தோனி கவாஸாகி பைக், கோலி பிஎம்டபிள்யூ கார்-னு சொன்னாங்களே... எல்லாம் பொய்யா!! குடும்பத்தினர் வெளியிட்ட உண்மை

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் கே.எல் ராகுலின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். பிரபல பாலிவுட் நடிகர்களுள் ஒருவரான சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டியை அவர் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரது திருமணம் மஹாராஷ்டிராவில் காந்தலா பகுதியில் கடந்த ஜனவரி 23ஆம் தேதி நடந்தது.

மும்பை நகரத்தில் இருந்து சற்று தொலைவில், நடிகர் சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில் மிகவும் முக்கியமானவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர். கலந்து கொண்ட மில்லியனர்கள் குறைவாக இருப்பினும், அவர்களது சொகுசு கார்கள் அங்கும் இங்குமாக செல்ல இயற்கை வனம் மிகுந்த மலைப்பிரதேச பகுதியான காந்தலா 2, 3 நாட்களுக்கு திக்குமுக்காடி போய்விட்டது. இவ்வாறான ராயல் திருமணங்களில் மாப்பிள்ளை மற்றும் மணப்பெண்ணிற்கு எத்தகைய லக்சரியான பரிசு பொருட்களை வழங்குவார்கள் என்பதை பற்றி நான் கூற வேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன்.

தோனி & விராட் கோலி பரிசு வழங்கியது எல்லாம் பொய்யா?

நிச்சயமாக மணப்பெண்ணின் தந்தை சுனில் ஷெட்டியிடம் இருந்து மிகவும் காஸ்ட்லீயான திருமண பரிசு கிடைத்திருக்கும். அதேநேரம் மற்ற உறவினர்கள் மற்றும் நண்பர்களும் தங்களது திருமண பரிசுகளை வழங்கியிருப்பர். இந்த வகையில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி புது மாப்பிள்ளை மற்றும் மண்ப்பெண்ணுக்கு திருமண பரிசாக விலையுயர்ந்த கவாஸாகி பைக்கையும், முன்னணி வீரர் விராட் கோலி பிஎம்டபிள்யூ கார் ஒன்றையும் வழங்கியதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி பட்டித்தொட்டி எங்கு பரவியது.

இதில் தோனி திருமண பரிசாக வழங்கியதாக கூறப்பட்ட கவாஸாகி நிஞ்சா பைக் ரூ.80 லட்சம் விலை கொண்டது என்வும், கோலி & அவரது மனைவி நடிகை அனுஷ்கா ஷர்மா இணைந்து வழங்கியதாக கூறப்பட்ட பிஎம்டபிள்யூ கார் சுமார் ரூ.2.7 கோடி விலை கொண்டது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் தற்போது, தோனி மற்றும் விராட் கோலி கே.எல் ராகுல் - அதியா திருமணத்திற்கு பரிசுகள் வழங்கியதாக கூறப்பட்டதில் எந்த உண்மையும் இல்லை எனவும், மீடியாக்கள் தவறான செய்திகளை பரப்பி வருவதாகவும் சுனில் ஷெட்டியின் குடும்பத்துக்கு நெருக்கியமானவர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

தோனி & விராட் கோலி பரிசு வழங்கியது எல்லாம் பொய்யா?

ஏற்கனவே கூறியதுபோல், கே.எல் ராகுல் மற்றும் அதியாவின் திருமணத்தில் மிகவும் நெருக்கமானவர்களும், குடும்ப உறவினர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். கிரிக்கெட் வட்டாரத்தில் இருந்து எவரும் பங்கேற்றது போல் தெரியவில்லை. இருப்பினும் தோனியும், கோலியும் தங்களது திருமண பரிசுகளை அனுப்பி வைத்ததாக முன்பு வெளியான தகவல்கள் தெரிவித்தன. தற்போது அவை ஆதாரமற்ற செய்திகள் என திருமணத்தில் பங்கேற்றவர்கள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று, மேலும் சில சினிமா நட்சத்திரங்களும் புது தம்பதியினருக்கு திருமண பரிசாக லட்சம் & கோடி ரூபாய் மதிப்பில் விலையுயர்ந்த பொருட்களை வழங்கியதாக கூறப்பட்டது. அந்த செய்திகளில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பது தெரியவில்லை. நீண்ட வருட காதலுக்கு பின் தற்போது திருமணம் செய்து கொண்ட கே.எல் ராகுல் மற்றும் அதியா தம்பதி கடந்த வருடத்தில்தான் தங்களது காதலை அதிகாரப்பூர்வ வெளியுலகிற்கு அறிவித்தனர்.

தோனி & விராட் கோலி பரிசு வழங்கியது எல்லாம் பொய்யா?

அதுவரையில் வெளிநாடுகளுக்கு பலமுறை ஜாலியாக சுற்றுலா சென்றுள்ள இவர்களது திருமணம் இருவீட்டாரும் சம்மந்திக்க நடந்து முடிந்துள்ளது. பொதுவாக விஐபி-கள் என்றாலே அதிகளவில் சொகுசு கார்களை வைத்திருப்பர் தானே. அந்த வகையில், கே.எல் ராகுலிடம் பிஎம்டபிள்யூ எக்ஸ்7, லம்போர்கினி ஹூராகென் ஸ்பைடர் மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் ஏஎம்ஜி சி43 உள்ளிட்ட லக்சரி கார்கள் உள்ளன. இதில் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 ஆனது கே.எல் ராகுல் வாங்கிய முதல் லக்சரி கார் ஆகும்.

லம்போர்கினி ஹூராகென் ஸ்பைடர் இவரிடம் உள்ள விலையுயர்ந்த கார். உலகளவில் பிரபலமான லம்போர்கினி கார்களுள் ஒன்றான இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது தற்சமயம் ரூ.4 கோடி என்ற அளவில் உள்ளது. மெர்சிடிஸ்-பென்ஸ் ஏஎம்ஜி சி43 காரை தனது பிறந்தநாள் ஒன்றின்போது கே.எல் ராகுல் வாங்கினார். இவருக்கு மனைவி ஆகியிருக்கும் அதியாவிடமும் ஆடி க்யூ7 மற்றும் ஜாகுவார் எக்ஸ்.ஜே.எல் என்ற இரு லக்சரி கார்கள் உள்ளன. இதில் ஆடி க்யூ7 லக்சரி எஸ்யூவி காரை சமீபத்தில்தான் அதியா வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, January 27, 2023, 16:08 [IST]
English summary
Kl rahul athiya families denies that dhoni kohli have gifted expensive presents
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+