சாதாரண மாருதி காரை வாங்கியது அவ்ளோ பெரிய ஆளா! யார்னு தெரிஞ்சதும் ஆச்சரியத்தில் வாயை பிளக்கும் மக்கள்!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan). மலையாளம் தவிர, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் துல்கர் சல்மான் பணியாற்றி வருகிறார். பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் (Mammootty) மகனான துல்கர் சல்மானின் நடிப்பில், கடந்த 2023ம் ஆண்டு வெளியான திரைப்படம் கிங் ஆஃப் கொத்தா (King Of Kotha). பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த இந்த திரைப்படம், கடைசியில் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஸனில் மண்ணை கவ்வியது. இது மலையாள திரையுலகின் பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றாகும்.

இருப்பினும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் கிங் ஆஃப் கொத்தா நல்ல வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் இந்த திரைப்படத்தின் இயக்குனர் அபிலாஷ் ஜோஷி (Abhilash Joshiy) கவனம் ஈர்த்தார். கிங் ஆஃப் கொத்தா திரைப்படம் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. அதாவது இந்த திரைப்படம் வெளியாகி சுமார் 1 வருடம் கடந்து விட்டது.

Abhilash Joshiy Buys Maruti Suzuki Jimny

இந்த சூழலில், கிங் ஆஃப் கொத்தா திரைப்பட இயக்குனர் அபிலாஷ் ஜோஷியின் பெயர் தற்போது மீண்டும் செய்திகளில் இடம்பெற தொடங்கியுள்ளது. அபிலாஷ் ஜோஷி புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியிருப்பதுதான் இதற்கு காரணம். அவர் வாங்கியிருப்பது மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny) கார் ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஜிம்னி காரின் ஆரம்ப விலை வெறும் 12.74 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 14.95 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

Maruti Suzuki Jimny

ஆனால் மாருதி சுஸுகி ஜிம்னி காரின் எந்த வேரியண்ட்டை அபிலாஷ் ஜோஷி வாங்கியுள்ளார்? என்பது உறுதியாக தெரியவில்லை. செயல்திறனை பொறுத்தவரையில், மாருதி சுஸுகி ஜிம்னி காரில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது. அதிகபட்சமாக 105 பிஎஸ் பவர் மற்றும் 134 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் இந்த காரில் கொடுக்கப்படுகிறது. இந்த காரில், அதிநவீன வசதிகளுக்கும் பஞ்சமில்லை. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதியுடன் கூடிய 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இந்த காரின் மிக முக்கியமான வசதிகளில் ஒன்றாகும்.

இதுதவிர, க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், ஹில் ஹோல்டு அஸிஸ்ட் மற்றும் ரியர் வியூ கேமரா போன்ற வசதிகளும் மாருதி சுஸுகி ஜிம்னி காரில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கார் மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மஹிந்திரா தார் (Mahindra Thar) மற்றும் ஃபோர்ஸ் கூர்கா (Force Gurkha) போன்ற கார்களுக்கு எல்லாம், மாருதி சுஸுகி ஜிம்னி, மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது. அடிக்கடி ஆஃப்ரோடு பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு மாருதி சுஸுகி ஜிம்னி ஏற்றதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 29, 2024, 14:11 [IST]
English summary
King of kotha director abhilash joshiy buys maruti suzuki jimny all details here
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+