அடுத்த மேட்ச்ல 6 அடிச்சு வர காசுல இந்த காரை தான் வாங்க போறாரு! கிரிக்கெட் வீரர் சொன்ன ரகசியம்!
தற்போது 2025ம் ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் நடந்து வருகிறது. இதில் தற்போது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக ரமன்தீப் சிங் என்பவர் விளையாடி வருகிறார். இவர் சமீபத்தில் ராஜ் ஷாமணி என்பவர் நடத்திய நேர்காணலில் இவர் தனது கனவு கார்கள் குறித்து பேசியுள்ளார். இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் எல்லாம் காஸ்ட்லியான கார்களை பயன்படுத்தி வரும் நிலையில் இவரும் காஸ்ட்லியான காரை வாங்க வேண்டும் என்ற ஆசையை வைத்துள்ளார். இவர் வாங்க விரும்பும் கார்கள் குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.
ரமன்தீப் சிங் தற்போது கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டராக விளையாண்டு வருகிறார். 27 வயதாகும் இவர் எதிர்காலத்தில் சிறந்த கிரிக்கெட் வீரராக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் சமீபத்தில் கிரிக்கெட் போட்டிகளுக்கு நடுவே ராஜ் ஷாமானியின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்பொழுது அவருக்க பிடித்த கார்கள் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது. அப்பொழுது ரமன் தீப் சிங் கனவு காராக லேண்ட்ரோவர் டிஃபென்டர் கார் இருப்பதாக தெரிவித்தார்.

லேண்ட் ரோவர் டிஃபென்டர் காரை பொருத்தவரை இந்திய மார்கெட்டில் ரூ1.20 கோடி முதல் ரூ3.20 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் 14 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. பெட்ரோல் வெர்ஷனில் 2.0 லிட்டர் மற்றும் 5.0 லிட்டர் ஆகிய இரண்டு ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இது போக டீசல் இன்ஜினை பொருத்தவரை 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் மற்றும் பெட்ரோல் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களிலும் ஹைபிரிட் வெர்ஷனும் கிடைக்கிறது. இதில் ஆக்டா வெர்ஷனை அந்நிறுவனம் சமீபத்தில் தான் வெளியறிரட்டது. இது பெட்ரோல் மைல்டு ஹைபிரிட் தொழிற்நுட்பத்தில் இயங்கும் திறன் கொண்டது.

இந்த இன்ஜின் 626 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஏகப்பட்ட சொகு வசதிகள் இருப்பதால் இந்த கார் மார்கெட்டில் ரூ2.98 கோடி முதல் ரூ3.21 கோடி என்ற விலையில் விற்பனையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரை பிரபலங்கள் பலர் பயன்படுத்தி வருகிறார்கள் விரைவில் ரமன் தீப் சிங் வாங்குவார் என எதிர்பார்க்கலாம்.
அடுத்தாக இவர் பேட்டியில் இந்தியாவில் ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் எண்ணிக்கையில் மிக குறைவு, அதை மிக அரிதாகவே பார்க்க முடியும். தனக்கு அரிதான பொருட்கள் மீது ஆர்வம் அதிகமாக இருப்பதால் தனக்கும் ரோல்ஸ்ராய்ஸ் பாந்தோம் காரை வாங்க வேண்டும் என்ற ஆசை இரப்பதாகவும் கூறினார். இது போக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரான ஸ்பெக்டர் காரையும் வாங்க விருப்பம் இருப்பதாக கூறினார்.

ரமன்தீப் சொன்னது போல் இந்தியாவில் மிக அரிய வகை காராக இருப்பது ரோல்ஸ்ராய்ஸ் பாந்தோம் கார் தான். இந்த கார் ரூ10.92 கோடி என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் காஸ்ட்லி கார் என்பதால் ஒரே ஒரு வகை வேரியன்ட் மட்டுமே உள்ளது. ஆனால் இதில் பல்வேறு கஸ்டமைசேஷன் ஆப்ஷன்கள் உள்ளன. கஸ்டமைசேஷனை பொருத்து விலையில் நிச்சயம் மாற்றம் இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் காஸ்ட்லியான கார்களை பல பிரபலங்கள் வாங்கி வருகின்றனர். இவர்களில் கிரிக்கெட் வீரர்களும் அடங்குவார்கள். அதில் ரமன்தீப் சிங் விரைவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரது கார் கனவு இந்த ஐபிஎல்ல போட்டிகளில் எப்படி விளையாடுகிறார் என்பதை பொருத்து மிக விரைவில் கூட நினைவாக வாய்ப்புகள் உள்ளது. இவர் சொன்னபடி ரோல்ஸ்ராய்ஸ் காரை வாங்கிவிட்டால் இந்தியாவில் இந்த அரிய வகை காரை வைத்திருக்கும் வெகு சிலரில் இவரும் இணைந்துவிடுவார்.


Click it and Unblock the Notifications









