டிவி சீரியல்கள் எங்கே கொண்டுவந்து நிறுத்தி இருக்கு பாருங்க.. ஆடி காரில் வந்து இறங்கியவர் இவ்வளவு பெரிய நடிகரா?
ஆடி (Audi) கார்களுக்கு என்றே இந்தியா உள்பட உலக அளவில் நிறைய கஸ்டமர்கள் உள்ளனர். குறிப்பாக இந்தியாவில், மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ நிறுவனங்களுக்கு அடுத்து ஆடி கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த அளவிற்கு ஆடி கார்களுக்கு கஸ்டமர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். அந்த வரிசையில், தற்போது நடிகர் ஒருவர் ஆடி நிறுவனத்தின் பிரபலமான க்யூ7 (Q7) காரை வாங்கி உள்ளார். யார் அந்த நடிகர் என்பதையும், அவர் வாங்கியுள்ள ஆடி காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
சினிமாவில் நல்ல கட்டுக்கோப்பான உடலமைப்பை கொண்டவர்கள் தான் பிரபலமாக முடியும் என்றில்லை. திறமை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் மக்கள் மனதில் இடம்பிடித்து, பணக்காரராக முடியும். குறிப்பாக காமெடி நடிகராக இருந்தால், உடல் பருத்த அல்லது முற்றிலும் ஒல்லியான தோற்றம் தான் அவர்களது பலம் ஆகும்.

இந்த வகையில் பாலிவுட் சினிமா வட்டாரத்தில் பிரபலமாக இருக்கும் காமெடி நடிகர் கிகு சாரதா (Kiku Sharda). தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலமாக பிரபலமாகி அதன் மூலம் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற நடிகர்களை தான் பார்த்திருப்பீர்கள். ஆனால், கிகு சாரதா முதலாவதாக 'மிட்டி' என்கிற இந்தி திரைப்படத்தில் நடித்து பிரபலமாகி அதன் மூலம் டிவி சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
ராஜஸ்தானின் ஜோத்பூரில் பிறந்த 48 வயதான கிகு சாரதாவுக்கு 'FIR' என்கிற தொலைக்காட்சி தொடரில் அவர் நடித்த போலீஸ்காரர் கதாபாத்திரம் மிகுந்த விளம்பரத்தை தேடி கொடுத்தது. 2006இல் இருந்து 2014 வரையில் என சுமார் 8 வருடங்கள் இந்த டிவி சீரியல் ஒளிப்பரப்பப்பட்டதற்கு கிகு சாரதாவும் முக்கிய காரணமாவார்.

சமீப காலமாக டிவி நிகழ்ச்சிகளில் நடிப்பதை விட்டு, திரைப்படங்களில் மட்டுமே காட்சித்தந்து வந்த கிகு சாரதா, கடந்த 2024ஆம் ஆண்டில் இருந்து பிரபலமான 'தி கிரேட் இந்தியன் கபில் ஷோ'-இல் காட்சி தர ஆரம்பித்துள்ளார். இதற்கிடையில் திரைப்படங்களிலும் நடித்துவரும் கிகு சாரதாவின் நடிப்பில் அடுத்ததாக 'வெல்கம் டூ தி ஜங்கிள்' என்கிற இந்தி திரைப்படம் திரைக்குவர உள்ளது.
இதற்கிடையில்தான், புதியதாக ஆடி க்யூ7 காரை காமெடி நடிகர் கிகு சாரதா வாங்கியுள்ளார். புதியதாக வாங்கிய காரில் கிகு சாரதா வந்திறங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், நடிகர் கிகு சாரதாவின் அடர் நீல நிறத்திலான ஆடி க்யூ7 காரை பார்க்கலாம். இதனை 'வெயிட்டோமோ நீலம்' என ஆடி நிறுவனம் அழைக்கிறது.

இது இல்லாமல், மைதோஸ் கருப்பு, சாமுராய் கிரே, சாகிர் கோல்டு, கிளாசியர் வெள்ளை உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களிலும் க்யூ7 விற்பனை செய்யப்படுகிறது. பிரீமியம் பிளஸ், போல்ட் எடிசன் மற்றும் டெக்னாலஜி என 3 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் க்யூ7 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.88.70 லட்சத்தில் இருந்து ரூ.97.85 லட்சம் வரையில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் மத்தியில் ரேஞ்ச் ரோவர் கார்கள் தான் பிரபலமானவை என்று பார்த்தால், சமீப காலமாக ஆடி கார்களும் கவனத்தை பெற்று வருகின்றன. இதன் வெளிப்பாடே, தற்போது காமெடி நடிகர் கிகு சாரதா வாங்கியிருக்கும் ஆடி க்யூ7 கார் ஆகும்.


Click it and Unblock the Notifications









