பரம ஏழையா இருந்தாரு.. யுட்யூப் வாழ்க்கையையே மாத்திருச்சு! பைக்கையே கடன்ல வாங்கியவர் ஹைபிரிட் காரை வாங்கிட்டாரு

யுட்யூப் ஓர் மனிதரின் வாழ்க்கையை எந்த அளவிற்கு மாற்றும் என்பதற்கு சான்றாக கேஎல் ப்ரோ பிஜு ரித்விக் இருக்கின்றார். இந்தியாவின் ஃபேமஸான யுட்யூபர்களில் இவரும் ஒருவர் ஆவார். கேஎல் ப்ரோ பிஜுரித்விக், இதுவே அவரின் யுட்யூப் சேனலின் பெயர் ஆகும். ஆரம்பத்தில் பேஷன் ப்ரோ பைக்-கையே கடனில் வாங்கிய இந்த நபர் தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிகவும் காஸ்ட்லியான டொயோட்டா கார் ஒன்றை வாங்கி இருக்கின்றார். அவர் வாங்கி இருப்பது ஹைபிரிட் தொழில்நுட்பம் (Hybrid Tech) கொண்ட இன்னோவா ஹைகிராஸ் கார் மாடல் ஆகும்.

வழக்கமான டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கார் மாடலைக் காட்டிலும் காஸ்ட்லியான விலைக் கொண்ட மற்றும் அதிக ஆடம்பர அம்சங்களைத் தாங்கிய ஓர் கார் மாடலே இதுவாகும். இத்தகைய காரையே கேஎல் ப்ரோ பிஜு ரித்விக் தற்போது வாங்கி இருக்கின்றார். இவரின் கடந்த கால வாழ்க்கை என்பது மிகவும் கொடியது என்றே கூறலாம்.

Kl bro biju buys toyota innova hycross

குறிப்பாக, ஆரம்பத்தில் சேனல்லை தொடங்கியபோது அவர் சிறிய செல்போன் வாயிலாகவே தொடங்கினார். ஆனால், இப்போது மலையாள யுட்யூப் சேனலில் இவருடையதே நம்பர் 1 ஆகும். இந்த அளவிற்கு உயரத்தையே அவர் தற்போது எட்டியிருக்கின்றார். இவருடைய சேனல் கோவிட் காலகட்டத்தில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவில் நல்ல வரேவற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மடால்களில் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்-ம் ஒன்றாகும். இது ஓர் எம்பிவி ரக கார் மாடல். சமீபத்திலேயே இந்த கார் 1 லட்சம் யூனிட்டுகள் விற்பனை எனும் மாபெரும் சாதனையைப் படைத்தது. அந்த அளவிற்கு நாட்டு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை இந்த கார் மாடல் பெற்று வருகின்றது.

இந்த காரை இந்தியாவின் பல்வேறு பிரபலங்களும் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு அதிக சிறப்பம்சங்களை இந்த கார் மாடல் தாங்கி இருப்பதே முக்கிய காரணமாக இருக்கின்றது. அந்தவகையில், டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கார் மாடலில் பயணிகளின் சொகுசான டிராவல் அனுபவத்திற்காக ஓட்டோமேன் இருக்கைகள் (இரண்டாம் வரிசையில் வழங்கப்பட்டு இருக்கும்), வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள் (முன் பக்கத்தில்) மற்றும் சிறந்த ஏர் கன்டிஷனிங் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இத்துடன், 65-க்கும் மேற்பட்ட கார் இணைப்பு அம்சம், டொயோட்டாவின் சேஃப்டி சென்ஸ் அம்சம் போன்றவையும் பெற்றிருக்கின்றன. எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினே வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டாருடன் சேர்த்தே ஹைகிராஸ் காரில் ஹைபிரிட் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இது எரிபொருள் சிக்கனத்திற்கு உதவியாக இன்னோவா ஹைகிராஸ் காரில் செல்ஃப் சார்ஜிங் வசதிக் கொண்ட ஸ்ட்ராங் ஹைபிரிட் (Self-Charging Strong Hybrid Electric System) அம்சமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுவே அந்த காரை அதிகம் மைலேஜ் தரக் கூடியதாக மாற்றியிருக்கின்றது.

அதாவது இந்த அம்சம் கொண்ட இன்னோவா ஹைகிராஸ் லிட்டர் ஒன்றிற்கே 23.24 கிமீ வரையில் மைலேஜ் தரும். அதேநேரத்தில், டொயோட்டா நிறுவனம் இந்த அம்சம் இல்லாத நிலையிலிலும் இன்னோவா ஹைகிராஸ் காரை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதாவது, ஹைபிரிட் வசதி அல்லாத பெட்ரோல் மோட்டாரை மட்டுமே கொண்டதாக அந்த தேர்வு இருக்கும். மேலும், இதுவே ஆரம்ப நிலை இன்னோவா ஹைகிராஸ் தேர்வும் ஆகும். இது லிட்டர் ஒன்றிற்கு 16 கிமீ வரையில் மைலேஜ் தரும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அரசியல்வாதிகள், பணக்காரர்கள் மற்றும் பிரபலங்கள் என பலதரப்பட்ட மக்களை இந்த கார் மாடல் கவர்ந்து வருகின்றது. இதற்கு சான்றாகவே பிரபல யுட்யூபர்-ம் இந்த காரை தற்போது வாங்கி இருக்கின்றார்.

More from DriveSpark

Article Published On: Friday, December 6, 2024, 5:00 [IST]
English summary
Kl bro biju buys toyota innova hycross mpv car here is more details
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+