற்றார்.

அவரது பாணியில் குஷி கபூரும் தற்போது பல்வேறு திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். எனவே வரும் காலங்களில், மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-க்ளாஸ் காரை போல், குஷி கபூர் இன்னும் பல்வேறு விலை உயர்ந்த கார்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Monday, April 7, 2025, 12:50 [IST]
English summary
Kids stopped khushi kapoor s mercedes benz g class luxury suv viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+