அமெரிக்க அதிபரை சந்திக்க குண்டுதுளைக்காத ரயிலில் பயணிக்கும் வடகொரிய அதிபர்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ஃப்பை சந்திப்பதற்காக குண்டு துளைக்காத ரயிலில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பயணத்தை துவங்கி இருக்கிறார். அவர் பயணிக்கும் குண்டு துளைக்காத ரயில்தான் இப்போது மீடியாக்களின் ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கிறது.

அமெரிக்க அதிபரை சந்திக்க குண்டுதுளைக்காத ரயிலில் பயணிக்கும் வடகொரிய அதிபர்!

அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு என உலகை நடுங்க வைத்தவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். குறிப்பாக, அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். மூன்றாவது போர் ஏற்பட்டுவிடுமோ என்று பல நாடுகள் கவலை கொண்டிருந்தன.

அமெரிக்க அதிபரை சந்திக்க குண்டுதுளைக்காத ரயிலில் பயணிக்கும் வடகொரிய அதிபர்!

இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ஃப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் கடந்த ஆண்டு திடீரென சந்தித்து பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தயது. கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடந்த இந்த சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்ததுடன், மூன்றாவது உலகப்போர் ஏற்படுவதற்கான பதட்டத்தையும் தணித்தது.

அமெரிக்க அதிபரை சந்திக்க குண்டுதுளைக்காத ரயிலில் பயணிக்கும் வடகொரிய அதிபர்!

இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்கான தனது சகாக்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் கிம் ஜாங் உன் தனது குண்டுதுளைக்காத ரயிலில் பயணத்தை துவங்கி இருக்கிறார். வடகொரிய தலைநகர் பியாங்யாங் ரயில் நிலையிலிருந்து வியட்நாம் புறப்பட்டார்.

அமெரிக்க அதிபரை சந்திக்க குண்டுதுளைக்காத ரயிலில் பயணிக்கும் வடகொரிய அதிபர்!

வடகொரியாவிலிருந்து வியட்நாமிற்கு விமானம் மூலமாக 4 மணிநேரத்தில் சென்றுவிட முடியும். ஆனால், கிட்டத்தட்ட 4,500 கிமீ தூரத்தை ரயில் மூலமாக இரண்டரை நாள் (60 மணிநேரம்) பயணித்து வியட்நாம் செல்ல இருக்கிறார் கிம் ஜாங் உன்.

அமெரிக்க அதிபரை சந்திக்க குண்டுதுளைக்காத ரயிலில் பயணிக்கும் வடகொரிய அதிபர்!

உயிருக்கு அச்சுறுத்தல் அதிகமுடைய கிம் ஜாங் உன் விமானத்தை விட தனது ரயில்தான் மிக பாதுகாப்பானதாக கருதுகிறார். இதுதான் மிக நீண்ட தூர பயணத்திற்கு கூட ரயிலை தேர்வு செய்ததற்கான காரணம்.

அமெரிக்க அதிபரை சந்திக்க குண்டுதுளைக்காத ரயிலில் பயணிக்கும் வடகொரிய அதிபர்!

இந்த ரயில் பயணம் மிக நீண்டதூரமாக அமைந்தாலும், இந்த குண்டுதுளைக்காத ரயிலில் பல்வேறு சொகுசு வசதிகள் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 21 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் படுக்கை வசதியுடன் கூடிய பெட்டிகள் உண்டு.

அமெரிக்க அதிபரை சந்திக்க குண்டுதுளைக்காத ரயிலில் பயணிக்கும் வடகொரிய அதிபர்!

அதேபோன்று, அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வதற்கான தனிப் பெட்டியும் உள்ளது. சமையல் செய்வதற்கான வசதிகள், பார் வசதி, டிவி திரைகள் உள்ளிட்ட ஏராளமான சொகுசு வசதிகள் உள்ளன.

அமெரிக்க அதிபரை சந்திக்க குண்டுதுளைக்காத ரயிலில் பயணிக்கும் வடகொரிய அதிபர்!

இந்த ரயிலில் செயற்கைகோள் போன் மூலமாக நாட்டின் முக்கிய அதிகாரிகளை தொடர்பு கொள்வதற்கான வசதியும் உள்ளது. மேலும், கிம் ஜாங் உன் பயன்படுத்தும் மெர்சிடிஸ் பென்ஸ் கார் மற்றும் தாக்குதல் சமயங்களில் வெளியேறுவதற்கான சிறிய ரக ஹெலிகாப்டரும் இந்த ரயிலில் இருப்பதாக மீடியா தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபரை சந்திக்க குண்டுதுளைக்காத ரயிலில் பயணிக்கும் வடகொரிய அதிபர்!

வடகொரியாவில் பயணிக்கும்போது இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 45 கிமீ வேகத்திலும், சீனாவில் பயணிக்கும்போது அதிகபட்சமாக 80 கிமீ வேகத்திலும் பயணிக்கும். கிம் ஜாங் உன் பயணிக்கும் வழித்தடங்களில் முழுமையான பாதுகாப்பு சோதனைகள் செய்யப்பட்டு ரயில் இயக்கப்படுகிறது.

அமெரிக்க அதிபரை சந்திக்க குண்டுதுளைக்காத ரயிலில் பயணிக்கும் வடகொரிய அதிபர்!

அத்துடன், கிம் ஜாங் உன் பயணிக்கும் ரயில் செல்லும் வழித்தடத்தில் உள்ள இதர தண்டவாளங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த அளவுக்கு மிகவும் பாதுகாப்பாக அவர் பயணம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

அமெரிக்க அதிபரை சந்திக்க குண்டுதுளைக்காத ரயிலில் பயணிக்கும் வடகொரிய அதிபர்!

கிம் ஜாங் உன் மட்டுமின்றி, அவரது தந்தை கிம் ஜாங் இல் மற்றும் அவரது பாட்டனார் கிம் இல் சங் ஆகியோரும் விமானப் பயணத்தை தவிர்த்து, ரயிலில் செல்வதையே வழக்கமாக வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, February 25, 2019, 11:26 [IST]
English summary
Kim Jong Un Is On 60 Hour Journey In Armoured Train To Vietnam Summit.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+