கே.எல். ராகுல் காட்டில் பண மழை! ஒரு காரின் விலையே இத்தன கோடியா! உண்மை தெரிந்ததும் வாயடைத்து போன மக்கள்!
இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவர் கே.எல். ராகுல் (KL Rahul). இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தற்போதைய ஹாட்-டாபிக் இவர்தான். ஆஸ்திரேலியாவிற்கு (Australia) எதிராக சமீபத்தில் நடைபெற்ற போட்டியில், கே.எல். ராகுலின் சிறப்பான செயல்பாடுகள்தான் இதற்கு காரணம்.
2023 கிரிக்கெட் உலக கோப்பை (2023 Cricket World Cup) தொடர் இந்தியாவில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று முன் தினம் (அக்டோபர் 8) சென்னையில் நடைபெற்ற உலக கோப்பை போட்டி ஒன்றில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

200 ரன்கள் மட்டுமே டார்கெட் என்பதால், இந்தியா எளிதாக வெற்றி பெற்று விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெறும் 2 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இந்தியா தடுமாறியது. ஆனால் கே.எல்.ராகுல் ஆட்டம் இழக்காமல் 97 ரன்களை விளாசியதால், இந்தியா வெற்றி பெற்றது. இந்தியாவின் வெற்றிக்கு விராட் கோஹ்லி (Virat Kohli) குவித்த 85 ரன்களும் முக்கியமான காரணம் ஆகும்.
இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற கே.எல்.ராகுல், கிரிக்கெட்டை போலவே கார்களையும் அதிகமாக நேசிக்க கூடியவர். இதை நிரூபிக்கும் வகையில், அவரிடம் மிகவும் விலை உயர்ந்த கார்கள் ஏராளமாக இருக்கின்றன. கே.எல்.ராகுலின் ஆடம்பரமான கார் கலெக்ஸன் (Car Collection) குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் (Lamborghini Huracan Spyder): கே.எல். ராகுலிடம் உள்ள லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் காரில், 5.2 லிட்டர் வி10 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 602 பிஹெச்பி பவர் மற்றும் 560 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன் 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் கியர் பாக்ஸ் (Gear Box) இணைக்கப்பட்டுள்ளது. கே.எல். ராகுல் வைத்துள்ள லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் காரின் எக்ஸ் ஷோரூம் விலையே (Price) சுமார் 4 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஸ்டன் மார்ட்டின் டிபி11 (Aston Martin DB11): லம்போர்கினி, ஃபெராரி (Ferrari) மற்றும் போர்ஷே (Porsche) ஆகிய கார்களுடன் ஒப்பிடும்போது, அஸ்டன் மார்ட்டின் கார்கள் இந்தியாவில் மிகவும் அரிதான ஒன்றாக கருதப்படுகின்றன. எனவே அஸ்டன் மார்ட்டின் கார்கள் சாலையில் வந்தால், நிச்சயமாக அனைவரும் திரும்பி பார்ப்பார்கள்.
அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தின் காரை கே.எல். ராகுல் வைத்துள்ளார். அது அஸ்டன் மார்ட்டின் டிபி11 ஆகும். இந்த காரில் 5.2 லிட்டர் வி12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 503 பிஹெச்பி பவர் மற்றும் 675 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுலிடம் உள்ள அஸ்டன் மார்ட்டின் டிபி11 காரின் விலை சுமார் 4.20 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது புது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
இன்னும் இருக்கு: இவை எல்லாம் தவிர, மெர்சிடிஸ்-பென்ஸ் சி43 ஏஎம்ஜி (Mercedes-Benz C43 AMG), ரேஞ்ச் ரோவர் வெலார் (Range Rover Velar) மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5) ஆகிய கார்களும், கே.எல்.ராகுலிடம் இருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் கடவுளாக மதிக்கப்படுகின்றனர். எனவே கிரிக்கெட் விளையாடுவதன் மூலமும், விளம்பரங்களில் நடிப்பதன் மூலமும் அவர்களுக்கு பணம் கொட்டுகிறது. இதன் காரணமாகவே கே.எல். ராகுல் போன்ற கிரிக்கெட் வீரர்களால் மிகவும் விலை உயர்ந்த கார்களை எல்லாம் எளிதாக வாங்க முடிகிறது.


Click it and Unblock the Notifications