இவங்களுமா! விலை குறைவான எலெக்ட்ரிக் காரை ஆள் ஆளாளுக்கு வாங்கும் பிரபலங்கள்! இதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஒன்று எம்ஜி கோமெட் இவி (MG Comet EV). தற்போதைய நிலையில் இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 6.99 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 9.53 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். எனவே இந்திய சந்தையில் கிடைக்க கூடிய விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக எம்ஜி கோமெட் இவி திகழ்கிறது.
பொதுவாக விலை குறைவான கார்களை திரையுலக பிரபலங்கள் வாங்க மாட்டார்கள். மிகவும் விலை உயர்ந்த கார்கள்தான் அவர்களின் முதல் சாய்ஸ். ஆனால் இதற்கு எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் மட்டும் விதிவிலக்கு. ஆம், திரையுலக பிரபலங்கள் பலரும், எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரை தொடர்ச்சியாக வாங்கி வருகின்றனர்.

இதற்கு தமிழ் திரைப்பட நடிகை வித்யுலேகா ராமன் (Vidyullekha Raman) ஒரு உதாரணம். இவர் சமீபத்தில் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரை வாங்கியிருந்தார். எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார் உருவத்தில் சிறியதாகும். எனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் இதனை எளிதாக ஓட்டலாம்.
அத்துடன் பார்க்கிங் செய்யும் வேலையும் சுலபமாக முடிந்து விடும். இதன் காரணமாகவே பிரபலங்கள் பலரும் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரை வாங்கி வருகின்றனர். இந்த வரிசையில் கீர்த்தி குல்ஹரி (Kirti Kulhari) தற்போது எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார்.

இவர் பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆவார். இதனை இன்ஸ்டாகிராம் (Instagram) பதிவு மூலமாக, கீர்த்தி குல்ஹரி அறிவித்துள்ளார். எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில், 17.3 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 230 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும்.
இது ஓரளவிற்கு சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) ஆகும். இது விலை குறைவான எலெக்ட்ரிக் காராக இருந்தாலும் கூட, நிறைய வசதிகள் (Features) வழங்கப்பட்டுள்ளன. இதில், 10.25 இன்ச் அளவில் வழங்கப்பட்டுள்ள 2 திரைகள் மிகவும் முக்கியமானதாகும். இதில் ஒன்று, டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கானது.
மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆக செயல்படும். இவை எல்லாம் தவிர வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் கீலெஸ் எண்ட்ரி போன்ற வசதிகளும் கூட, எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர சாலைகளில் அடிக்கடி கார் ஓட்ட வேண்டியுள்ளது. ஆனால் டூவீலரை பயன்படுத்த முடியாது. அளவில் சிறியதாக ஒரு கார் இருந்தால் பரவாயில்லை என நினைப்பவர்களுக்கு எம்ஜி கோமெட் இவி மிகவும் ஏற்றது என்பது எங்களுடைய கருத்து.


Click it and Unblock the Notifications








