கிழிந்து போன பேண்ட்டை போட்டுக் கொண்டு பல கோடி ரூபாய் காரில் வந்தது அவங்களா!.. அழகுல ரோஜா மலரே தோத்திருச்சு!..
பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகைகளில் கிம் ஷர்மா-வும் ஒருவர் ஆவார். எளிமைக்கு பெயர்போனவராகவும் இவர் காட்சியளிக்கின்றார். இதற்கு உதாரணமாக ஏழைகளின்வாகனம் என்றழைக்கப்படும், ஒரு லட்ச ரூபாய் காரான டாடா நானோவில் அவர் கடந்த காலங்களில் காட்சி தந்திருக்கின்றார். இதுவே அவர் எளிமையானவர் என்பதற்கு சான்றாக இருக்கின்றது.
இத்தகைய ஓர் நடிகையே தற்போது 2 கோடி ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றி வாங்கி ஒட்டுமொத்த இந்தியர்களையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றார். அவர் வாங்கி இருப்பது பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டிபிள்யூ-வின் தயாரிப்பு ஆகும். ஐ7 எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் கார் மாடலையே அவர் வாங்கி இருக்கின்றார்.

இது ஓர் சொகுசு செடான் ரக மின்சார கார் ஆகும். இந்த காரை ஜெர்மானிய நிறுவனமான பிஎம்டபிள்யூ ரூ. 1.95 கோடிக்கும் அதிகமான விலையில் இந்திய சந்தையில் விற்பனைச் செய்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய மாபெரும் தொகையைக் கொடுத்தே அவர் இந்த காரை வாங்கி இருக்கின்றார்.
நாங்கள் கூறி இருப்பது வெறும் அந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. அதன் நிஜ விலை அதாவது, ஆன்-ரோடு விலை ரூ. 2.3 முதல் ரூ. 2.5 கோடி வரை இருக்கும் என தெரிகின்றது. விலைக்கு ஏற்ப அதிக சொகுசு வசதிகளையும், சிறப்பு தொழில்நுட்ப வசதிகளையும் இந்த கார் தாங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பாக, அழகில் நடிகை கிம் ஷர்மாவையே மிஞ்சும் அளவிற்கு அந்த கார் உள்ளது. இதனால்தான் அந்த காரை நடிகை தற்போது வாங்கி இருக்கின்றார். சொல்லப் போனால் இருவரும் மிகவும் அழகாகவே இருக்கின்றார். குறிப்பாக, கிம் ஷர்மா அணிந்திருந்த வெள்ளை ஆடை அவரை மிகவும் அழகாக காண்பிக்கும் வகையில் இருந்தது.
காருக்கு மேட்சாகவே அவர் அந்த உடையைக்கூட அணிந்திருந்தார். அந்த காரின் வெளிப்புறம் பெரும்பாலும் வெள்ளை நிறத்தாலேயே அலங்கரிப்பு செய்யப்பட்டு இருந்தது. அதேவேளையில், ஆங்காங்கே, கருப்பு நிறமும் காரில் பயன்படுத்தப்பட்டு இருந்தது. இந்த எலெக்ட்ரிக் காரில் ஓர் முழு சார்ஜில் 591 கிமீ முதல் 625 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும்.
இந்த அதிகபட்ச ரேஞ்ஜ் திறனுக்காக 101.7 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் பிஎம்டபிள்யூ ஐ7 எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மின்சார மோட்டாரை பொருத்த வரை, இரண்டு மோட்டார்கள் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஒன்று முன்பக்க ஆக்ஸிலிலும், மற்றொன்று பின் பக்க ஆக்ஸிலிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இவை இரண்டும் இணைத்து 544 குதிரை திறனையும், 745 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இதேபோல், இந்த காரில் சிறப்பம்சங்களும் அதிக அளவில் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், 31.3 அங்குல, 8கே தொழில்நுட்பம் கொண்ட சினிமா வகை திரை இந்த காரின் ரூஃபில் பொருத்தப்பட்டு இருக்கின்றது.
அமேசான் ஃபையர் டிவி வசதிக் கொண்டது இது ஆகும். இத்துடன், 5.5 அங்குல தொடுதிரை சிஸ்டம் வசதிக் கொணட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் சீட்டுகளை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டருக்காக 14.9அங்குல திரையும், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்காக 12.3அங்குல திரையும் இந்த காலில் வழங்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் சேர்ந்து காரின் உட்புறத்தை வேற பிரீமியம் தரத்திற்கு உயர்த்தி இருக்கின்றன. ஆகையால், இந்த கார் அனைத்து விஷயத்திலும் மிக மிக அழகான மற்றும் அற்புத படைப்பாக உள்ளது. இதனால்தான் கோடிக் கணக்கான ரூபாய்களைக் கொட்டி தொழிலதிபர்களும், திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு இந்த காரை வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் நாள்தோறும் புதிய புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே தற்போது பிரபல நடிகை எலெக்ட்ரிக் காரை வாங்கி அசத்தி இருக்கின்றார். அதுவும், ஒற்றைக் காருக்காக பல கோடி ரூபாய்களை அவர் செலவு செய்திருப்பது ஆச்சரியத்தின் உச்சத்திற்கே எடுத்துச் சென்றிருக்கின்றது.


Click it and Unblock the Notifications