கொல்கத்தாவில் தரையிறங்கிய ராட்சத அளவுள்ள விமானம்.. சைஸ பாத்தா 2-3 விமானத்தையே உள்ள நுழைச்சிடலாம் போலையே!

உலகின் மிகப் பெரிய விமானமாக ஏர்பஸ் பெலுகா (Airbus Beluga) கருதப்படுகின்றது. இது பல சீரிஸ்களில் தயாரிக்கப்பட்டு வருகின்றது. அதில் ஏர்பஸ் பெலுகா எக்ஸ்எல் (Beluga XL) சீரிஸும் ஒன்றாகும். இதுவே ஏர்பஸ் பெலுகா சீரிஸில் இருப்பதிலேயே மிகப் பெரிய அளவுக் கொண்டதாகும். இதுமட்டுமில்லைங்க, பெலுகா எஸ்டி-இன் அப்கிரேட் செய்யப்பட்ட மற்றும் பெரிய உருவம் கொண்டதாகவும் ஏர்பஸ் பெலுகா எக்ஸ்எல் காட்சியளிக்கின்றது. இந்த விமானமே கெல்கத்தா விமான நிலையத்தில் சமீபத்தில் தரையிறங்கி இருக்கின்றது. இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும்.

இந்த விமானம் கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்குவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னதாக பெலுகா எக்ஸ்எல் வேரியண்டின் முந்தைய வெர்ஷனும் இந்த விமான நிலையத்திற்கு வந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே புதிய வெர்ஷனான பெலுகா எக்ஸ்எல்-ம் கொல்கத்தா விமான நிலையத்திற்கு முதல் முறயாக வந்திருக்கின்றது.

Kolkata airport welcomes airbus beluga xl first time

இந்த விமானம் கடந்த செவ்வாய்கிழமை இரவு 10.43 மணி அளவிலேயே கொல்கத்தா விமான நிலையம் வந்து சேர்ந்திருக்கின்றது. பஹ்ரைன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்தே அது இங்கு வந்திருக்கின்றது. நீண்ட தூர பயணம் மேற்கொண்டு இந்தியா வந்த இந்த விமானத்திற்கு விமான நிலையத்தில் வாட்டர் சல்யூட் அடிக்கப்பட்டது.

மிக பிரமாண்டமான தோற்றம் கொண்ட இந்த விமானத்தில் பெரிய பெரிய கன்டெய்னர்களை ஏற்றிச் செல்ல முடியும். விமானங்களுக்கான முக்கிய பாகங்கள் போன்றவற்றையும் இந்த விமானத்தால் ஏற்றிச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய விமானத்தையே கொல்கத்தாவில் தரையிறக்கி சாதனைப்படைத்திருக்கின்றார். கொல்கத்தாவில் கிரீவ் ரெஸ்ட், எஃப்டிடிஎல் மற்றும் எரிபொருள் நிரப்பும் பொருட்டே தரையிறக்கம் செய்யப்பட்டு இருக்கின்றது.

Kolkata airport welcomes airbus beluga xl water salute

மேலும், கிழக்கு இந்தியாவில் இந்த விமானத்தை தரையிறக்குவதற்கான வசதி கொல்கத்தாவில் மட்டுமே இருப்பதால்தான் அங்கு தற்போது ஏர்பஸ் பெலுகா எக்ஸ்எல் தரையிறக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்கத்தாவில் தரையிறங்கி இருப்பது டூலூஸ்-இல் இருக்கும் ஏர்பஸ் ஃபேக்டரிக்கு சொந்தமானது ஆகும். இது விமானத்திற்கான முக்கிய பாகங்களை ஏற்றிக் கொண்டு சீனாவின் டையன்ஜின்-க்கு சென்றுக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

இங்கு ஏர்பஸ்-க்கு சொந்தமான மற்றுமொரு யூனிட் ஃபேக்டரி செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே சிறிய ஓய்வு இடைவெளியை எடுத்துக் கொள்ளும் விதமாக இந்த விமானம் கொல்கத்தாவில் தரையிறங்கி இருக்கின்றது. இந்த பிரமாண்டமான விமானத்திற்கு கடலில் வாழும் திமிங்கலத்தைப் போன்ற உருவம் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதனாலேயே இந்த விமானத்தை விமான ஆர்வலர்கள் வானில் பக்கும் திமிங்கலம் என்கின்றனர். திமிங்கலத்தைப் போலவே மிக மக பெரிய உடல் பகுதியை இந்த விமானம் கொண்டிருக்கின்றது. இதன் ஒட்டுமொத்த நீளம் 63.10 மீட்டர் ஆகும். அதாவது, 207 அடி நீளத்தையே பெலுகா எக்ஸ்எல் கொண்டிருக்கின்றது.

இதன் உயரம் 18.9 மீட்டர் ஆகும். இதேபோல், விங் ஸ்பேன் 60.3 மீட்டராகவும் உள்ளது. இதுமட்டுமில்லைங்க, பாரத்தை சுமந்து செல்வதிலும் கைதேர்ந்த விமானமாக ஏர்பஸ் பெலுகா எக்ஸ்எல் இருக்கின்றது. இதனால் 44 டன்களைகூட அசால்டாக ஏற்றிச் செல்ல முடியும். இது முந்தை வெர்ஷன்களைக் காட்டிலும் 30 சதவீதம் அதிக இட வசதி ஆகும். இதேபோல், இதன் மேக்ஸ் ரேஞ்ச் திறன் 4 ஆயிரம் கிமீ ஆகும். இந்த விமானத்தில் ரோல்ஸ் ராய்ஸ் டிரெண்ட் 700 வகை எஞ்சின்களே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏர்பஸ் பெலுகா எக்ஸ்எல் விமானம் பிரத்யேகமாக விமானத்தின் பாகங்கள் மற்றும் மிக அதிக சரக்குகளைக் கையாளும் நோக்கிலேயே தயாரிக்கப்பட்டு இருக்கின்றது. இதுவே விமானிகளின் ஓய்வு மற்றும் எரிபொருள் நிரப்பும் பொருட்டு கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறக்கி இருக்கின்றனர். விரைவில் அது மீண்டும் சீனாவிற்கு பறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 10, 2024, 14:32 [IST]
English summary
Kolkata airport marks historic arrival of airbus beluga xl first time oversized cargo aircraft
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+