ரூ. 12 கோடி மதிப்பலான ஹைப்பர் காரை இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸுக்காக உடைத்த பிரபல நிறுவனம்..!!
ரூ. 12 கோடி மதிப்பலான ஹைப்பர் காரை இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸுக்காக உடைத்த பிரபல நிறுவனம்..!!
உலகிலேயே ஹைப்பர்கார்கள் தயாரிப்பில் பிரபல கம்பெனிகளையே அலறவிட்ட நிறுவனம் கோனிக்ஸ்யெக்.
தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸுக்காக கோனிக்ஸ்யெக் செய்த காரியம் இன்றைய இணைய உலகில் வைரலை கிளப்பியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் கோனிக்ஸ்யெக் நிறுவனத்தை பின்தொடர்பவர்கள் கணக்கு சமீபத்தில் ஒரு மில்லியனை (10 லட்சம்) எட்டியது.
அதை கொண்டாடும் விதமாக ரூ.12 கோடி மதிப்பிலான கார் மீது க்ராஷ் டெஸ்ட் நடத்தி, அதன் வீடியோவை வெளியிட்டுள்ளது கோனிக்ஸ்யெக்.

கோனிக்ஸ்யெக் சமீபத்தில் அதிக திறன்பெற்ற ரீஜெரா காரை தயாரித்து வருவதாக தெரிவித்தது. வெறும் 80 கார்கள் தான் இந்த மாடலில் தயாரிக்கப்படவுள்ளது.

மேலும் ரீஜெராவின் மொத்த 80 கார்களும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. இந்நிலையில் அதன் மீது தற்போது க்ராஷ் டெஸ்டை கோனிக்ஸ்யெக் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
Trending On Drivespark:
Recommended Video


ரீஜெரா கார் முற்றிலும் கார்பன் - நாரிழையால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஹைப்பர் கார் எந்தவொரு தாக்குதல்களையும் எளிதாக சமாளிக்கும்.

காரின் தோற்றத்திலோ அல்லது அதனுடைய கட்டமைப்பிலோ எந்தவொரு சிதைவும் ஏற்படாது. இதை நிரூபித்து காட்டவே ரீஜெரா கார் மீது க்ராஷ் டெஸ்டை மேற்கொண்டது கோனிக்ஸ்யெக்.
2016 ஜெனீவா மோட்டார் கண்காட்சியில் கோனிக்ஸ்யெக் ரீஜெரா காரின் தயாரிப்பு மாதிரியை வெளியிட்டது. 5 லிட்டர் வி8 ட்வின் டர்போ எஞ்சின் கொண்ட இந்த கார் அதிகப்பட்சமாக 1500 பிஎச்பி பவரை வழங்கும்.

மேலும் இதில் மூன்று மின்சார மோட்டார்கள் இடம்பெற்றுள்ளன. 2.8 நொடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டிபிடிக்கும் திறனுடன் கோனிக்ஸ்யெக் ரீஜெரா காரை தயாரித்துள்ளது.

கார்பன்-நாரிழையில் காரின் கட்டமைப்பு உள்ளதால் எடை குறைந்தே இருக்கும். கியர்பாக்ஸ் தேவையை விடுத்து டேரக்ட் டிரைவ் சிஸ்டம் இந்த காரின் பொருத்தப்பட்டுள்ளது.

கிளிட்ச்-ஸ்ளிப் மெக்கானிசம் கொண்ட இந்த மாடல், ஹைட்ராலிக் - கப்லிங்கை பயன்படுத்தி காரின் வேகத்தை சாதாரண நிலையில் இருந்து அதிவேகம் வரை கட்டுப்படுத்தும்.
Trending On Drivespark:

ஹைப்பர் மாடலான ரீஜெரா காரில் மொத்தம் 80 பதிப்புகளை மட்டுமே கோனிக்ஸ்யெக் வெளியிடுகிறது. நமக்கு கிடைத்திருக்கும் தகவலின் படி அனைத்து கார்களும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

கோனிக்ஸ்யெக் ரீஜெரா கார் அதிவேக திறனை மட்டும் பெற்றிருக்காமல், கார்பன் - நாரிழையில் கட்டமைக்கப்பட்டுள்ளதால் மிகவும் பாதுகாப்பான காராகவும் இருக்கும்.


Click it and Unblock the Notifications








